வெள்ளி, ஜூன் 30, 2017

இன்றைய சூழலில்முஸ்லிம்களும் தற்காப்பு கலையும்ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும், மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இருக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.ஆனால் இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்கும்  பாதுகாப்பிற்கும் பயன்படுவதில்லை என்பதையும் தாண்டி ஒழுக்க சீர் கேடான குணா திசை/ செயல் பாடுகளால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை .

وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (30)
இந்த சமுதாயத்தினர் குர்ஆனை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த சமுதாயத்தினர் மீது மிகுந்தபாசம் கொண்ட நபி(ஸல்) அவர்களே குற்றம் சுமத்தி கூறுவார்கள்என்ற கீழ் தரமான அளவிற்கு முஸ்லிம்கள் குர்ஆனுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டு வாழ்ந்தால் அல்லாஹ்வின் உதவிகள் இந்தசமுதாயத்திற்கு எப்படி வரும்?

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு :
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த காஃபிர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்திமுஸ்லிம்களுக்கு அல்லாஹ் பேருதவி புரிந்தான். அவர்களின் உள்ளங்களில் அச்சத்தை (அல்லாஹ்) போட்டான். (குர்ஆன் : 33:26, 59:2, 8:12) என்று மூன்று வசனங்களில் அல்லாஹ் கூறுவதை பார்க்கலாம்.
ஆனால் இன்று உலக அளவில் 150 கோடி முஸ்லிம்கள் இருந்தும் இத்தகையநிலை ஏன் ஏற்பட வில்லை? ஸஹபாக்களுக்குச் செய்த உதவியை போன்று அல்லாஹ் ஏன் நமக்குச் செய்யவில்லை? 
  
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ 
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!(3:200)  

1.இதற்கானக் காரணம் என்ன? 
உலக மோகம் , வரம்பு மீறி உலகத்தை நேசிப்பதுதான் .
உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும் உங்களை கொன்றிட பிற சமுதாயங்கள் (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் (மழை/ஆற்று ) வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) இருப்பீர்கள் ..
உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் வஹ்னைஏற்படுத்தி விடுவான் என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பதுஎன்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரழி), நூல்:அபூ தாவூது.3745  &  அஹ்மத்21363+ 22397
2.முன்னெச்சரிக்கை
இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு / உயர்வு ஏற்படும் விதம் கல்வி / சிந்தனை / அரசியல் / உடல் வலிமை / உடல் பயிற்ச்சி போன்றவைகளில் கை தேர்ந்து முன்னேறும் விதத்தில் அவர்களை வழி நடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை .
  
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا‏ 
நம்பிக்கையுடையவர்களே! (எதிரிகளிடம் எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள். (அல்குர்ஆன் : 4:71)

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ  لَا تَعْلَمُوْنَهُمُ  اَللّٰهُ يَعْلَمُهُمْوَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ 

(எதிரிகளான) அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும் . இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.  (அல்குர்ஆன் : 8:60)
3 . தற்காப்புக் கலை 1. கல்வி/சிந்தனை
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்கள்.  .
நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு/சிரியாக/ஸுர்யாணி மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே (அதனை பாதி மாசத்தில்) கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.ஸஹீஹ் புகாரி அத்தியாயம் & திர்மிதி & ஹாகிம்
2. தற்காப்புக் கலை : விளையாட்டு & உடற்பயிற்சி
என்னதான் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடினாலும் அவை கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு இணையாவதில்லை, உடல் நலனுக்கு ஆரோக்கியத்தையும் தருவதில்லை.
விளையாட்டின் நோக்கம் உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமல்ல.உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான்.
இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது
விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை,வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால்,விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை.
கராத்தே சிலம்பு ஆட்டம் ஓட்ட பந்தயம் போன்ற வீரக்கலைகள் பயில்வதால் கிடைக்கும் பயன்கள்
திரை கடல் ஓடி திரவியம் தேடினாலும் உடல் நலம் இருந்தாலன்றோ தேடிய செல்வத்தை அனுபவிக்க முடியும். எதையும் மறுக்கும் எத்தகைய சான்றோரும் உடல் நலத்தை மறுத்ததில்லை. உடல் நலத்தை மறுப்பார் எவரும் இல்லை என்றாலும் உடல் நலம் என்பது எது என்று அறியார் என்ன செய்வார்? இதோ அறிவீர், உயர் கலை இது, கற்று அறிவீர் நலம் அனைத்தையும்.
எதையும் தாங்கும் இதயம், கவலையற்ற வாழ்க்கை, மன உறுதி, உடல் வலிமை, நோயற்ற உடல், கூரிய சிந்தனை,தன்னம்பிக்கை, தற்பாதுகாப்பு, பலவீனருக்கு உதவும் துணிவு, ஆகியவற்றை அளிக்கிறது இந்தக் கராட்டே கலை.
இதைக் கற்க ஆர்வம் ஒன்றே தேவை. சாதி, மதம், இனம்,ஏழ்மை, ஆண், பெண் என்ற தடையில்லை. ஐந்து முதல் ஐம்பது வயது வரையிலும் எவரும் கற்றுக்கொள்ளலாம்.
4 .பெண்கள் மத்தியில தற்காப்புக் கலைகளைக் கத்துக்கணும்கிற விழிப்புணர்வு அதிகமாகியிருக்கு. கராத்தே, குங்பூ மாதிரியானவை தான் நல்ல தற்காப்பு கலை நடைமுறைபடுத்தி.இந்தக் கலையைக் கத்துகிட்டா, மனசுல தைரியத்தோட எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் தானாகவே வந்துடும்.
ஒரு சின்ன கைக்குட்டை போதும். நம்மை தாக்க வர்றவங்ககிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம்.
தனி சிலம்பு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, குழுப் போட்டின்னு ஏகப்பட்ட வகைகள் இருக்கு.
5 . எண்ணம் போல் வாழ்க்கை
3870. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
.1890. உமர்(ரலி) அறிவித்தார். இறைவா ! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து.  ஸஹீஹ் புகாரி
எனவே உமர் (ரலி) பஜ்ர் தொழுகையில் இருக்க பிற மதம் சார்ந்த ஒருவரால் குத்தப் பட்டு ஷஹீத் ஆனார்கள்.
3871. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமல் இறந்துபோனவர் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்து போகிறார்.
6 .தற்காப்புக்காண வீரவிளையாட்டு பயிற்சிக்காகஊக்குவிப்பது
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “உமரே! அவர்களைவிட்டு விடுங்கள்என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், இந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றதுஎன்று வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி
7 . தற்காப்புக் கலை : கற்றதின் பலா பலன் எதிர் நீச்சலுக்கான துணிச்சல் .
ஸஹீஹ்  முஸ்லிம் 3804. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப்போரின் போது, நான் அவர்களுக்கு முன் நின்ற சமயம் நான் பதினைந்து வயதினனாக இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்..
வீரர்களை இராணுவத்துக்கு தேர்தெடுக்கும் நேரம் ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்களை நீங்க வயசு பத்தாது. என மறுத்து விட்டார்கள். ஆனால் அவரோ மீண்டும் முயற்சிக் கிறார். நபியே(ஸல்)அவர்களே அதோ அந்த பையனை சேர்த்துக் கொண்டீர்களே . وَلَوْ صَارَعَنِي لَصَرَعْتُهُ؟ "அவரை என்னுடன் மொத விடுங்க. அவரை நான் வீழ்த்து காட்டுகிறேன் .அப்படியா قَالَ:"فَدُونَكَ، فَصَارِعْهُ காட்டு பார்க்கலாம்.என்றார்கள்.அவ்வாறே அவர் வென்றுவிட்டார். எனவே இந்த ஸமுரா (ரலி) இராணுவப் படையில் சேர்த்துக் கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக