இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாம் கூறும் அமானிதம்

மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று ,   கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை , வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கி விட முடியாது. நிலத்தை விற்பதாகக் கூறி ,   பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலெனத் திரண்டு விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ ( 33),   முஸ்லிம் ( 89) இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்தக் கயவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கே எச்சரித்துள்ளார்கள். ü   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்