ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

இரவு தொழுகை "தராவிஹ்" கடமையா! கடமையில்லையா!!நோன்பு மாதம் வந்துவிட்டால் இரவு தொழுகைக்கு நாம்கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற நல்ல விசயங்களுக்கு கொடுப்பதுயில்லை இரவு தொழுகைக்கு முக்கியத்துவம் அனுமதிக்க பட்டவையா?இல்லையா? நினைத்தல் வேதனையான உள்ளது நாம் ஏன் இன்னும் அறியாமையில் இருந்து கொண்டுள்ளோம்.

நாம் அனைவரும் எதற்காக தொழுகிறோம்? நன்மைகிடைக்கும் என்ற நோக்கில் தான். ரமலான் மாதம் நாம் செய்யும் ஒரு நன்மைக்கு ஆயிரம் நன்மைகள் என்பது அனைவர்களும் அறிந்த ஒன்றுதான். நாம் செய்யும் தவறுகளால் இறைவன் எப்படி நமக்கு எப்படி நன்மை கிடைக்கும் தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் எப்படி இறைவன் மன்னிப்பான்
சுன்னத் ஜமாஅத்என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் அதுவும் நபிவழிப்படி இல்லை. வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180)
   தொழுகையில் நிதானம்  
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப் பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன. ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர்.(பார்க்க: புகாரி 389, 757, 793, 6251, 6667)
இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத் என்ற பெயரில் மீறப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. இன்றைக்கும் நடைமுறையில் இருபது ரக்அத் தொழுகைக்கு மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட எட்டு ரக்அத்துக்கு நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் வேகமாக தொழுகையை விட்டுவிட்டு இருபது ரக்அத்திலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.
   முழுக் குர்ஆனையும் ஓதுதல்  
ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.
குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.
இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.
அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.
அவர்களின் கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.
இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.
'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 73:20)
எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.
நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்? ஒவ்வொரு நான்கு ரக்அத் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.முதல் நான்கு ரக்அத் முடிவில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,
இரண்டாவது நான்கு ரக்அத் முடிந்த பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், மூன்றாவது நான்கு ரக்அத் முடிவில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், நான்காவது நான்கு ரக்அத்துக்குப் பின் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும் அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர். இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழி முறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.
கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
   ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால்... 
சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
மைமூனா ரளியல்லாஹு அன்ஹா வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். (நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 729)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2012)
இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3316)
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகவே போவதில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
   வீடுகளில் தொழுவதே சிறந்தது  
பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 731)

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

மைதானத்தில்பெருநாள்தொழுகை


நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு தொழுகை நடாத்துகிறார்கள். இது பெரும் தவறாகும்.
ஹப்ஸா பின்த் ஸிரீன் (ரலி) கூறியதாவது :
நாங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாளிலும் தொழும் இடத்திற்கு எங்கள் குமரிப் பெண்கள் செல்வதை தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்தப் பெண்மணி அன்னை உம்மு அதிய்யா (ரலி) அறிவித்த ஹதீஸை பின்வருமாறு கூறினார்கள்.
நாங்கள் யுத்தக்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவர்களாகவும் நோயாளிகளை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அல்லாஹ் வின் தூதரே! எங்கள் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள்தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமாகுமா? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு மேலங்கி இல்லாவிட்டால், அவளது தோழி தனது மேலதிகமான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம் களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள்.
மேலும் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் பெருநாள்தொழுகைக்காக தொழும் திடலுக்கு (மைதானத்திற்கு) வீட்டைவிட்டு புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள் என உம்மு அதிய்யா (ரலி) கூறினார்கள். நூல்: புகாரியில்
பெண்கள் கண்டிப்பாக பெருநாள் தொழுகைக்காக வீட்டைவிட்டு புறப்பட வேண்டும் மாதவிடாய்க்காரியாக இருந்தாலும் கூட கலந்துகொண்டு தொழும் இடத்திலிருந்து விலகியிருந்து அங்கு நடைபெறும் குத்பாவை செவி மடுக்க வேண்டும் என்பது நபி அவர்களின் கட்டளையாக இருக்கும் போது அந்தக் கட்டளையை ஏற்று செயல்பட பெண்கள் முன்வர வேண்டும். பொறுப்பிலுள்ள ஆண்கள் ஏற்பாடுகள் செய்யணே;டும்.
மைதானத்தில் தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யவேண்டும்
சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசல்களில் இருமுறை தொழுகை, குத்பாநடாத்துகிறார்கள். சில சமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடாத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக்கூடியதாக ஏற்பாடுகள் செய்வதே நபிவழியாகும்.
”நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)
உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸிலும் மைதானத்திற்கு தொழுகைக்காக புறப்பட்டுச் செல்லுமாறுதான் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. எனவே பெருநாள்தொழுகைகளை ஏற்பாடு பண்ணக்கூடிய பள்ளி நிர்வாகிகள் அல்லது பேஷ் இமாம்கள் ஊரிலுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு ஒரே நேரத்தில் -ஒழுக்கம் பேணி- தொழுகை நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நபியவர்கள் நடைமுறைபடுத்திக் காட்டிய சுன்னாவாகும். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனியாக நபியவர்கள் ஜமாஅத் நடாத்தியதில்லை. ஒரே நேரத்தில் தொழுகை நடாத்துவதன் மூலம் அன்றைய நாளின் வேலைகளை செய்து முடிப்பதற்கும் ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். நபியவர்கள் காட்டிய முறை நிச்சயமாக இந்த உம்மத்திற்கு நன்மையாகவே இருக்கும்.
ஊரில் மைதானம் இல்லை அல்லது மழை சூராவளி மற்றும் மைதானத்தில் தொழுவிக்கக்கூடிய சூழல் இல்லை போன்ற காரணங்களுக்காக பள்ளியில் தொழுவிழக்கலாம். எந்த தடுங்களும் இல்லாமல் பெண்களை தடுத்து நிறுத்துவது சுன்னாவை புறக்கணிக்கும் செயலாகும்.

நபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)


மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி  அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

      நபி  அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி  நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
    கடமையான ஃபித்ரா
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி  அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நபி  அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
    நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி  அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
    நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி  அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா
    நபி  காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.
    முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி  அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
    ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி  அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
    நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93
    நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.
    வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.
    பெருநாள் தொழுகையின் நேரங்கள்
    ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்
    இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி  தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்
     நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
நபி  அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
    நபி  அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி
    மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி
    தக்பீர்
ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்
    ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.
    பெருநாள் வந்துவிட்டால் நபி அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி
    நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி  அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி
     நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி
திடலில் பெருநாள் தொழுகை
பெரும்பாலும் நபி  அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி
    பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை
ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி
       நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி  அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி
    பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி
        நபி  அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி
    பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை
நபி  அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
         நபி  அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
   முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்
நபி  அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
    ”நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு” என நபி  அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.  புகாரி, திர்மிதீ
    பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்
நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
    வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா
நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
   ஓதிய வசனங்கள் 
நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
    50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பிரார்த்தனை
பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
     பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
    கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி  அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபி அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.
நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக!

ஸகாதுல் ஃபித்ர் ஏன்?எப்படி?ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
எவ்வளவு? எவர்களுக்காக?
‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.
”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.
இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.
உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.
எப்போது? எதற்காக!
‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).
இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.
நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.
நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.
இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).
மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)
எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.
எங்கே? எவர்களுக்கு?
‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
எதை வழங்குவது?
‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.
பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.
இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)
இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.
இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.
இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,
(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.
(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.
(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.
(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.
எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.
ஒரு ஆலோசனை:
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்.

இலக்கு..இறையச்சமே


‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183).
நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் நோன்பை அறிந்திருந்தனர். முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றும் வந்தனர்.
‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்று இந்த வசனம் கூறுகின்றது.
இங்கே ‘உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று’ என்பது, இதே அமைப்பில் கடமையானதைக் குறிப்பதாக இருக்காது. அவர்களுக்கும் கடமையாக இருந்தது; உங்களுக்கும் கடமை என்ற கருத்தைத் தான் தரும். ஏனெனில், இதற்கு முன்னர் ‘மௌன விரதம்’ மேற்கொள்ளும் பழக்கமும் முன்னைய சமூகங்களிடம் இருந்தது என்பதை,
‘ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலினால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்’ என்று கூறும்.
(19:26) என்ற வசனம் உணர்த்துகின்றது.
இவ்வாறே, நோன்பு நோற்பவர்கள் ‘ஸஹர்’ உணவு உண்பது அவசியமாகும். ஆனால், அவர்களுக்கு ‘ஸஹர்’ விதிக்கப் பட்டிருக்கவில்லை. இதை ‘நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள்; ஏனெனில், ஸஹர் உணவு உண்பது எமக்கும் யூதர்களுக்கு மிடையில் உள்ள வேறுபாடாகும்’ என ஹதீஸ் கூறுகின்றது.
எனவே, எமக்குக் கடமையாக்கப்பட்ட அதே அமைப்பில் அவர்களுக்குக் கடமையாக் கப்பட்டிருக்கவில்லை என்பது புரிகிறது! எனவே, கடமை என்ற அம்சத்தில் அவர்கள் போன்றே உங்கள் மீதும் கடமை. ஆனால், அதை நிறை வேற்றும் ‘ஷரீஅத்’ வழிமுறை மாறுபட்டதாக இருக்கலாம் என்பதை இவ்வசனம் உணர்த்து கின்றது.
நோன்பு விதியாக்கப்பட்டதன் அடிப் படை இலக்குப் பற்றி இவ்வசனம் குறிப்பிடும் போது, ‘நீங்கள் பயபக்திடையுவர்களாகலாம்’ எனக் குறிப்பிடுகின்றது.
நோன்பு நோற்பவர்களிடம் ‘தக்வா’ என்ற இறையச்ச உணர்வு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும் என இவ்வசனம் கூறுகின்றது!
‘தக்வா’ என்றால் அல்லாஹ்வின் ஏவல்களை முடிந்தவரை எடுத்து நடத்தல், அவன் விலக்கியவற்றைவிட்டும் முற்றுமுழுதாக விலகிக்கொள்ளுதல் என்ற பக்குவத்தைக் குறிக்கும். இந்தப் பக்குவத்திற்கும் நோன்புக்கு மிடையில் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நோன்பு என்பது உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றை ‘சுபஹ்’ முதல் ‘மஃரிப்’ வரை அல்லாஹ்வுக்காக தவிர்ந்திருப்பதைக் குறிக்கும். இந்த செயல்பாடுகள் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவைகளே! அதேவேளை, மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவையும் கூட! அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரம் இவற்றைத் தவிர்த்துக்கொள்பவன், அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகிக்கொள் ளும் பக்குவத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமல்லவா?
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்வதற்காக சுமார் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல் சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்றான்! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை இதன் மூலம் பெறலாமல்லவா?
நோன்பு நோற்பவர் தனித்திருந்தாலும், பகிரங்கமாக இருந்தாலும், பசியும் தாகமும் வாட்டினாலும் இரகசியமாகக் கூட எதையும் உண்பதில்லை. ‘அல்லாஹ் பார்த்துக்கொண்டி ருக்கின்றான்’ என்ற உணர்வுதான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்த உணர்வு அதிகரித்தால் அவன் தவறுகளிலிருந்து விலகி வாழும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?
நோன்பாளி ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து உண்கிறான். இது அவனது பழக்கவழக்கங்க ளுக்கும், உலக நடைமுறைக்கும் முரண்பட்ட நடவடிக்கையாகும். அதே வேளை, மக்கள் அனைவரும் உண்ணும் நேரத்தில் உணவைத் தவிர்த்து நடக்கின்றான். இது வித்தியாசமான நடைமுறையாகும். இப்படி பயிற்சி பெறும் ஒரு நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளை தனக்குச் சிரமமாக இருந்தாலும், தனது பழக்கவழக்கங்கள், நடைமுறைகளுக்கு முரண்பட்டதாக இருந் தாலும் நான் அதைச் செய்வேன்! அதற்காக சிரமமெடுப்பேன்! என்ற பக்குவத்தை வழங்குமல்லவா?
இது தான் நோன்பின் இலக்காகும். நோன்பாளி உண்ணல், பருகல், உடல் உறவில் ஈடுபடல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வதுதான் அடிப்படைக் கடமையாகும். ஆனால், இவற்றைத் தவிர்ப்பதுடன் கெட்ட நடத்தைகள், தேவையற்ற செயற்பாடுகள் என்பவற்றையும் அவன் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உண்மையான நோன்பு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
‘எவர் பொய் பேசுவதையும், அதனடிப்படை யில் செயற்படுவதையும் விட்டுவிடவில் லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
இந்நபிமொழி வெறுமனே பசித்திருப் பதும், தாகித்திருப்பதும் நோன்பின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.
எனவே, பக்குவமற்ற விதத்தில் நோன்பு நோற்பவர்கள் வெறுமனே பசித்திருப்பவர்களே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
‘நோன்பாளி பிற மனிதர்களுடன் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால், அவர் வீண் பேச்சுக்களையும், கெட்ட நடத்தைகளையும் தவிர்ந்துகொள்ளட்டும். எவரேனும் அவருடன் சண்டைசெய்ய முற்பட்டால், ‘நான் நோன்பாளி’ எனக்கூறி, (பொறுமை காத்து)க்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே, எம்மிடம் பயபக்தியை ஏற்படுத் தும் வண்ணம் நோன்பை நோற்று வீணான நடத்தைகள், சர்ச்சைகளைத் தவிர்த்து உரிய முறையில் கடைபிடித்து உயரிய இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிப்போமாக

ரமழானுக்குப் பின் நாம்..ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்:
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)
ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.
உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (41:30).
இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள் அல்லாஹ்விற்க்கு கட்டுபடுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள். எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.
உபரியான நோன்புகளின் சிறப்பும் அதன் நன்மைகளும்
‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்
இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.
1. பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2. ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள் இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலெமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்:அஹ்மத், முஸ்லிம்
என் நண்பர் முஹம்மது(ஸல்)அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்
1. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரழி), நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி
அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.
முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்: முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு. அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) நூல்:முஸ்லிம்.
நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), நூல்:திர்மிதீ
ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றறுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்
ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.
‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),நூல்: புகாரி,முஸ்லிம்
ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.
இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.
‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு,சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),நூல்:முஸ்லிம்
(ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2, மஃரிபிற்கு பின் 2, இஷா விற்கு பின் 2)

குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.
சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(16:97)
”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”(2:127)
யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும்,அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! ஈமான் நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)


இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும்.குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவைகளை ஒரு முஸ்லிமும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், வாசகர்களுக்கு இதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 குற்றப்பரிகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1. பெரும்பாவங்களுக்காக இஸ்லாம் குறிப்பிட்டுக்கூறிய குற்றப்பரிகாரம்.
2. சில வணக்கங்களை செய்வதால், நாம் செய்த சிறுபாவங்களை போக்கும் பரிகாரம்.
 பெரும்பாவங்களுக்கான குற்றப் பரிகாரங்கள்
1. ரமளான் மாத நோன்பை நோற்ற நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
ரமளான் நோன்பை நோற்ற நிலையில் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் பின்வரும் பரிகாரங்களில் ஒன்றை முறைப்படி கொடுக்க வேண்டும்.
அ. ஒரு அடிமையை உரிமை இட வேண்டும், அதற்கு முடியாவிட்டால்.
ஆ. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியா விட்டால்
இ. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோருங்கள் என்றார்கள், அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றேன், அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளியுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன், உட்காரு என்றார்கள் அவரும் உட்கார்ந்து விட்டார். அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்கும் போதே அரக் என்று அழைக்கப்படும் (பேரீத்தம்பழ) கூடை (நபி – ஸல் – அவர்களிடம்) கொண்டுவரப்பட்டது, இதைக் கொண்டு தர்மம் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை உண்மையை கொண்டு அனுப்பியவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக, மதீனாவின் இரு மலைகளுக்கு மத்தியில் எங்களை விட மிகத்தேவையுள்ளவர்கள் இல்லை என்றார். இக்கூடையை எடுத்துக் கொண்டு உமது குடுப்பத்துக்கு உணவளியும் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். (இப்னு மாஜா)
இன்னும் ஒரு அறிவிப்பில்: நபி(ஸல்) அவர்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்.
2. மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
மனைவி மாதவிடாய் காலமாக இருக்கும் போது உடல் உறவு கொள்வது பெரும் பாவமாகும். அப்படி ஈடுபட்டவர், பின்வரும் பரிகாரத்தை வழங்க வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் தன் மனைவியுடன் உடல் உறவு கொண்டவர் ஒரு தங்கக் காசு அல்லது அரை தங்கக் காசு தர்மமாக கொடுக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
 3. சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரம்
சத்தியத்தை முறித்தவர் பின்வரும் மூன்று பரிகாரங்களில் விரும்பிய ஒன்றை நிறை வேற்ற வேண்டும்.
 அ. பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது
ஆ. பத்து ஏழைகளுக்கு உடை வாங்கி கொடுப்பது, அல்லது
இ. ஒரு அடிமையை உரிமை விடுவது.
குறிப்பு: இம்மூன்றில் ஒன்றையாவது ஒருவருக்கு நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது; உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். 5:89
 யாராவது ஒருவர், நான் நல்ல காரியத்தை செய்யமாட்டேன் என சத்தியம் செய்தால், அவர் சத்தியத்திற்குரிய பரிகாரத்தை செய்துவிட்டு அந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யாராவது ஒருவர் சத்தியம் செய்து அதைவிட சிறந்த ஒன்றை கண்டால், அவரின் சத்தியத்திற்கு பரிகாரம் செய்துவிட்டு (அந்த நல்ல காரியத்தை) செய்யட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 இன்னும் ஒரு அறிவிப்பில்: அக்காரியத்தை செய்யட்டும் இன்னும் தனது சத்தியத்திற்கு பரிகாரமும் செய்யட்டும். (முஸ்லிம்)
 4. நேர்ச்சைக்குரிய பரிகாரம்
யாராவது ஒருவர் குறிப்பிடாத நேர்ச்சை செய்தால், அல்லது நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவர்கள் சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரத்தை வழங்க வேண்டும். பின்வரும் ஹதீஸ் அதை தெளிவு படுத்துகின்றது.
 யாராவது ஒருவர் பெயர் குறிப்பிடாத நேர்ச்சை செய்தால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். யார் தன் சக்திக்குட்பட்ட நேர்ச்சை செய்கின்றாரோ அவர் அதை நிறைவேற்றட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 5. கொலை செய்தவனுக்குரிய பரிகாரம்
கொலை இரண்டு வகைப்படும்.
1. வேண்டுமென்று செய்யும் கொலை.
2. தெரியாமல் நடக்கும் கொலை.
1. வேண்டுமென்று கொலை செய்தவனுக்குரிய தண்டனை
வேண்டுமென்று கொலை நடந்திருந்தால், கொலை செய்தவனை கொல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் உரிமையாளர்கள் கொலை செய்தவனை மன்னித்து நஷ்ட ஈட்டுத்தொகையை வேண்டினால், அதை அவன் வழங்க வேண்டும்.
அ. கிஸாஸ் (கொலைக்கு கொலை)
ஆ. அல்லது கொலை செய்யப்பட்டவரின் பொறுப்புதாரிகள், கிஸாஸை மன்னித்து, கொலைக்கான நஷ்ட ஈட்டுத்தொகையை கேட்டால், அதை அவர் வழங்க வேண்டும்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன் அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்டயீட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்;. ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்கு கடுமையான வேதனையுண்டு. 2:178
வேண்டுமென்று கொலை செய்தவனுக்கு மறுமையில் கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கொடுமையானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
 எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். 4:93
2. கொலை தவறுதலாக நடந்திருந்தால், பின்வரும் பரிகாரத்தை முறைப்படி கொடுக்க வேண்டும்.
 அ. கொலை செய்யப்பட்டவர் முஃமினாக இருந்தால் ஒரு அடிமையை உரிமை இடவேண்டும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
 ஆ. கொல்லப்பட்டவன் கொலை செய்தவனின் பகை இனத்தைச் சார்ந்த முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும்.
இ. கொலை செய்யப்பட்டவன், கொலை செய்தவனின் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்.
ஈ. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல, உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் – அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய. கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை, இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் – அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான். 4:92
6. ளிஹார் செய்தவருக்குரிய பரிகாரம்
அறியாமை காலத்தில் தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார் என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று கூறினால், அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என் தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம் என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். நம்மில் யாராவது அப்படி கூறினால், அது தலாக்காக கணக்கிடப்பபடமாட்டாது, ஆனால் அவ்வாறு கூறியவர் அதற்குரிய பரிகாரத்தை செலுத்தாத வரை அந்த மனைவியிடம் உடல் உறவு கொள்வது ஹராமாகும்.
 பின்வரும் பரிகாரங்களை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்:
1. அடிமையை உரிமை இடுதல், அதற்கு முடியாதவர்
2. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாதவர்
3. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. 58:3,4
 2. சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரங்கள்
1. ஐவேளைத் தொழுகை
பெரும் பாவத்தை தவிர்ந்து கொண்ட எந்த ஒரு முஸ்லிமாவது பர்ளான தொழுகைக்காக நல்ல முறையில் ஒழு செய்து அத்தொழுகையை நல்ல முறையில் தொழுதால் அதற்கு முந்திய பாவங்களுக்கு அது பரிகாரமாகும், இது காலம் முழுவதுமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)
 2. ஜும்ஆத் தொழுகை
யார் வெள்ளிக் கிழமை குளித்து, பல் துலக்கி, அவரிடத்திலுள்ள மணத்திரவியத்தை பூசி, அவருடைய ஆடையில் நல்லதை அணிந்து, பள்ளிக்கு வந்து மனிதர்களின் பிடரியை மடக்கிகொண்டு செல்லாமல் அவருக்கு முடிந்த அளவு (சுன்னத்து) தொழுது, இமாம் (குத்பா பிரசங்கத்திற்காக) வெளியானதிலிருந்து(ஜும்ஆ) தொழுகையை தொழும் வரை வாய்மூடி (யாரிடமும் பேசாமல்) இருந்தால் இந்த ஜும்ஆவிற்கும் அதற்கு முந்திய ஜும்ஆவிற்கும் மத்தியிலுள்ள பாவங்களுக்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)
 பெரும் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொண்டால், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஒரு ஜும்ஆவிலிருந்து இன்னுமொரு ஜும்ஆ (அவைகளுக்கு மத்தியில் நிகழும் சிறு தவறுகளுக்கு) பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 3. உம்ரா செய்தல்
ஒரு உம்ரா இன்னும் ஒரு உம்ராவுக்கு மத்தியிலுள்ள (சிறு பாவங்களுக்கு) பரிகாரமாகும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்குரிய கூலி சுவர்க்கத்தை தவிர வேறில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 4. அரஃபா நோன்பு இரு வருட பாவங்களுக்கு பரிகாரமாகும்
அரஃபா நாளின் நோன்பை நோற்பது முன் சென்ற பின்வரும் இரு வருடங்களின் பாவங்களுக்கு பரிகாரமாகும், ஆஷுரா நாளின் நோன்பை நோற்பது ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல்பைஹகி)
 5. ஆஷுரா நோன்பு ஒரு வருட பாவங்களுக்கு பரிகாரமாகும்
அரஃபா நாளின் நோன்பை நோற்பது முன் சென்ற பின்வரும் இரு வருடங்களின் பாவங்களுக்க பரிகாரமாகும், ஆஷுரா நாளின் நோன்பை நோற்பது ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல்பைஹகி)
 6. சபையில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரம்
நபி(ஸல்) அவர்கள், அவர்களின் கடைசி காலத்தில் ஒரு சபையிலிருந்து எழுந்தால்,

 سُبْحَانَكَ اللهم وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا أنت أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

(சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த அஸ்தக்பிருக வஅதூபு இலைக)  என்று ஓதுவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன்பு கூறாத வார்த்தையை இப்போது கூறுகின்றீர்களே என (நபித்தோழர்கள்) கேட்டார்கள். இது சபையில் நடந்த (தவறுகளுக்கு) பரிகாரம் என்றார்கள். (சுனனுத்தாரமி