வெள்ளி, டிசம்பர் 05, 2014

இஸ்லாமின் பார்வையில் முதியோர்கள்


அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் இறைவன் ஆக்கினான். திருக்குர்ஆன் (30:54)
மனிதனின் குழந்தைப் பருவத்தையும், முதுமைப் பருவத்தையும் இறைவன்பலவீனம்என்பதாகவே அடையாளப்படுத்துகிறான். அப்படி என்றால் முதுமைக் காலத்தைகுழந்தைப் பருவம்என்றும், முதியவர்களைகுழந்தைகள்என்றும் நாம் அழைக்க வேண்டும்.
நம் வீட்டின் தாத்தாக்கள், பாட்டிகள் வயதால், அனுபவத்தால் பழுத்த பழங்கள். ஆனால்...? உடலாலும் உள்ளத்தாலும் அதன் உணர்வுகளாலும் குழந்தைகளைப் போன்றவர்கள் என்பதே இறைவனின் ஏற்பாடு.
உண்மை தான், உடலின் தோல்கள் எல்லாம் சுருங்கிய நிலையில் தலையிலே பளிச்சிடும் நரையோடு கண்ணிலே கண்ணாடி, கையிலே கைத்தடி என உடலின் சிறு சிறு அசைவுகளுக்கும் குழந்தையைப் போல் ஒரு துணை தேடுகின்ற பொக்கை வாய் பருவமாகும்முதுமை’.
எனவே நாம் நம்மின் தாத்தாக்களை பாட்டிகளை ஒரு குழந்தையைப் போல் பார்த்துப் பார்த்துப் பத்திரமாய் அரவணைத்து கொள்ளல் வேண்டும். இச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
பெற்றோருக்கு உபகாரம் செய்திட வேண்டுமென்று (இறைவன்) கட்டளையிடுகிறான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களைச்சீஎன்று கூடச் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக’. (17:24)
என் பெற்றோர்கள் முதுமை அடைந்து விட்டால் அவர்களிடம் எப்படி பேச வேண்டும்? அவர்களின் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும்? எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும்? என்பதையே இறைவன் இவ்வசனத்தில் நமக்கு கற்றுத் தருகிறான்.
ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால்குடித் தந்தை வருகிறார்கள். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தங்களின் மேற்துண்டை விரித்து அதிலே அமர வைக்கிறார்கள். பின்பு பல்குடித் தாயான ஹலீமா அம்மையார் வருகிறார்கள். அவர்களை மேற்துண்டின் இன்னொரு பகுதியிலே அமர வைத்து கண்ணியம் செய்தார்கள்.
இதுபோன்றே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தால் ஃபத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எழுந்து நின்று வரவேற்பார்கள், கண்ணியம் செய்வார்கள். இம்முறையே இன்று நாம் நமது பெற்றோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.
நரை விழுந்த ஒரு முதியோருக்கு கண்ணியம் வழங்குவது, இறைவனை கண்ணியப்படுத்தும் உன்னதமான செயல்களில் ஒன்றாகும்என்றார்கள் நாயகம்.
மூத்தோர் சொல் அமிழ்தம்என்பது பழமொழி. உண்மை தான். ‘அறிவாளியிடம் கேட்பதை விட ஒரு அனுபவசாலியிடம் கேள்என அரபியிலே ஒரு பழமொழி உண்டு. இவ்வுலகத்தின் சகல காரியங்களிலும் முதிர்ச்சியை நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள் முதியோர்கள் மட்டுமே. முதியோர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உலகிற்கான உயிர் நாடியாகும்.
இப்படியான மேன்மைகளை தாங்கியிருக்கிற முதியோர்களை மதிப்பதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும் இறைத் தூதர்களான நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களின் வழிமுறையாகும்.
ஒரு முறை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபா அவர்களை இஸ்லாத்தைத் தழுவும் பொருட்டு பெருமானாரிடம் அழைத்து வருகிறார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் நம் ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
அபூபக்கரே, வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே? நான் வந்து சந்தித்து இருப்பனேஎன்றார்கள் நாயகம்.
யா ரசூலல்லாஹ், நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை வந்து சந்திப்பது தான் ஏற்றமான செயலாகும்என அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலுரைத்தார்கள்.
பின்பாக அபூகுஹாபா அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார்கள் என்பது வரலாறு.
ஒரு நாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் பெருமானாரை சந்திக்க வருகைத் தருகிறார். அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களோ அம்முதியவருக்கு வழி விடாமல் தாமதப்படுத்தினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே நபித்தோழர்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.
யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்லஎன்றார்கள் நாயகம்.
ஆக, முதியோர்களை மதிப்பதும் அவர்களிடம் கண்ணியமாக நடந்துக் கொள்வதும் இஸ்லாமிய வழிமுறையாகும். முதியோர்களை உதாசீனப்படுத்துபவன் இஸ்லாமிய வழிமுறைக்கு அப்பாற்பட்டு நடக்கிறான் என்பதே இஸ்லாம் வழங்குகிற தீர்ப்பாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரியோர்களும், சிறியோர்களும் கலந்து இருக்கிற சபையில் ஏதேனும் கேள்விக் கேட்டால், சிறுவர்களுக்கு அக்கேள்விக்கான பதில் தெரிந்த போதும் கூட, தங்களை விட வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கிற இச்சபையில் முதியோர்களுக்கு கண்ணியம் தர வேண்டும். மரியாதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாய்மூடி அமைதியாக இருந்து விடுவார்கள்என அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆனால் இன்றோ முதியோர்கள் ஒரு சுமையாகவும், தொல்லையாகவும், நெற் பதர்களைப் போலப் புறம் தள்ளப்படுகிறார்கள். இப்படியாக முதியோர்களை நாம் பாதுகாக்க தவறி விட்டதினால் உண்டான விளைவு என்ன தெரியுமா?
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புமுதியோர் இல்லம்என்கிற வார்த்தையே நமக்கு புதிதாகவும் புதிராகவும் தென்பட்டது. ஆனால் தற்பொழுதோ முதியோர் இல்லங்கள் குறித்து பத்திரிகையில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது கேவலம். இது இச்சமூகத்திற்கான சாபக்கேடாகும்.
நம் சிரங்கைக் கொண்டுச் சூரியனை மறைத்து விட முடியுமா என்ன? முதுமையும் முதியோர்களும் இறைவனின் படைப்பியல் கோட்பாடாகும்.
முதுமையையும், முதியோர்களையும் ஒதுக்குவது, புறக்கணிப்பது இறை நியதியின் புறக்கணிப்பாகும்.
முதுமையை வென்றெடுப்பதில் இன்றைய நவீன அறிவியலும் தோற்றுப் போன ஒன்றே. வெற்றி என்றும் முதுமைக்கே நமக்கல்ல.
உண்மை தான். 2020–ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இயற்கையாகவே முதுமையின் வலியும், அதனால் ஏற்படும் பலகீனமும், தனிமையும் மிகுந்த வேதனைத் தரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் நாம் அவர்களை புறந்தள்ளுவது கொடிய ரணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்முதுமையின் கஷ்டத்தை விட்டும் இறைவா என்னை பாதுகாத்தருள்என பலமுறை பிரார்த்தனை செய்தார்கள்.
அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் என்கிற நபித் தோழர் அதிகமாக குர்ஆன் ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருமானார் அவர்கள்அப்துல்லாவே, அதிகமாக குர்ஆன் ஓதும் நபருக்கு இறைவன் ஆயுளை நீளமாக்கித் தருகிறான். எனவே இதன் காரணமாக நீங்கள் முதுமையும் அதனால் ஏற்படும் சடைவையும் அனுபவிக்கக் கூடும். சிரமம் எடுத்து அதிகமாக குர்ஆன் ஓதுவதை குறைத்துக் கொள்ளுங்கள்என உபதேசம் செய்தார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைப் போன்று அப்துல்லாஹ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தந்தான். ‘பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதுவதில் எனக்கு வழங்கியிருந்த அனுமதியை நான் பயன்படுத்தி இருக்க வேண்டுமேஎன முதுமையின் சிரமத்தை உணர்ந்த போது அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் கவலையோடு சொன்னார்கள் என சரித்திரம் சொல்கிறது.
அனுதினமும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகாலையிலும், அந்தி மாலையிலும் ஒரு சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வழமையாக செய்பவர்களாக இருந்தார்கள். அதிலேஇறைவா, மோசமான முதுமையை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்எனவும் தினம் தினம் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்கு கண்ணியம் செய்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில் அவனை கண்ணியம் செய்யக் கூடிய ஒரு நபரை இறைவனே ஏற்படுத்துகிறான்என்றார்கள் நாயகம்.
ஆக இன்று நாம் முதியவர்களை மதித்து நடந்தால் நம்மின் வயோதிகத்தில் நாம் மதிக்கப்படுவோம், அரவணைக்கப்படுவோம். இல்லையேல் முதியோர் இல்லங் களில் அடைக்கப்படுவோம்.

முதியோர்களை மதிப்போம், இறையருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக