Share பெண்கள் பின்பற்ற வேண்டிய வரலாற்றுப் பெண்கள்
சே. இ. ரெஹானா ஃபர்ஜானா
[ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களை இறை பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். எவருக்கு நாட்டமிருக்கிறதோ அவர்களையே அல்லாஹ் தேர்வு செய்கிறான். சாதாரணமாக இருப்பவர் இறை நாட்டம் பெறும்போது இயந்திரத்தை இயக்கும் சக்கரமாக மாறுவார். அ‰ணுவளவு சந்தேகமும் தேவையில்லை. தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய பணி. மிகப்பெரிய வெகுமானம் உண்டு.]
“உங்களில் ஆணோ, பெண்ணோ அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்கமாட்டேன். நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தாம்; எனவே எவர்கள் ஹிஜ்ரத் செய்து வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ, வெளி யேற்றப்பட்டார்களோ, மேலும், என் பாதையில் துன்பப்பட்டார்களோ, போரிட்டார்களோ, கொல்லப்பட்டார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றிவிடுவேன்.” (குர்ஆன் 3:195)
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில், வீ ட் டு வேலையிலிருந்து விவசாயம் வரை. தோட்டப் பணியிலிருந்து தொழுகை வரையிலும் இரு பாலினத்தவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். அனைத்து தளங்களிலும் பெண்கள் செயல்படுவதைக் காணமுடிந்துள்ளது.
காலப்போக்கில் தொழிலாளர் பணிப்பிரிவு வந்தது. உயிரியல் ரீதியாக, உளவியல் ரீதியாக நியாயமானதாக இருந்தது. சமூக நன்மைக்குரியதாகவும் அமைந்தது. அவரவர் பணிகளை, அவரவர் புற நிலைகளில் காணமுடிந்தது. அனைத்துப் பணிகளிலும் ஒருவருக்கொருவர் ஆலோசனை, அறிவுரை கூறுதலும் இருந்தது. நெருக்கடியான நிலைகளில், தார்மிக உதவிகள் செய்தல், ஊக்குவித்தல்கள் இருந்தன. இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இதற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
இஸ்லாத்தில் பெண்கள் தங்களது கணவர்களுக்கு, நெருக்கடியான சமயங்களில், வரையறுக்க முடியாத, அளப்பரிய அளவிலான உதவிகளைச் செய்துள்ளனர். இதில் பிரதானமானவர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா. ரசூலுல்லாஹ்விற்கு முதல் வஹி வந்தபோது ஏற்பட்ட பயம், நடுக்கத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில், நீங்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று உறுதியளித்ததோடு, உளப்பூர்வமாக அந்த நிகழ்விலிருந்து தன்னை விலக்கி வைத்து நிச்சயமாக அல்லாஹ் கைவிடமாட்டான் உதவி புரிவான், அவனது நுழைவு வாயிலைக் கடப்பவர் அனைவருக்கும் பாதுகாப்பளிப்பான் என்று அவதானித்துக் கொண்டார்.
இஸ்லாம் வளர்வதற்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் செயல்பாடு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது.
அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம்
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!" (குர்ஆன் 14 : 37).
இந்த நிலையில், அல்லாஹ் இபுறாகிம் நபிக்கு ஆணையிடுகிறான், அங்கிருக்கும் மக்களில் புதிய தலைமுறை மக்களைக் கண்டெடுத்து ஓரிறைக் கொள்கைக்கு கொண்டு வருமாறு! பண்டைய கால வரலாறுகளில் இது போன்றதோர் சம்பவத்தை கண்டிருக்க முடியாது!
ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹஜ் செய்வோரின் தொங்கோட்டம் மூலமாக நினைவு கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் பெறும் பாடம்; இறைவனுக்காக அவர்கள் போராடினார்கள். மேலும், ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பெண்ணாக இருந்து செய்து முடித்தது. ஒரு ஆ‰ணுக்கு ஆணையிட்டு அந்த இடத்தில் ஒரு பெண்ணை வைத்து செய்துள்ள உயர்வான ஒரு நிகழ்வை வேறு எதனிலிருந்தும் எடுக்க முடியாது.
அனைவருக்கும் கல்வி புகட்டு தலையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்வின் இலக்காகக் கொண்டிருந்தார்கள். மனித சமூகத்துக்கான விழிப்புணர்வூட்டுதலாகவும், ஆணைப்போலவே, பெண்‰க்கும் கல்வி முக்கியத்துவமானது என்றும் கருதினார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் & ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உரையாடல்களை, மரபுவழிப் பதிவுகளிலிருந்து எடுத்துப் பார்த்தோமானால், கல்வி புகுத்துதலே இரு இருவருடைய பிரதான இலக்காக இருக்கும்.
புகாரி, முஸ்லிம் பதிவு ஹதீஸ்; “ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு உறங்கும்போது இடையில் எழுந்து இரவின் அமைதிச்சூழலில் தனது மனைவி ஆயிஷாவுடன் நீண்ட உரையாடல் நிகழ்த்துவார்கள்.”
நிறுவன ரீதியில் இல்லாமல், தனித்த முறையில் கல்வி புகட்டுதலை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். தொடர்ச்சியான பயணங்களின் போது தனது மனைவி ஆயிஷாவிற்குப் போதித்தார்கள். அவர்களது போதனை மூலமே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மத அறிவு மேலோங்கியது. மத அதிகாரம் பெற்றவராக விளங்கினார்கள். ஐம்பது ஆண்டுகள் அவரது மதப்பணி அமைந்திருந்தது. அவர்களது, இல்லம், மத போதனைக் கூடமாக விளங்கியது.
இஸ்லாமிய முதல் சகாப்தத்தில், ஹதீஸ்கள் மூலமாகவும், ஸஹாபிகளின் பண்புகள் மூலமாகவும் போதனைகள் நடைபெற்றன. (ஒருவர் தனது மகனுக்குப் புரியும் விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதை எழுதி வைத்துச் செல்வார். அவரது மகன் புரிந்து அதன் வழி நடந்து அதனைத் தன் மகனுக்கு எழுதி வைத்துச் செல்வார் இதனையே மரபு வழி எனக் குறிப்பிடுகின்றனர்.)
மரபு வழியாகத் தொகுக்கப்பட்டு அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு கொண்டு சேர்த்த ஹதீஸ்களில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பதிவு மட்டும் 2210 ஹதீஸ்கள். இவர்களுடைய பதிவுகளில் தான் இஸ்லாத்தின் அளப்பரிய அறிவு போதனைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தன் காலத்தில் வாழ்ந்த மத நுண்ணறிவாளர்கள், உருவா இப்னு ஸுபைர், ஸையித் இப்னு முஷ்ஷையில், அப்துல்லா இப்னு அமீர், மஸ்ருக் இக்ராமா மற்றும் அலக்கமா சட்ட நிபுணர்களுக்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மெய்யானவற்றை விளக்கினார்கள். மரபுகளின் பின்புலங்களை எடுத்துரைத்தார்கள்.
இஸ்லாமிய வரலாறுகளைப் பார்க்கும்போது, முஸ்லிம் பெண்கள் கல்வியில் மேலோங்கியிருந்துள்ளனர். முஸ்லிம் குடும்பங்கள் அனைத்திற்கும் முதல்நிலைப் பள்ளிக் கூடங்கள் (மதரஸாக்கள்) இருந்தன. 20ஆம் நூற்றாண்டு வரை, இந்த மரபு வழியைப் பயன்படுத்தினர். நவீனப் பாடத்திற்கு மாறிய பின்னர், மறந்து போயினர்.
™ ஹதீஸ்கள் பதிவு செய்தோரின் வாழ்க்கை வரலாறுகளைப் பார்த்தால் பெண்களாகவே இருப்பர் .எடுத்துக்காட்டுக்கு; இமாம் புகாரி கி.பி. 810 & 870 வரை வாழ்ந்தவர்.
“அல்ஜாமிஅஸ்ஸஹீஹ்” அதிகாரப்பூர்வமான ஹதீஸ். 14 வயதில் இமாம் புகாரி ஹதீஸ்களைச் சேகரிக்கத் துவங்கினார். காரணம், அவருடைய தாயும், சகோதரியும் அத்தகைய கல்வியை அவருக்குள் புகுத்தியிருந்தனர்.
™ இமாம் இப்னு ஜௌசி கி.பி. 1114-1200. வரை வாழ்ந்தவர். மிகப்பிரபல்யமான மத அறிஞர். இவர் தனது மாமியிடமிருந்து அடிப்படைக் கல்வியைக் கற்றார்.
அரபு மருத்துவர் இப்னு அபி உஸைபியா கி.பி. 1203&1270. வரை வாழ்ந்தவர். இவரது தங்கை, மகள் இருவரும் மருத்துவ நிபுணர்கள். அவர்கள் தான் இவரை உருவாக்கியுள்ளனர்.
™ இமாம் அபூ ஜாபர் தஹாவி. ஹிஜ்ரி 220-321. வரை வாழ்ந்தவர். மரபு வழியில் ஹதீஸ் சேகரித்தலில் பிரபலமானவர். இவர் எழுதிய ‘‘ஷாஹ் மாஅனிஅல் அக்தர்’’ அரபி மதரஸா போதனைக் கூடங்களில் பாடத்திட்டமாகத் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது. இவர் தனது நூல்களை மகளிடம் வாசித்துக் காட்டுவார் முக்கியப் பாயிண்டுகளை விளக்குவார். அதனை அவர் மகள் எழுதித் தந்தைக்குக் கொடுப்பார். குடும்பப் பெண்களில் இருந்து மதத்துக்குப் பணியாற்றி உதவியவர்களில், இவர் முக்கியமானவர். மதக்கற்றலைப் பரப்புவதில் பெண்கள் முக்கியப்பங்கு வகித்து வந்துள்ளனர்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு முழுச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
பரீரா என்ற பெண், நபியைக் கண்டு தனது கணவர் முகிஷ் இடமிருந்து தன்னைப் பிரித்து நிக்காஹ் ஒப்பந்தத்தை முறித்துவிடுமாறு கோருகின்றார்.
“பரீரா! உன் முடிவை மாற்றிக் கொண்டு கணவனுடன் ஒத்திருந்து வாழு” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுரைத்துள்ளார்கள்.
உடனே அப்பெண், இது உங்கள் கருத்தா? இறைக்கட்டளையா? எனக் கேட்டிருக்கின்றார்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது சொந்த கருத்து எனக்கூற, ஏற்க முடியாதெனக் கணவனை விட்டும் பிரிந்து சென்றிருக்கின்றார். (புகாரி ஹதீஸ்)
இஸ்ல்லமின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தனித்தும், கூட்டாகவும் பள்ளிகளில் தொழுவதற்கு அனுமதிக்கப் பெற்றிருந்தார்கள். எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பெற்றார்கள். சமூகத்தின் மேன்மையான பொறுப்புகளிலும் அங்கம் வகித்துள்ளனர்.
“ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். நல் ஒழுக்கமுடைய பெண்கள் (கணவனிடம்) விசுவாசமாகவும், பணிவுடனும் நடப்பார்கள். (கணவன்) இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் அவர்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவர்களுக்கு நல் உபசேதம் செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 4: 34)
இந்த ஆயத்தை வைத்து ஆண்கள் தனித்துவமுடையவர்கள் என்று கருதிவிடக் கூடாது. ஆண்கள், பெண்களுடைய பாதுகாவலர் என்றே ஆயத் கூறுகின்றது.
வீட்டுச் செயல்முறை நிர்வாகத்தில் மட்டுமே ஆண் பொறுப்பாளி. பெண், ஆணு‰டைய பொறுப்புகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அர்த்தமல்ல. ஆணு‰டைய பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி பெண்ணு‰க்கு இருக்குமானால், ஏற்றுச் செயல்பட எந்தத் தடையுமில்லை.
ஜுடாய் சகாப்தம் முடிவுக்கு வந்தபோது மர்யம் அலைஹிஸ்ஸலாம் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக் குழந்தை தான் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம். இறை நியமனப்படி யூத மக்களின் நபி .தந்தையில்லாமல் பிறப்பார். அவருக்கு தாயின் குணம் இருக்கும். குற்றமற்றவராக இருப்பார். தீங்கு விளைவிக்காதவராக இருப்பார்.
(ஹதீஸ் புகாரி பதிவு; “யூத மக்களிடையே சிறப்புடைய பெண் இம்ரானின் மகள் மேரி. ஜீஸஸின் தாய். என் சமூகத்தில் சிறப்புடைய பெண் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரைத்திருக்கின்றார்கள். இவர்கள் இருவருக்கு மட்டும் சிறப்பான இடம் கொகொடுத்தமைக்குக் காரணம் அவர்களது வாழ்க்கை, சுற்றுச்சூழலில் காட்டிய உயர் பண்பு. ரசூலுல்லாஹ்வுக்காக, நல் ஒழுக்க முடைய ஒரு பெண் தேவைப்பட்டார். அதனால், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா தேர்வு செய்யப்பட்டார். தன்னை, தனது சொத்து முழுவதையும் கணவரிடம் தந்தார். இறுதிவரை எந்த பிணக்கும் கொள்ளாது வாழ்ந்தார். தனது வாழ்வு, சந்தோஷம், ஓய்வு, இன்பம், துன்பம் அனைத்தையும் ரசூலுல்லாஹ்விடம் ஒப்படைத்தார்.
இஸ்லாமிய வரலாற்றுப் பெண்கள் மூலமாக நம் சமூகம் எது போன்ற பெண்களை உருவாக்க வேண்டு மென்பதில் தெளிவும், கவனமும் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
12ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்கான், கொல்லஹா இருவரும் கலீஃபா ஆட்சியாளர், அப்பாஸியாக்களைத் தாக்கினர். “சமர்கண்ட்டிலிருந்து அலிபோ” வரை அழித்தொழித்தனர். ஒரு வரலாற்றாய்வாளர் குறிப்பிட்டுள்ளார். “எந்த மதத்தை எதிர்த்து போர் புரிந்தனரோ, இறுதியில் அந்த மதத்தையே ஏற்றனர்" என்று.
இவர்களிலிருந்தும் இஸ்லாத்தை ஏற்று வந்த முஸ்லிம் பெண்கள் தான் மத போதகர்களாக விளங்கினர். அவர்களின் மதப்பணியின் தாக்கத்தால் ஐம்பதாண்டுகளில், அற்புதமாக, வெற்றி பெற்றவர்களைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.
இபுறாகிம் நபி மனைவி ஹாஜரா தன் சமூகத்தின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க உதவினார். ஆற்றல்மிக்க கதீஜா ரளியல்லாஹு அன்ஹா தன் கணவரின் பணியை மேலோங்கச் செய்தார். பின்னர் வந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா சமூக சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
முகலாய மன்னர்களில் பேரரசர்கள்; அக்பரின் தாய் மர்யம் ஜமீனி, ஷாஜஹான் மனைவி மும்தாஜ் மஹால், ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் போன்றோர், மதப்பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களை இறை பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். எவருக்கு நாட்டமிருக்கிறதோ அவர்களையே அல்லாஹ் தேர்வு செய்கிறான். சாதாரணமாக இருப்பவர் இறை நாட்டம் பெறும்போது இயந்திரத்தை இயக்கும் சக்கரமாக மாறுவார். அ‰ணுவளவு சந்தேகமும் தேவையில்லை. தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய பணி. மிகப்பெரிய வெகுமானம் உண்டு.
முஸ்லிம் முரசு, மே
|
கருத்துகள்
கருத்துரையிடுக