கடைசிப் பத்தும் & இஃதிகாஃப்


ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புக‌ளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பதன் மூலமாக லைலத்துல் கத்ர் இரவை வழிபாட்டோடு அடைந்து கொள்ள முடியும்! லைலத்துல் கத்ர் இரவை அடைவ தன் மூலம் என்ன நன்மை? ”யார் லைலத்துல் கத்ர் இரவில் இறை நம்பிக்கையோடும் நன் மையை எதிர் பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய தவறுகள் மன்னிக்கப் படுகின்றன. (நூல் : புகாரி 2014 முஸ்லிம் 760) 
நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களும், நபியவர்களின் குடும்பத்தினரும், நபித்தோழர்களும் ஆர்வமுடன் தொடந்து கடைப்பிடித்த  இஃதிகாஃப் - பள்ளியில் தங்கும் சிறப்பான ''சுன்னத்'' மக்களிடையே மறக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2044) 
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2020) 
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!"(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 2025) 
"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.
"இஃதிகாஃப்"இருப்பதுகட்டாயமா?  இதில்இரண்டுவகைஉள்ளது.
 
முதல்வகை,
நன்மையை எதிர்ப்பார்த்து ரமலானில் கடைசி பத்திலோ அல்லது மற்ற மாதங்களின் சில‌ நாட்களிலோ பள்ளியில் தங்குவது
 நபிவழியாகும். இதற்குபலஹதீஸ்கள்ஆதாரமாகஉள்ளன. (அவற்றில்சில:புஹாரி2029,2035,2033)
இது சிறப்பு வாய்ந்த ஒரு வணக்கமாக இருந்தாலும்
 கட்டாயக் கடமை அல்ல.
இரண்டாவதுவகை,
தன்னுடைய‌ தேவை நிறைவேறவேண்டும் என்பதற்காக தொழுகை, நோன்பு, தர்மங்கள் என அனுமதிக்கப்பட்ட வணக்கங்களை நேர்ச்சை செய்துக் கொள்வதுபோல், பள்ளியில் குறிப்பிட்ட நாள் தங்கி (இஃதிகாஃப்) இருப்பதாகநேர்ச்சை செய்வது.இந்தவகை இஃதிகாஃப் நேர்ச்சை செய்தவர்மீதுநிறைவேற்றவேண்டியஒருகடமையாகிவிடுகிறது.
இஸ்லாமிற்கு முந்தைய அறியாமைக் காலத்திலும் இஃதிகாஃப் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன!
இப்னுஉமர்(ரலி­)அவர்கள்அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹரமில் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்சை செய்திருந்தேன்' என்று உமர்(ர­லி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்!' என்றார்கள். (பிறகு) உமர்(ரலி­)ஒருஇரவுஇஃதிகாஃப்இருந்தார்கள்.நூல்:புஹாரி(2042)

ரமலானில்இஃதிகாஃப்இருப்பதின்நோக்கம்
ரமலானில் இருக்கக்கூடிய 'இஃதிகாஃப்' என்பது நபி(ஸல்) அவர்களின் சிறப்பான‌ வழிகாட்டல்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும், ரமலான் அல்லாத மற்ற நாட்களிலும் நடைமுறைப் படுத்திக்காட்டிய 'இஃதிகாஃப்' எனும் இந்த இறைவழிபாடு நம் மக்களிடையே அதிகமாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பெரும்பாலான மக்கள் இதுபற்றிய சிறப்புகளை அறியாமல் இருப்பதால், அதன் மீதுள்ள ஆர்வக் குறைவினால் மிக சொற்பமான மக்கள் மட்டுமே இந்த'இஃதிகாஃப்'என்றவணக்கத்தைமேற்கொள்கிறார்கள்.
ஆனால்ரமலானின்கடைசிப்பத்துநாட்களில் நாம் தேடவேண்டிய, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான‌ 'லைத்துல் கத்ர்' இரவை அடைய வேண்டும் என்பதற்காக இஃதிகாஃப் இருப்போமானால், உலகின் மற்ற தேவைகளிலும் அன்றாட ஈடுபாடுகளிலும் வழக்கம்போல் முக்கியத்துவம் கொடுத்து நாம் செய்யவேண்டிய வணக்கங்களைக் குறைத்து விடாமல் இருக்கவும், அந்த நாட்களில் அதிகமதிகமாக‌ நன்மைகளைச் செய்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அது அமைந்துவிடுகிறது. இந்த நோக்கத்திற்காகதான் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.     ஆதாரம்:புஹாரி(813)
 நபி(ஸல்) அவர்களரமலானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத்தேடுங்கள்!"எனக்கூறுவார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி);நூல்:புஹாரி(2020)
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப்இருந்தனர்!" அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புஹாரி (2026)
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்எனஅபூஹுரைரா(ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள்.                 
                                                     ஆதாரம்:புஹாரி


                     

இஃதிகாஃப்இருப்பதின்ஆரம்பநேர‌ம்
இஃதிகாஃப் இருப்பவர்கள் பெரும்பாலும் 21 வது இரவின் மக்ரிப் தொழுகைக்கு முன் ஆரம்பிக்கின்றனர். ஆனால் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க:  புஹாரி 2027). மேலும் ஃபஜ்ரு தொழுதவுடன் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமானசெய்தியும்உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
                                                 நூல்:முஸ்லிம்(2007)
அப்படியானால் ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்றால், அது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. ஏனெனில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடும் வாய்ப்பில் அந்த 21 ஆம் இரவு தவறிவிடும் வாய்ப்புள்ளதால், 20 ஆம் நாள் ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை துவங்கி இருப்பார்கள் என்று நாம் விளங்குவதே பேணுதலாகவும், இரண்டு ஹதீஸ்களுக்கும் பொருத்தமாகவும் இருக்கும். ஆக, ரமலானில் இஃதிகாஃப் இருக்க விரும்புபவர்கள்
 20 ஆம் நாள் காலை ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்           
இஃதிகாஃபின்முடிவுநேரம்
இஃதிகாஃப் இருப்பவர்கள், ரமலான் மாதத்தின் பிறை 29 ல் அந்த மாதம் முடிந்து ஷவ்வால் பிறை தென்பட்டாலோ அல்லது ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியடைந்த பிறகோ அன்றைய மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஃதிகாஃபை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிவிட‌லாம்.
ஆனால் பெருநாள் தொழுகையை முடித்து விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று சிலர் கூறுவதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் எதுவுமில்லை.
பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?
பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திஆதாரமாகஉள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
                         அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.
நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும்சட்டத்தைநாம்எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப்இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது
பெண்கள் தங்கள் வீட்டிலேயே இஃதிகாஃப் இருக்கலாமா?
பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது. எனவே பெண்களும் இஃதிகாஃப் என்ற இந்த வணக்கத்தைப் பள்ளிவாசலில்தான் நிறைவேற்றவேண்டும். அதேசமயம் அந்நிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனித்து இருக்கக்கூடாது என்பதால், இதைத் தவிர்ப்பதற்காக‌ இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ, பல பெண்கள் சேர்ந்தோ அல்லது அவர்களுக்கு மஹ்ரமான ஆணோ அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பதுதான் நல்ல‌து.பள்ளிவாசல்களில் பெண்கள் இஃதிகாஃப் இருப்பதற்கான‌ வசதிகள் செய்யப்பட்டிருக்குமானால் கணவனின் துணையுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன்தான் அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். மேலும் பல குடும்பங்களின் ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து இஃதிகாஃப் இருக்கும்போது, பெண்கள் பகுதிக்கென‌ தனியாக திரை மறைவுடன் கூடிய வசதிகளை செய்துக் கொள்ளவேண்டும்.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்:புகாரி2033)

      இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். “இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
                      அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)
“நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.
மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாதுஎன்பதைவிளங்கலாம்.
… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)
நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.
இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.
இஃதிகாஃபில்கடைபிடிக்க‌வேண்டியஒழுங்குமுறைகள்
இஃதிகாப்இருப்பவருக்குதடுக்கப்பட்டவையும்அனுமதிக்கப்பட்டவையும்:
1. இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.
"பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்".(அல்குர்ஆன்2:187)
2.தேவையில்லாமல்பள்ளியைவிட்டுவெளியேசெல்லக்கூடாது
ஆயிஷா(ரலி­)அவர்கள்கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை வீட்டி­லிருக்கும் என் பக்கம் (வாருவதற்காக) நீட்டுவார்கள்; நான் வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவைப்பட்டாலே தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
 நூல்:புஹாரி(2029)
இதிலிருந்து
 தேவையில்லாமல்வெளியில்செல்லக்கூடாதுஎன்பதையும் அவசியத்தேவைஏற்பட்டால்மட்டுமே வெளியே சென்று வர‌லாம் என்பதையும் அறியலாம்
3.இஃதிகாஃப்இருப்பவர்களைசந்திப்பதும்பேசுவதும்:
இஃதிகாஃப் இருக்கும்போது (சிலர் நினைப்பதுபோல்) வெளியிலிருந்து வரக்கூடிய மற்றவர்களிடம் பேசுவது கூடாது என்பது தவறானதாகும். தேவையில்லாத/பொழுதுபோக்கான பேச்சுகளைத் தவிர்ந்துக் கொள்ளலாமே தவிர அவசியம் ஏற்படும்போது பேசிக்கொள்வதில் எந்த தவறுமில்லை. மேலும் இஸ்லாம் ஒருபோதும் மௌன விரதத்தை அனுமதித்ததில்லை.
ஸபிய்யா(ரலி­)அவர்கள்கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும் போது அவர்களிடம் நான் சென்று, சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன்(ஹதீஸின்சுருக்கம்
நூல்:புஹாரி(2035)
     இதிலிருந்து அவசியத்தேவை ஏற்பட்டால் மற்றவ‌ர்களுடன் பேசலாம் என்பதையும் இஃதிகாஃப் உள்ளவர்களை சந்திக்கச் செல்வதற்கு மற்றவர்களுக்கு தடையில்லை என்பதையும் நாம் விளங்க முடிகிறது.

 4.இஃதிகாஃப் இருப்பவர் தமது தேவைகளுக்காகப் பள்ளியின் வாசல் வரை செல்லலாமா?
 ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்த போது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், நில்லுங்கள்;இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார் எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன் எனக் கூறினார்கள்.
நாம்கவனிக்கவேண்டியஇன்னும்சிலவிஷயங்கள்:
1. அல்லாஹுதஆலாதனதுதிருமறையில்,
"நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன்5:2)
என்று கூறுவதற்கேற்ப, இஃதிகாஃப் இருக்கக்கூடியவர்களுக்கு தேவையான உதவிகளை மற்றவர்கள் செய்துக் கொடுத்தும் நன்மைகளை நாம் தேடிக் கொள்ளலாம். ஏனெனில் தன் குடும்பங்களை விட்டுவிட்டு இஃதிகாஃப் செல்லக்கூடியவர்களுக்கு நிச்சயம் நிறைய உதவிகள் தேவைப்படும்
.
2. ஆண்கள் இஃதிகாஃப் செல்லும்போது தன் குடும்பத்தை கவனிக்கவேண்டிய அந்த 10 நாட்களுக்குரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்துவிட்டு, அதாவது தன் மனைவி, மக்களுக்குரிய கடமைகளும், தான் செய்யும் பணியோ அல்லது தொழிலோ நஷ்டமடையும் அளவுக்கு பாதிக்காத வகையிலான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு செல்லவேண்டும். அதுபோல் பெண்களும் தன்னுடைய குழந்தைகளும் குடும்பப் பொறுப்புகளும் பாதிக்காத வகையில் யாராவது அவர்களுக்கு உதவி செய்யும்பட்சத்தில்/அதற்கான ஏற்பாடுகள் செய்துக்கொண்ட நிலையில் செல்வதே நல்லது. ஏனெனில்,
அல்லாஹ்வின்தூதர்(ஸல்)அவர்கள்கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார்; அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான்; அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
 பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள்; அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்; அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள்விசாரிக்கப்படுவீர்கள் ஆதாரம்:புகாரி(2554)
எனவே யாருக்கெல்லாம் இத்தகைய முன்னேற்பாடுகளோடு கூடிய இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ, அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம். சிறப்புமிக்க நபிவழியான இந்த வணக்கம் மறக்கடிக்க‌ட்டு விடாமல் இருப்பதற்காக‌ இயன்றவரை நாம் ஒவ்வொருவரும்
 நம் வாழ்நாளில் அதற்காக முயன்று, அதை நிறைவேற்றி, மறுமையில் அளப்பரிய நன்மைகளைப் பெற்றிட வல்ல நாய‌ன் அருள் புரிவானாக!
(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
.
இஃதிகாஃப் இருப்பதாக முடிவு செய்து விட்டுப் பின்னர் அம்முடிவை மாற்றிக் கொள்ளுதல்.
2045 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் நான் (பள்ளியில் இஃதிகாஃப் இருக்க) அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளித்தார்கள். ஹஃப்ஸா (ரலி) என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார். அவ்வாறு செய்தேன். இதைக் கண்ட ஸைனப் (ரலி) ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறு கட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தமது கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஆயிஷா (ரலி),ஹப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோரின் கூடாரங்கள் என்றனர். நபி(ஸல்) அவர்கள், இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறிவிட்டுத் திரும்பி விட்டார்கள். நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். புனிதமிகு இந்த ரமலானிலே செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நாட்களிலும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
நம்மில் அதிகமானோர் அதற்காக நம் ஓய்வு, உறக்கம் கூட மறந்து அல்லாஹ்வுக்காக செய்யவேண்டிய அமல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், இன்னும் சில பேர் இந்த ரமலானில்கூட இறைவழிபாடுகளின் விஷயத்தில் அலட்சியம் செய்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த கூட்ட நெரிசலிலும் நாம் காட்டும் ஆர்வம், அல்லாஹ்வின் இந்த மகத்தான நற்கூலியை அடைவதில் காட்டுவதில்லை.
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்
ஆக‌ ரமலானில் நாம் ஒரு நாள் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லற‌ங்களுக்கு நிகரானதாக இருக்கிறது.
ஆகவே தொழுகையை சரியான முறையில் கடைப்பிடிப்பது, குர்ஆன் ஓதுதல், அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவது, இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பயான் கேட்பதின் மூலமோ, அறிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் நமக்கு பெருக்கித் தருவான் என்ற எண்ணத்தில் மனமுவந்து தாராளமாக தான தர்மங்கள் செய்வது, உங்களைப் போன்ற நோன்பாளிகளுக்கு உங்களால் இயன்றளவு நோன்பு திறக்க கொடுத்து உதவுவது மற்றும் பொதுநல சேவைகள் என மறுமைக்குரிய நற்காரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.மேலும் உலகில் எவ்வளவு பெரிய‌ வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள் முனைய‌ளவும் நிகரானது கிடையாது!
அதுவும் இன்று ஆரம்பமாகும் கடைசிப் பத்தில் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்தஆலா நமக்கு தரக்கூடிய ஓர் உன்னத அன்பளிப்பு 'லைலத்துல் கத்ரு' என்று சொல்லப்படும் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும்! அந்த இரவை அடையக்கூடிய‌ நாளை நாம் இப்போது நெருங்கிவிட்டோம்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,"லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்" என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)      அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மைகளினைப் பெற்றுத் தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் நிச்சயம் நமக்கு வரும்.  ஆனால், நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் எந்த நாட்களில் 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?
லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.
     அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி இஃதிகாஃப் இருந்து விட்டு இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் வெளியேறியது.
அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூசயீத் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஆம்! நாங்கள் ரமளானின் நடுப்பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும் எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சஜ்தாச் செய்தார்கள். அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை நான் கண்டேன் என்று விடையளித்தார்.
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ரமளான் மாதத்தின்) நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டோம். அப்போது எங்களுடன் வந்த நபி(ஸல்) அவர்கள், யார் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் தாம் இஃதிகாஃப் இருந்த இடத்திற்குச் செல்லட்டும். நிச்சயமாக நான் இந்த (லைலத்துல் கத்ர்) இரவைக் கனவில் கண்டேன். ஈரமான களிமண்ணில் சஜ்தாச் செய்வதாகக் கண்டேன் எனக் கூறினார்கள். அவர்கள், தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அன்றைய தினம் கடைசி நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது. (அன்றைய பள்ளிவாயில் பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை நான் கண்டேன்.    லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்)அவர்கள், "லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்" எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி); நூல்:புகாரி,முஸ்லிம்
சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி மேலேயுள்ள‌ ஹதீஸ்கள் அனைத்தும் பொதுவாக லைலத்துல் கத்ரு கடைசிப் பத்து இரவுகளில் இருப்பதாக அறிவிக்கின்றன.                        எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!"       அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி);                          நூல்கள்:புகாரி,முஸ்லிம்
'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி); நூல்: புகாரி
இந்த ஹதீஸ்களிலிருந்து லைலத்துல் கத்ரு இரவு கடைசிப் பத்து இரவுகளில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
லைலத்துல் கத்ரும் இருபத்து ஏழாம் கிழமை இரவும்..!
இவ்வாறு மேலே கண்ட ஹதீஸ்களில் நபி(ஸல்)அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, லைலத்துல் கத்ரு இரவு ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவில்தான் என பெரும்பான்மையான இஸ்லாமிய‌ மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இவ்வாறு தவறாக விளங்கி வைத்திருப்பதால், ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில் மட்டும் பள்ளிகளில் மக்கள் நிரம்பி வழிவதைக் காண்கிறோம். அதுவரைக் கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும்
இப்படி அமர்க்களப்படுத்தி, அந்த 27 ஆம் இரவில் மட்டும் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணாக‌ விட்டுவிடுவது சரியான‌ முறைதானா? அந்த லைலத்துல் கத்ரு இரவு எப்போது கிடைக்கும், எப்படி முயன்றால் கிடைக்கும் என்பதை நம் மக்கள் அறிந்திருந்தால், கடைசிப் பத்தின் எல்லா நாட்களிலும் கண்விழித்து இறைமன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, இப்படி ஒரே நாளில் கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் விட மனம் இடம் கொடுக்குமா?
இந்த நிலை சரியானதுதானா என்பதை நாம் ஆய்வு செய்தோமானால், நபி(ஸல்)அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும், அவர்கள் வாழ்க்கையில் இது 21, 23, 25, 27, 29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27 ஆவது இரவை மட்டுமே சிறப்பிப்பது நபிவழிக்கு மாற்றமானது என்பதை நாம் விளங்கமுடிகிறது. ஆக‌, முன்னோர்கள் செய்துவந்தார்கள் என்பதற்காக அல்லாமல், இதை நமது மறுமை வாழ்வுக்காக கவனத்தில் கொண்டு நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொண்டால் மட்டுமே மறுமையில் நாம் வெற்றிபெறமுடியும்!
:லைலத்துல் கத்ரும் அதற்கான‌ ஸ்பெஷல் தொழுகையும்:-'ரமலானில் நபி(ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்(8+3)மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.' அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி);
                                                                                       நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி(ஸல்)அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும்
அதை விட்டுவிட்டு, மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, 'குல்குவல்லாஹு' சூராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27 ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது என நபி(ஸல்)அவர்கள்கற்றுத்தராதவணக்கவழிபாடுகளையெல்லாம்இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பதற்கு அவர்கள்தான் இறைவனிடத்தில் பதில்சொல்லவேண்டும்.ஆக, லைலத்துல் கத்ரு இரவுக்கென்று எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையோ, மேற்கூறப்பட்டவற்றையோ நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
இந்த லைலத்துல் கத்ரு இரவில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் நபிவழியில் நாம் பார்க்கலாம்:
நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு 'லைலத்துல் கத்ரு' இரவைத் தேடிக்கொண்டார்கள்?
ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி);
                                            நூல்கள்: புகாரி,முஸ்லிம்
நபி(ஸல்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்:முஸ்லிம்
எனவே நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல் நாமும் முயலவேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில்'இஃதிகாஃப்' இருந்ததைப் போல் இஃதிகாஃப் இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தானஇந்த 'இஃதிகாஃப்'இருக்கவேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும். எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து செயல்படும் நாம், இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் பாவமன்னிப்பு பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ரு இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள்,   (அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ) என்ற துஆவைக் கூறினார்கள். நூல்கள்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்
பொருள்: இறைவா நீ மன்னிப்பவன்; மன்னிப்பையே விரும்புபவன்; எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக                        
 மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். இந்த வருடம் நம்முடைய கடைசி ரமலானாக இருக்கலாம்என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாக அமைந்துவிடும், இன்ஷா அல்லாஹ்! ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.           நாம் அந்த இரவைப் பெற்ற பாக்கியசாலிகளா, துர்பாக்கியசாலிகளா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும், குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்களிலும், பெருநாளின் தேவைகள் என்று துணிமணிகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழித்து விடுவதும், அதிலும் தள்ளுபடி விளம்பரங்களுக்காக மாலையில் வெளியேறி கடை கடையாக அலைவதும், இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள், ஃபஜ்ரு தொழுகை, லைலத்துல் கத்ரு எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்கவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். ஆக, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக நமது தேவையானவற்றை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே தாமதமின்றி வாங்கி தயார் பண்ணிக்கொண்டால், நேர விரயமின்றி கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற ஏதுவாக அமையும்.               :லைலத்துல் கத்ரு இரவினால் கிடைக்கும் இன்னொரு பயன்:-         'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'      அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி,முஸ்லிம்  மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ருடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆனை அதிகமாக‌ ஓதியும், திக்ருகளை மொழிந்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோரவேண்டும்
சிறப்புமிகு இந்நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும், அதன் மூலம் அல்லாஹ்தஆலா நமக்கு பாவமன்னிப்பு அளித்திடவும், நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும், நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும், புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும், அதன் மூலம் நமது இம்மை/மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலானில் நமக்காகவும் அனைவருக்காகவும் என்றென்றும் பிரார்த்திப்போமாக!

.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001