புதன், அக்டோபர் 21, 2015

ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு பகுதி..1

ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில்  மாணவர்களின் பங்கு

பகுதி..1

ஊழலற்ற சமுதாயம்..,உண்ண உணவு .உடுத்த உடை இருக்க இடம் மட்டும் மக்கள் அடிப்படை தேவையில்லை 
ஒழுக்கமான வாழ்க்கையும்
 ஊழலற்ற சமுதாயமும்.ஐந்தில் வளையாததுஐம்பதில்வளையாது" என்னும் பழமொழிஎனது தலைப்பிற்கு உகந்த தொடக்கம் என்று கருதுகிறேன் .சிறுவயதில் நாம் கற்பனவும், நமக்குக் கற்பிக்கப் படுவனவும் நம்மனத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தனி மனித ஒழுக்கம் என்பது இளம்வயதிலிருந்துகடைபிடிக்க வேண்டிய ஒன்று.ஒரு மனிதனின் நல்லொழுக்கம்அவனைத் தனிப்பட்ட முறையில் மேம்படுத்துவது மட்டுமன்றிஅவனைச் சார்ந்துள்ளவர்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதற்குஊழல் ஒரு சிறந்த சான்றாகும். தனிமனிதனின் ஒழுக்கம் அவன்வாழ்வை செம்மைப் படுத்துவது மட்டுமன்றிச் சமுதாயமேம்பாட்டிற்கும் வித்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.நாம்ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல் என்னும் அரக்கனின்பிடியில் சிக்கித் தவித்திருப்போம்,ஏனெனில் ஊழல் என்பது இன்றுகாற்றைப் போல எங்கும் பரவி நிறைந்திருக்கிறது.நம் அய்யன்திருவள்ளுவர் முதல் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வரை ஊழலைப் பற்றியும் அதன் விளைவுகளைபற்றியும்பேசாத சான்றோர்களே இல்லை எனலாம்.பின்பு ஏன் ஊழலை நம்மால்ஒழிக்க இயலவில்லை?வளமான விளைச்சல் தரும் ஒரு வயலில்களைகளைக் களைய முற்படும் நாம் அதன் தழைகளை மட்டுமேநீக்கினால் போதாது.களைகளை வேரோடு நீக்க முற்படவேண்டும்.அந்த வேர் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ஊன்றிஉள்ளது.இந்த இளம் பருவத்தில் நாம் நம்மைச் செம்மைப் படுத்திக்கொண்டால் அது நம்முடைய வாழ்விற்கு மட்டுமன்றி நம்மைச்சார்ந்துள்ளவர்களுக்கும் பயன் தரும்.இன்று வெறும் எண்ணமாக நம்மனத்தில் பதிந்திருப்பது ஆழமாக இருக்குமானால் நாளைசெயல்களாக உருவெடுத்துப் பெரும் மாற்றத்தைஏற்படுத்தக்கூடும்.ஒரு சிறு தீப்பொறி ஒரு அடர்ந்த காட்டையேகரியாக்கும் வல்லமைப் படைத்தது .நம் மனத்தில் ஒரு தீப்பொறியைத்தோற்றுவிப்போம். அந்தத் தீப்பொறி பல ஆயிரக்கணக்கான அறிவுச்சுடர்களை ஏற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நம் சமுதாயத்தில்அன்றாடம் நிகழும் தீமைகளைத் தீ வைத்து எரிக்கவும் பயன்படட்டும்.ஒரு சமுதாய மாற்றம் நம்மால் ஏற்படட்டும்.மாணவர்களாகிய நாம் மனம் வைத்தால் மட்டுமே இந்தச் சமுதாயநலக்கேடுகளை முற்றிலுமாக அகற்ற இயலும். இந்தச் சமுதாயம்என்னும் மலர்த் தோட்டத்தைக் காக்கும் முள் வேலியாக மாணவர்கள்உருவெடுக்க வேண்டும்.இருப்பதைக் கொண்டு மன நிறைவு பெறும்பக்குவத்தை இளம் வயதிலேயே நாம் பெற்றுவிட்டால்,எதிர்காலத்தில் ஊழல் என்ற சொல்லே அகராதியிலிருந்து நீங்கி விடும்.நம்முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற இந்த உலகத்தைச் சீர்படுத்துவதுநம் கடமை மட்டும் அல்ல.,அது நமக்குப் பெருமையும் கூட.அதுவேஅடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவியுமாகும் .தவறுசெய்ய ஒரு நொடி போதும்;தவறு செய்யக் கூடாது என்ற எண்ணம்தோன்ற வெகு நேரம் ஆகும்;அந்த எண்ணத்தைநிலைநிறுத்தவும்,செயல்களாக உருமாற்றம் செய்யவும் நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்.ஆனால் அந்தச் செயல்களின்பலன்களை எண்ணிப் பாருங்கள்...பல யுகங்கள் இந்தச் சமுதாயத்தின்நலன் பேணிக் காக்கப்படும்.எனவே, தாமதம் சிறிதுமின்றி இந்தநொடியே முடிவெடுப்போம். ஊழலை ஒழிப்போம். நம்சந்ததியினருக்கு ஒரு ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கித்தருவோம்!பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தட்டும்!!!
லஞ்ச ஊழலில்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க..................
லஞ்ச ஊழலில்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம், ஊரைக் கூட்டிப் போராட்டமெல்லாம் நடத்த வேண்டாம். இதற்காக அரசியல் கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டாம். (ஏனெனில் அரசியலே ஊழலை வளர்க்கும் ஒரு பெரும் காரணி)
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, அவரவர் சக்திக்கேற்ப, வகிக்கும் பொறுப்புக்களுக்கேற்ப நடந்து கொண்டால் போதும். லஞ்சம் என்பது புற்று நோய் போல. பல தலைமுறைகளாக இந்த சமுதாயத்தில் புரையோடிப்போன இதனை ஒரே நாளில் ஒழிப்பது அறவே இயலாத செயல். படிப்படியாக இதனைக் குறைக்க மக்களிடையே ஒரு விழிப்புணர்வு உண்டாக்குவதே அறிவுடமை. முதலில் குறைப்போம்; பிறகு அடியோடு ஒழிப்போம்.
தனியார் துறையில் பெரும்பாலும் அதன் முதலாளியோ அவர் அனுமதி பெற்ற பலரோ வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணிப்பதால் எவரும் லஞ்சம் வாங்க, பெரும்பாலும் வழியில்லை; வாங்கியதாகக் கண்டுபிடித்தாலோ தண்டனை கடுமையாக இருக்குமென்பதால், லஞ்சம் வாங்கும் வாய்ப்பு குறைவு எனவே பொதுவாக அரசுப் பணியிலேயே லஞ்சம் வாங்குவது அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் உட்பட எல்லாமே வியாபாரம் ஆன நிலையில், நிர்வாக அதிகாரம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற நிலையில் அரசின் நிர்வாக அதிகாரிகளை வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். இயல்பாக இருப்பது போல ஒரு தடையினை, தடங்கலை உருவாக்கினால், மக்கள் தானாக தங்களுக்கு வேண்டியதைப் பெற லஞ்சம் தருவார்கள் என்பது இவர்களின் கணிப்பு. இவர்கள் அனைவரும் இணைந்தே இந்த லஞ்சம் வளர ஒத்துழைக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் துணையில்லாமல், அரசியல்வாதியோ வியாபாரிகளோ எதுவும் செய்ய இயலாது என்பதால் அரசின் அதிகாரிகளைக் கண்காணிப்பதே ஊழலை ஒழிக்க முதல்படி. மக்களின் எதிர்ப்பு உண்மையானால் மக்களை நம்பும் அரசியல்வாதிகளே இந்த அதிகாரிகளுக்கு முதல் எதிரி. அவர்களைக் கண்டிப்பார்கள் லஞ்சம் குறையும்.
லஞ்சம் வாங்க ஆளில்லையென்றால், கொடுப்பது தானே குறையும் லஞ்சத்தை ஒழிக்க இதுவே முதல் படி. லஞ்ச ஊழலில்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவையே.
· முதலில், நீங்கள், லஞ்சம் வாங்காமலிருங்கள்.
· உங்களுக்குப் பிறரைக் கண்கானிக்கும் அதிகாரமிருந்தால், தயவு தாட்சண்யமின்றி, உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் கீழ் பணிபுரிபவர் லஞ்சம் வாங்குவதைக் குறைக்கும் வழியினை கண்டுபிடியுங்கள்; அமுல்படுத்துங்கள்
· முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள். காலவிரையம்; அவசரத் தேவை என்ற காரணங்களாலேதான் பெரும்பாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையுண்டாகிறது. எனவே முடிந்தவரை காலவிரையத்தைக் குறைக்கும் விதமாக, உங்கள் செயலைத் துவங்குமுன், முன்னதாகவே உரிய காலத்தில், விவரமாகத் திட்டமிடுங்கள் பின் செயல்படுத்துங்கள்
· எங்கெல்லாம் அவசியமில்லையோ அங்கெல்லாம் அவசரப்பட்டு ஒரு செயலை முடிக்க வேண்டுமென்று லஞ்சம் தர முயலும் வாய்ப்பு இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
· பொதுவாக எந்த ஒரு செயலையும் செய்ய இறங்குமுன், அது குறித்துத் தேவையான விவரங்கள், விளக்கங்கள் அறிந்திராத உங்களின் அறியாமையே சில நேரங்களில் லஞ்சம் தர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளுகிறது. பொதுவாக பல அரசுப் பணி குறித்த விவர்ங்கள் எல்லாம் அரசே தங்களின் இணைய தளத்தில் வெளியிடுகிறது. தகவல் அறியும் சட்டப்படி சில அதிகப்படியான தகவல்களை அறியும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இவற்றினைத் தக்கவர்களிடமிருந்தும் இணையம் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
· பொறுப்பான அரசுப் பணியில் இருக்கும், இருந்த விவரமறிந்தவர்கள் உங்கள் துறை சார்ந்த விவரங்களைத் தேவைப்படுபவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
· பெருக்கல் குறியிட்ட இடத்தில் கையெழுத்திடுவதோடு உங்கள் பணி முடிவடைந்தது என்றெண்ணாமல், நீங்கள் செய்ய விரும்பும் செயலைக் குறித்த ஆவணங்களைப் படித்துப் புரிந்து கொண்டு அதனை நீங்களே பூர்த்தி செய்யுங்கள் அதனால், தவறான விவரங்களைத் தருவதனால் பிறகு நீங்கள் பிறர் தயவை நாடி லஞ்சம் தர வேண்டியிருக்காது.
· உங்களால் இயன்றவரை, உங்களைச் சார்ந்தோரிடம் குறிப்பாக இளைய தலைமுறையிடம், லஞ்சத்தின் பாதிப்பினைக் குறித்துப் பேசுங்கள். அதனால் நம் நாட்டிற்கு, முடிவாக நமக்கு உண்டாகும் பாதிப்பினைக் குறித்துப் பேசுங்கள். அதற்கு உங்கள் “கை சுத்தமாக” இருக்க வேண்டும்.
· உங்கள் சக மனிதரிடம் அன்புடையவராக, அவருக்கும் இழப்பு வராமல் ஒரு செயலைச் செய்ய முயலுங்கள்.
இதற்கு அடுத்த நிலை சற்றே கடினமான ஒன்றுதான் எனினும் உங்களுக்கு இந்த சமுதாயத்தின் நலம் குறித்த நல்லுணர்வு இருக்குமானால், இதுவும் சாத்தியமே.
· தகுதி மற்றும் சட்டப்படியாக என்ன உரிமைகள் வாய்ப்புகள் மற்றும் வசதிகள் கிடைக்குமோ அது மட்டுமே உங்களுக்கோ அல்லது உங்களின் வாரிசுகளுக்கோ கிடைக்கும் என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள். இது கடினமான ஒன்றுதான் எனினும், இதனை ஏற்றுக் கொண்டால், தகுதிக்கு மீறிய சட்டத்திற்குப் புறம்பாக வாய்ப்பு மற்றும் வசதிகளைப் பெற, லஞ்சம் தர வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்பட மாட்டீர்கள்.
· குறுக்கு வழியிலோ சட்டத்திற்குப் புறம்பாகவோ ஒரு செயலைச் செய்ய முயலாதிருங்கள்.
· தவறு நடந்திருந்தால், ஆரம்பத்திலேயே திருத்திக் கொள்ளுங்கள்; அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.
· சட்ட ரீதியாக உங்களுக்கு உண்டான வாய்ப்பு, வசதிகள் உங்களுக்குக் கிடைக்காமற் போனால், சட்ட ரீதியாக அதனை அடைய முயலுங்கள் இது ஆரம்பத்தில் அத்தனை எளிதாக நடக்க வாய்ப்பு இல்லை எனினும் சற்றே பொறுமையாக ஆனால் விடாமுயற்சியுடன் அணுகிணால் பயன் கிடைக்கும்.
முயற்சி செய்வோமா? –

 மாணவர்களின் பங்கு…
எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஊழலே ஆகும். அதை நாம் களைய  வேண்டும். முதலில் நம்மிலிருந்து துவங்கவேண்டும். எந்த விதமான லஞ்சமும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவையானவற்றைச்  செய்ய எந்த அரசு அதிகாரி மறுத்தாலும்பத்து பேர் சேர்ந்து அவர் முன்னால் அமைதியாக அமர்ந்து விடுங்கள்.ஐயா! உங்களைப் பணிவாக வணங்குகின்றோம்தேவையானால்மீண்டும் மீண்டும் நாங்கள் வருகின்றோம்ஆனால் உங்களுக்கு லஞ்சத் தொகை எதுவும் தரமாட்டோம் என்று கூறுங்கள். அவசியமானால்,என்னுடைய பெயரை குறிப்பிடுங்கள். "நாங்கள் எங்கள் ஆசிரியரிடம் லஞ்சம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என்று உறுதி  கூறியிருக்கின்றோம்எங்கள் பணியை செய்ய தயவு செய்து அனுமதியுங்கள் என்று கூறுங்கள்.  
இந்த உறுதி மொழி எடுத்துக் கொண்ட அநேகம் பேர் லஞ்சம் எதுவும் கொடுக்காமல் தங்கள் வேலைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அனைவரும் என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியாதுஆனால் நிறையப் பேர் என்னிடம் திரும்பி வந்து லஞ்சமின்றி தங்கள் பணி நிறைவுற்றதாகக் கூறியிருக்கின்றார்கள். எனவே நீங்கள் லஞ்சம் இன்றி செயல்பட இந்த உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தூண்டுகின்றேன். உங்களுக்கு அதை செயல்படுத்த சக்தி இருக்கின்றது. உங்களை நீங்களே நம்புங்கள். சில கட்டுப்பாடுகளினால்  நிர்பந்தப்படுத்தப்பட்டுலஞ்சம் வாங்குபவர்கள்,மற்றும் லஞ்சத்தில் பங்கு அடைய விரும்பும்  மேலதிகாரிகளின் வற்புறுத்துதலுககு ஆளாபவர்கள் ஆகியோரை நான் இனி அவ்வாறு செய்தலை தவிருங்கள், லஞ்சத்தை வளர்க்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
நேர்மையாக இருப்பதால் உங்களது ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை தடைப்படாது. நேர்மையும் உறுதியும் கொண்ட நிலைப்பாட்டுடன் பணிபுரியுங்கள். நிச்சயம் முன்னேறுவீர்கள். ஏன் தெரியுமா? ஒரு தனி மனிதனின் பணித்திறனை விட மேலான ஒரு சக்தி அனைத்தையும் நிகழச் செய்கின்றது.நீங்கள் உண்மையைப் பேசும் போது உங்களில் ஒரு சிறந்த சக்தி பிறக்கின்றது. பொய் பேசும் போது உங்கள் உடலின் தசைகள் கூட வலுவிழந்து விடுகின்றன. நேர்மை என்பது, தானே சக்தி வாய்ந்தது. உண்மை என்பது  தானாகவே வலுப்பெற்றுள்ள ஒன்று.
நேர்மை சுயமாகவே சக்தி கொண்டது. உண்மை என்பதும் சுயமான சக்தியுடையது. இப்போது நேரடியாக ஒரு உதாரணம் காட்டுகின்றேன். கூட்டத்திலிருந்து ஒரு ஆர்வலரை  மேடைக்கு அழைக்கின்றேன். உண்மை என்பது நமது உடலளவில் கூட எவ்வளவு சக்தி மிகுந்தது என்று உங்களுக்குக் காட்டுகின்றேன்.
ஆசிரியர்: உங்கள் பெயர் என்ன?
மாணவர்: என் பெயர் சூரஜ்
ஆசிரியர்:: சரி. இப்போது உங்கள் கையைக் காற்றில் இருக்கப் பற்றிக் கொள்ளுங்கள். எவ்வளவு  முடியுமோ அவ்வளவு திடமாகப் பற்றிக் கொள்ளுங்கள். இப்போது நான் என் பலம் முழுவதையும் உபயோகித்து உங்கள் கையைக் கீழே தள்ளுவேன், நீங்கள் அதை எதிர்க்க வேண்டும். நான் கேட்கும் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூற வேண்டும்.
உங்கள் பெயர் என்ன?
மாணவர்:: சூரஜ்
ஆசிரியர் தனது பலத்தை உபயோகித்தும் உண்மை கூறியதால் ஆர்வலருடைய கை திடமாக காற்றில் நிற்கின்றது.
ஆசிரியர்: சரி! இப்போது வேறொரு கேள்வி கேட்பேன், நீங்கள் பொய் சொல்ல வேண்டும்.இன்று என்ன கிழமை?
மாணவர்: வெள்ளிக்கிழமை (உண்மையில் அன்று திங்கள் கிழமை)
ஆசிரியர் பலத்தை உபயோகித்து அழுத்தியதும், கை எளிதாகத் தாழ்ந்து விடுகின்றது.நல்லது! இப்போது நீங்கள், பிறர் தசைபலத்தை சோதித்து அவர்கள் உண்மை அல்லது பொய் பேசுகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உண்மை பேசும்போது ஒரு சிறப்பான சக்தி உங்களில் மலருகின்றது. பொய் பேசும் போது, உங்கள் உடற்தசைகள் வலுவிழந்து விடுகின்றன. உடன் பிறப்புக்களுக்கு இடையேயும்,தம்பதிகளுக்கிடையேயும் கூட அவர்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுபிடிக்க இது நல்ல செய்முறை நுட்பமாகும்
ஊழலற்ற சமுதாயம் நமக்கு தேவை. பிளவற்ற பலமான அரசாங்கம் இந்தியாவிற்குத் தேவை.   கூட்டணி  அரசு  வேண்டாம்.ஏன்? அயல்நாடுகள் இந்தியா வலுவான நாடாக ஆவதை விரும்ப வில்லை. இந்தியா பலவீனமாகவும் பிரிவினையோடும் வேண்டும் என்று விரும்பி, அவை, ரகசியமாக கூட்டணி அரசு அமைவதை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு டாலரின் ஈடு நூறு ரூபாய் என்னும் அளவுக்கு இந்தியாவின் நாணய மதிப்பைக் குறைந்து விட வேண்டும் என்று விரும்புகின்றன. நமக்கு இது வேண்டியதில்லை. இந்தியாவில் பணவீக்கமும்,ஏழ்மையும் இருக்கக் கூடாது. நம் நாட்டில் தீவிரவாதமும் நாச வேலைகளும் இருக்கக் கூடாது. மக்களுக்குள் பகைமை நிலவக் கூடாது. நாம் அனைவரும் ஒருவரே.
நமது நாட்டில் பொதுவுடைமை கொள்கையின் நிலை என்ன என்று தெரியுமா? ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு தலைவருக்குத் தனது பிரிவைச் சேர்ந்த பிறர் வாழ்வில் முன்னேறுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பாதுகாப்பற்ற உணர்வினால் தனது அதிகாரபூர்வமான பதவியை, தனது பிரிவைச் சேர்ந்த மற்றவரிடம் இழக்க விரும்புவதில்லை. சாதரணமாக , உங்களுடைய ஜாதிப் பிரிவினைச் சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்க விரும்புவீர்கள். ஆனால் அவர் தலைவர் ஆனதும், தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்களுடைய நலனலையே புறக்கணித்து, அவர்கள் முன்னேறுவதைத் தடுக்கின்றார். தனது ஜாதிப்பிரிவைச் சேர்ந்த வேறொருவர் தன்னை விட வாழ்வில் உயருவதை அவர் விரும்புவதில்லை. உங்கள் வாக்குகளை அளிக்கும் போது, இத்தகைய அற்பமான (தவறானதும் கூட) செயல்களால் ஊசலாடாதீர்கள். எப்போதுமே நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதி வாக்களித்து முன்னேறுங்கள்.  இந்த முறை 100 சதவீதம் வாக்களிப்பு நிகழவேண்டும் என்று விரும்புகின்றேன்.செய்வீர்களா? யாராவது ஓட்டுப் போடுவதை தவிர்ப்பதாகத் தெரிந்தால், நீங்களே அவர்களை அழைத்து சென்று வாக்களிக்க  ஊக்குவியுங்கள். இது மிக முக்கியமானது.
சமுதாயத்தில் எங்கெல்லாம் தவறுகளைக் காண்கின்றோமோ, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றைத் தீர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் மேம்பாடான இந்தியாவிற்குத் தன்னார்வத் தொண்டர் ஆக வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். சமுதாயத்தில் வறுமை, நோய்,அநீதி   ஆகியவை இருக்கக்கூடாது. நாம் அனைவரும், வல்லமையான, ஆரோக்கியமான, தற்சார்பு கொண்ட இந்தியாவாக நம் நாடு ஆக வேண்டும் என்பது நமது கனவாகக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரம் நாட்டிற்காக அர்ப்பணியுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்தால்,  மேன்மையாக இருக்கும்
. சமுதாயத்தில் எங்கு தவறுகள் நிகழக் கண்டாலும், நாம் அனைவரும் ஒன்று கூடி, அவற்றைத்  தீர்த்து வைக்க வேண்டும்.மேம்பாடான இந்தியாவிற்கு விருப்பார்வத் தொண்டராக  உங்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கின்றேன்.செய்வீர்களா? இதுதான் நான் உங்களுக்குக் கூறுவது. சமுதாயத்தில், வறுமை, நோய், அநீதி ஆகியவை நிலவக் கூடாது. 

வலுவான, ஆரோக்கியமான தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்கக் கனவு காணுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக