வியாழன், செப்டம்பர் 27, 2012

Innocence of Muslims எனும் திரைப்படத்தின் பின்னணி


நபிகள் நாயகத்தை கேவலப்படுத்தியInnocence of Muslims எனும் திரைப்படத்தின் பின்னணி  பற்றி ஓர் அலசல்


M.C.M ஸ‍ஹ்றான்
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த சாம் பாசைல் என்ற யூதன் நபிகள் நாயகத்தை தரக்குறைவாகக் காட்சிப்படுத்திInnocence of Muslims என்ற‌ திரைப்படத்தைத் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டான். இவன் இஸ்ரேலிய யூதனாகத் திகழுவதாலும் இவனது திரைப்படம் மாமனிதர் நபிகள் நாயகத்தை கேவலப்படுத்துவதாலும் யூத அமைப்புக்களே முன்வந்து இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் பரப்பின. குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறேன் எனக் கூறி மீடியாக்களில் வலம் வந்த Terry Jones என்ற கிறிஸ்தவ பாதிரியாரும் இதில் பங்கெடுத்துக் கொண்டான்.PressTV யின் கருத்துப்படி இத்திரைப்படத்தை தயாரிப்பதில் முன்னெனியாக நின்று உழைத்தவர்கள் அமெரிக்காவின் யூத முக்கியஸ்தர்கள் என்ற கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. அமெரிக்க ஊடகமான dailymail லின் கூற்றுப்படி சுமார் ஐந்து மில்லியன் டொலர் செலவிலேயே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான நன்கொடைகளை நூற்றுக்கும் மேற்பட்ட யூத அமைப்புக்கள் கொடுத்து தமது யூத வக்கிர விசுவாசத்தை வெளிப்படுத்தி உள்ளன. இத்திரைப்படத்தின் ஆங்கில முன்னோட்டக் காட்சிகளை எகிப்தைச் சேர்ந்த கோப்டிடக் கிறிஸ்தவர் அறபு மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார். இதனால் உலகின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் கொதித்துப் போயுள்ளனர். லிபியா, எகிப்து, துணூசியா, சூடான், இந்தியா, இலங்கை போன்ற பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் நடாத்தி வருகின்றனர்.
இத்திரைப்படத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கின்றார்கள்?
  • இத்திரைப்படத்தில் நபிகள் நாயகத்தின் வேடத்தில் ஒருவனை நடிக்க வைத்து நபிகள் நாயகத்திற்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. (நபிகள் நாயகத்தின் நேர்முக வர்ணனைகள் ‍ஹதீஸ் நூற்களில் பதிவாகியிருந்தும் முஸ்லிம்கள் அல்லா‍ஹ்வின் தூதரை ஓவியமாக வரைவதில்லை)
  • இத்திரைப்படத்தில் அல்லா‍ஹ்வின் தூதரை ஓரினச் சேர்க்கையாளனாக அந்த யூதன் அடையாளப்படுத்தி உள்ளான்.
  • இத்திரைப்படத்தில் நபி (ஸல்) அவர்களை பாலியல் வெறியராக இவன் காட்சிப்படுத்தி உள்ளான்.
  • இத்திரைப்படத்தில் அல்லா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுடன் இயற்கைக்கு மாற்றமான முறையில் உடல் உறவு கொள்வது போன்று ஆங்காங்கே காட்சிகளை திட்டமிட்டு அமைத்துள்ளான்.
  • இத்திரைப்படத்தில் இடைக்கிடை நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளான்.
  • படத்தின் பெரும்பான்மையான இடங்களில் முஸ்லிம்களை மத வெறி பிடித்த தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தியும் யூத இனைத்தை மேன்மைப்படுத்தியும் வசனங்களை அமைத்துள்ளான்.
நபிகள் நாயகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகத் தயாரிக்கப்பட்ட இந்த‌ வக்கிரப் படத்தை தடைசெய்யக் கோரியும் இவ்வாறான இழி வேலை செய்த சாம் பாசைல் என்ற யூதனை கைது செய்யக் கோரியுமே முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நியாய சிந்தனை உள்ள, நல்லுள்ளம் படைத்த எவரும் ஏற்க முடியாத வகையிலேயே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படிச் செய்கின்றார்கள்?
இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் அதன் போதனைகளை அலசி ஆராயுமாறு மனித குலத்திற்குச் சொல்லக் கூடிய ஒரே மார்க்கம். இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் என்ற நிலை எவ்வகையிலும் இல்லை. இஸ்லாத்தை ஏற்காதவர்களை ஆயுத முனையில் மிரட்டுமாறோ மதம் மாறியவர்களை கொலை செய்யுமாறோ இஸ்லாம் கூறவில்லை. தமது மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத அனைத்து மத மக்களையும் அழைத்து "இஸ்லாத்தைப் பற்றி எந்த சந்தேகமென்றாலும் கேளுங்கள்! அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் பதில் அளிக்கிறோம்" என்று சொல்லக் கூடிய மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்தைத் தவிர எந்த மதத்திலும் கிடையாது. பொதுவாக இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் அதன் போதகரான நபிகள் நாயகத்தின் தூய வாழ்வையும் விமர்சிக்க வார்த்தையில்லாததால் தங்களது காழ்ப்புணர்வுகளையும் கீழ்த்தரமான சிந்தனைகளையும் கொட்டித் தீர்க்க நெடுந்திரைப்படம், கார்ட்டூன், குருந்திரைப்படம் போன்றவற்றை திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் "சினிமா" என்பது பொது ஜனங்களை வெகுவாகக் கவருகின்ற படியால் அவ்வப்போது நபிகள் நாயகத்தை அசிங்க அசிங்கமாக சித்தரித்து திரையில் விட்டு விடுகின்றனர். இவர்களின் கையாலாகாத இந்த வழிமுறை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. 15ம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டு இஸ்லாமியப் பேரரசை வீழ்த்துவதற்கு அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார்கள் அல்லா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்துவதையே ஆயுதமாக பயன்படுத்தினார்கள். பின்னர் பலஸ்தீன் பூமியையும் அங்குள்ள பைத்தில் மக்திஸையும் மையப்படுத்தி போப்பாண்டவர் ஏர்பன் தலைமையில் துவக்கப்பட்டு சுமார் 300 ஆண்டுகளாக நிடித்த "சிலுவை யுத்தங்களிலும்" நபிகள் நாயகத்தை இலக்கிய வடிவில் கொச்சைப்படுத்தினர். 2006ம் ஆண்டு டென்மார்க்கின் பிரபல பத்திரிகையான"பொலிடிக்கனில்" "கூர்ட் வெஸ்கார்டு" என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை தீவிரவாதி போன்று கார்ட்டூன் வரைந்து சர்வதேச முஸ்லிம்களின் மார்க்க உணர்வை காயப்படுத்தினான். திரைப்பட‌ வாயிலாக இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் நடைபெறவில்லை. தமிழ் மொழியிலும் இந்நிலைதான் நீடித்து வருகின்றது. 1995ம் ஆண்டுமணிரத்னம் எனும் இந்து மத வெறியனால் தயாரிக்கப்பட்ட "பம்பாய்" திரைப்படமும் "முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும்" அமைந்திருந்தது. முஸ்லிம்களின் மார்க்க உணர்வை சீண்டிய இத்திரைப்படத்திற்காக மணிரத்னத்திற்கு "தேசிய திரைப்பட விருதும்" வழங்கப்பட்டது! 18ம் திகதி செப்டம்பர் மாதம் 2009ம் ஆண்டு "சக்ரி டோலட்டி" என்ற இஸ்லாத்தின் எதிரியால் "உன்னைப் போல் ஒருவன்" எனும் பெயரில் உருவாக்கப்பட்ட திரைப்படமும் "முஸ்லிம்களை ஈவிரக்கமற்ற தீவிரவாதிகளாக" வெளிக்காட்டியது. ஜூன் மாதம் 17ம் திகதி 2011ம் ஆண்டு "பாலா" என்ற இந்து மத வெறியனால் இயக்கப்பட்ட"அவன் இவன்" என்ற திரைப்படமும் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதில் "இஸ்லாமிய மார்க்கக் கிரிகையான குர்பான் கொடுப்பதை" பாலா என்ற அயோக்கியன் கடுமையாகக் கொச்சைப்படுத்தி இருந்தான்.
ஒக்டோபர் மாதம் 26ம் திகதி 2011 அன்று "ஜெயம் ராஜா" என்ற இந்துத் தீவிரவாதியால் வெளிவந்த "வேலாயுதம்" திரைப்படமும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே போன்று 2011ம் ஆண்டு "க்றிஷ்" என்ற இந்துத்துவா இயக்குனரால் "வானம்" எனும் திரைப்படம் வெளியிடப்பட்டு முஸ்லிம்களை தீவிரவாதியாக அடையாளப்படுத்தியது. இது போக அண்மைக்காலமாக அரசியலில் பிரவேசித்த விஜயகாந்த் என்ற போதை ஆசாமி நடித்த அனைத்துத் திரைப்படங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கை கடைபிடித்தே வந்துள்ளான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் காட்டாமல் இவனது எப்படமும் இல்லை எனும் அளவிற்கு இஸ்லாமிய விரோதப் போக்குள்ளவன் என்பது அனைவரும் அறிந்த விடயமே! தமிழ் திரை உலகில் பிரபல கூத்தாடிஅர்ஜூன் என்ற நடிகனும் இதில் விதி விலக்குப் பெற்றவனல்ல. இந்தியத் திரை உலகில் தான் இந்நிலை என்றால் இலங்கையிலும் சில காவிப் பயங்கரவாதிகள் "சினிமா" எனும் ஆயுதத்தின் ஊடாக அல்லா‍ஹ்வின் தூதரையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தி வருகின்றனர். அண்மையில் நம் நாட்டில் பெளத்த மதத்தைப் பின்பற்றும் "இராஜ்" என்பவன் வெளியிட்டுள்ள "சித்தி மனீலா" என்ற பாடலும் முஸ்லிம் பெண்களை மிகத் தரக்குறைவாகக் காட்சிப்படுத்தியிருந்தது. ஆக மொத்தத்தில் சினிமா எனும் ஆயுதத்தை வைத்து இஸ்லாத்தின் எதிர்கள் சிற்றின்பன் அடைகின்றனர். அந்த வரிசையிலேயே "இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்" திரைப்படம் இஸ்ரேலிய யூதனால் வெளியிடப்பட்டது.
‍ஹிலாரியின் கீழ்த்தரமான கருத்து

கடந்த 13.09.2012 அன்று வாஷிங்டனில் Morocco  United States எனும் உரையாடல் நிகழ்ச்சியில் தோன்றிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் ‍ஹிலாரி கிளிண்டன் எனும் சர்ச்சைக்குரிய Innocence of Muslims திரைப்படம் பற்றி கருத்து வெளியிடுகையில் "நாடு முழுவதும் முஸ்லிம்களின் போராட்டத்திற்கு காரணமான வீடியோவை அமெரிக்க அரசு ஒன்றும் செய்ய முடியாது. தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் அதை நீக்குவது சாத்தியமல்ல. அப்படியே சாத்தியம் என்றாலும் தனிப்பட்ட நபரின் கருத்துரிமையை பரிப்பது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது. தனிப்பட்ட நபர் தனது கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்க முடியாது. நான் இவ்வாறு கூறியதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லைஎன்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து இப்படத்தை தயாரித்த‌ அயோக்கியனை அமெரிக்கா எவ்வகையிலும் தண்டிக்காது என்பது மட்டும் தெளிவாகின்றது. "இந்தக் காலத்தில் அதை நீக்குவது சாத்தியமல்ல" என்று ‍ஹிலாரி கூறியிருப்பதே வேடிக்கையிலும் பெரும் வேடிக்கையாகும். ஹிலாரியின் துவேஷப் பேட்டியைக் காண‌ http://www.youtube.com/watch?v=_3aPjwmVzWY&;feature=player_embedded#!
கருத்துரிமை எனும் பெயரில் கதை கட்டினால் கலவரம் வெடிக்கும்!
இஸ்ரேலிய யூதன் சாம் பாசைல் தயாரித்த இந்த மொக்கைப் படத்தினால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் சர்வதேச ரீதியில் அமெரிக்கத் தூதரகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லிபிய நாட்டிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ் ஸ்டீவன்ஸ்மற்றும் ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சேவை தகவல் முகாமை அலுவலர் சீன்ஸ்மித், அமெரிக்க தனியார் பாதுகாப்பு பணியாளர்கிளென் டொகேர்டி, முன்னால் ஐக்கிய அமெரிக்க நேவி சீல் படைவீரர் டிரோன் வூட்ஸ் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதும் பின்னர் கொல்லப்பட்டதும் இந்த திரைப்படத்தால் தான். இத்திரைப்படத்தினால் ஆத்திரமுற்ற எகிப்து முஸ்லிம்கள் கடந்த 11.09.2012 அன்று அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை செய்தனர். அதே போன்று கடந்த 13.09.2012 அன்று யமன் நாட்டின் தலைநகர் ஸன்ஆவிலும் அமெரிக்க தூதரகத்தின் முன் உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சூடானின் தலைநகர் கர்த்தூமிலும் இத்திரைப்படத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே தினம் துனீசியாவின் தலைநகர் தூனிஸிலும் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இது போக ப‍ஹ்ரைன், லெபனான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,இந்தியா, இலங்கை போன்ற பல நாடுகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தம் உயிரிலும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் திருத் தூதரை கேவலப்படுத்திய கழிசடையை கண்டிக்கத் துப்பில்லாத பராக் ஒபாமா, லிபியாவில் முஸ்லிம்கள் கொதிதெழுந்ததை "மூர்க்கத்தனமானது" என வர்ணித்து இரு கப்பல்களில் கப்பல் படைகளை அனுப்பி உள்ளார்

. "கருத்துச் சுதந்திரம்" எனும் பெயரில் இந்தத் திரைப்படம் தடைசெய்யப்படாமல் விடுபட்டால் பல "ஸ்டீவன்ஸுகளையும் பல தூதரகங்களையும்" அமெரிக்கா தொடர்ந்தும் இழக்க நேரிடும் என்பதே அவதானிகளின் கருத்தாகும். அதே நேரம் ஜெர்மனியில் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் "அது ஏன்?" என‌ யாராவது ஊடகவியலாளர்கள் ஆவணப்படமோ ஆய்வறிக்கைகளோ தயாரிக்க முற்பட்டால் "அது தண்டனைக்குரிய குற்றமாக" அமெரிக்காவால் பார்க்கப்படுவது எந்தக் கருத்துரிமையில் சேரும்? இதுவே இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. தேவையற்ற வகையில் நபிகள் நாயகத்தை கேவலப்படுத்தும் திரைப்படத்தை youtube நீக்க மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்திரைப்படத்தின் ஆலோசகராகச் செயல்பட்ட SATEVE KLEIN என்பவன் இது பற்றி நிரூபர்களுக்கு பேட்டி வழங்கும் போது

"நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் உண்மைய கூறியுள்ளேன்! நான் உண்மையை தான் கூறியுள்ளேன்! தொடர்ந்து உண்மைய சொல்லிக் கொண்டு தான் இருப்பேன்" என உளறியுள்ளான். youtube இதனை நீக்க மறுத்தாலும் மனித நேயமுள்ள ஒவ்வொரு நாடும் இந்தத் திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும். இத்திரைப்படத்தை பற்றி இந்தியா தனது The Times of India பத்திரிகையில்"Worried government moves to block anti-Islam film" எனும் தலைப்பில் தனது நிலைப்பாட்டை பதிவு செய்தது. இது போன்று இலங்கையும் காத்திரமானதோர் கண்டனத்தை வெளியிட முன்வரவேண்டும்.
சாம் பாசைல் போன்றோரின் குரூர எண்ணம் இஸ்லாமிய வளர்ச்சியில் தாக்கம் செலுத்துமா?
இஸ்லாமிய வரலாற்று நெடுகே இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருந்து தான் வந்துள்ளார்கள். அல்லா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் செல்வாக்குள்ள ஆன்மீகத் தலைவராக திகழ்ந்ததை அங்குள்ள யூதர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நபிகள் நாயகத்தின் பொதுவாழ்வில் குறைகாண முடியாத கையேறு நிலையில் அன்றைய யூதர்கள் காணப்பட்டதால் நபியின் துணைவி ஆயிஷா (ரலி) அவர்களை குறிவைத்தனர். அந்த அபலைப் பெண்ணை நோக்கி நாகூசாமல் "விபச்சாரி" என அவதூறு கூறினர். அவர்கள் ப‌ரப்பிய அவதூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாகள். அப்போது அல்லா‍ஹ் "அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு" (24:11) என வசனங்களை அருளினான். இந்த யூதச் சில்லரை இவ்வாறு திரைப்படம் எடுத்ததால் லட்சோபலட்ச மக்களின் உள்ளங்களில் வாழும் அப்பழுக்கற்ற மாமனிதர் நபிகள் நாயகம் கீழ்நிலைக்கு ஆளாகிவிடுவார்களா என்ன? இந்தக் கயவனின் மொக்கைத் திரைப்படத்தைப் பார்வையிடும் மாற்று மத நல்லுள்ளம் படைத்தோர் நபிகள் நாயகத்தின் உண்மை வாழ்வை தேடிப்படிக்காமல் இருக்கப் போவதில்லை. 11.09.2001 அன்று அமெரிக்காவே இரட்டைக் கோபுரத்தை கனக் கச்சிதமாகத் தாக்கி அழித்து விட்டு முஸ்லிம்கள் மீது களங்கத்தை சுமத்தி "சர்வதேச இனச் சுத்திகரிப்பு" செய்த போதும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை தனது சொந்த நாட்டிலேயே தடுக்க முடியவில்லை. இத்திரைப்படப் புரளியிலும் அல்லா‍ஹ் ஆயிரமாயிரம் நன்மைகளை வைத்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக