தண்ணீர் ஒரு மாபெரும் அருட்கொடை!




நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகள் இதனால் மரணமடைந்துள்ளார்கள் நம் மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் மகத்துவத்தையும். அதனை பயன்படுத்தும் முறைகளையும் நாம் அவசியம் தெறிந்து கொள்வதோடு தற்பொழுது இந்த வறட்சி நீங்கி செழிப்பான நிலை உருவாக நாம் செய்யவேண்டியது என்ன காண்போம்.  
நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம்
5000 ஆண்டு௧ளுக்கு முன்.................
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம்குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை)அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத்துணைவியாரையும், குழந்தையையும் விட்டுவிட்டு இருகரமேந்தி துஆ செய்துவிட்டு வந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவன மணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது. எங்கும் கானல் நீர்தான். பச்சிளங் குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள், குழந்தையின் பாதத்திலிருந்து உலகின்கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமை நாள்வரை வற்றாத ஜம் ஜம்  எனும் நீரூற்றை பேரற்புதத்தை அல்லாஹ்வெளிப்படுத்தினான்.
உலகிலேயே புனிதம் நிறைந்தஒரு தண்ணீர் உண்டென்றால் அது ஜம் ஜம் தண்ணீர் மட்டும் தான். அதை பருகுபவர்களுக்கு மனநிம்மதியும், உடல்ஆரோக்கியமும், வலிமையும்தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதை இவ்வரலாறு உணர்த்துகிறது.
எனவே, தண்ணீர் என்பது மனித சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒர்அருட்கொடையாகும். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கோ தண்ணீர் என்பது மாபெரும் அருட்கொடையாகும். ஏனெனில் தண்ணீர் பந்தம் மறுமையிலும்இறை நம்பிக்கையாளனோடு தொடர்கிறது.பல்வேறு சிறப்புகளையும், மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான மாபெரும் அருட்கொடை தான் தண்ணீர்.                                மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம் சுவனத்தைப்பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம் தண்ணீர் ஒலித் தொடும் நீரோடையையோசுவனத்தின்முதற் பாக்கியமாக கூறுகின்றான்.
அபு ஹூரைரா அவர்கள்கூறுகிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான்உங்களுக்கு முன்பே சென்று கவ்ஸரின்அருகே உங்களுக்கு நீர் புகட்டக்காத்திருப்பேன். அதில் ஒரு முறை குடித்தால் தாகமென்பதே ஏற்படாது(நூல்: திர்மிதி)
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய மகத்தான அருட் கொடைகளில் தண்ணீருக்கு எப்போதுமோ முன்னுரிமை உண்டு…………
1.  தண்ணீர் அல்லாஹ்வின் ஓர் உன்னத அருட்கொடை.
عن أبي هريرة رضي الله عنه  يقول: قال رسول الله صلى الله عليه وسلم: "أول ما يقال للعبد يوم القيامة: ألم أصحح جسمك وأرويك من الماء البارد"؟ (صحيح إبن حبان : 7364)
மறுமை நாளில் ஒரு அடியானிடம் கேட்கப்படும் முதல் (கேள்வி) உன் உடலுக்கு ஆரோக்கியத்தை நான் வழங்க வில்லையாகுளிர்ந்த தண்ணீரின் மூலம் நான் உன் தாகம் தீர்க்க வில்லையா ? என்பதேயாகும். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 7364)                                                                                                                              2.  தண்ணீரின் முக்கியத்துவம்.                                                                                                  தண்ணீர் உயிர்களை படைப்பதற்கு முக்கிய ஆதாரமாகும்.
    وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌  اَفَلَا يُؤْمنون
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் (21-30)
 وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي َلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஊர்ந்து செல்லக்கூடிய ஒவ்வொன்றையும் தண்ணீரிலிருந்தே அல்லாஹ் படைத்தான். அவற்றில் சிலதன்வயிற்றால்ஊர்ந்துசெல்கின்றன.அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீது சக்தி பெற்றவன்.(24:45)
 அபூஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் உங்களை காணுகையில் என் உள்ளம் மகிழ்கின்றது. என் கண் குளிச்சியடைகின்றது. ஆதலால் தாங்கள் எனக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பொருளும் தண்ணீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்கள்.                   (அஹ்மத்: 7919)      
2.  தண்ணீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மட்டுமே கிடைக்கப் பெறும் ஜீவாதாரமாகும்.
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ  أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ  لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் குடிக்கின்ற தண்ணீரை கவனித்தீர்களாஅதனை நீங்கள் இறக்கினீர்களாஅல்லது நாம் இறக்கினோமாநாம் நாடினால் அதனை (குடிக்கமுடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். எனவே நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?(56;67,68,70)
‌وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ 
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்துஅதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (15:22)
3.   உயிரற்ற பூமியை தண்ணீரைக் கொண்டே அல்லாஹ் செழிப்படையச் செய்கின்றான்.
وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ‌ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ‏ 
இன்னும்அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம். (25:48)
لِّـنُحْیِۦَ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ كَثِيْرًا 
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும்ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்(25:49)
 4.  தண்ணீரை அல்லாஹ் எப்படி தேக்கி வைத்துள்ளான்?
وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌ 
மேலும்வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கிஅப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். (23:18)
  பனிப்பாரைகளாக  நிலத்தடி நீராக!  ஆறுகளாக!  ஊற்றுகளாக ……….
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ
நீர் பார்க்கவில்லையாஅல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கிஅதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; ( 39:21)
قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ                 (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால்அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்என்பதை கவனித்தீர்களாஎன்று (எனக்கு அறிவியுங்கள்). ( 67:30)      5.  மனிதன் தண்ணீரை எப்படி தேக்கி வைத்துள்ளான்?                        1.  அணைகள்  2.ஏரிகள்3.கண்மாய்கள்4.  குளங்கள்5.  குட்டைகள்.
6.  தண்ணீரை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும்?                              1.  தேவைக்கேற்ப தண்ணீரை உபயோகிக்க வேண்டும். வீண்விரயம்செய்யக்கூடாது.
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
உண்ணுங்கள். பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புக்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு மாறு செய்தவனாவான்.                              2.  எஞ்சிய தண்ணீரை தேவையுடையோருக்கு வழங்க வேண்டும்.
'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால் அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு தேசத்தை நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களாகவும் ஒரு மாநிலத்தை பல நகரங்களாகவும் நாமே பிரித்து வைத்து விட்டு ஒரு மாநிலத்தில் பிறக்கும் தண்ணீரை அது இயல்பாக வழிந்தோடுகின்ற மாநிலங்களுக்கு செல்ல விடாமல் அணைகளின் மூலம் தண்ணீரை தடுத்து வைப்பதும் தர மறுப்பதும் மாபெரும் குற்றம். இக்குற்றத்தை பிற மாநிலத்தில் செய்யாதிருந்தால் பல விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள்     3.  தண்ணீர் தேவையை போக்க உதவ முன் வரவேண்டும்.                           உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரூமா கிணற்றை வாங்குபவர் யார்அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் அதை வாங்கி (முஸ்லிம் களின் நலனுக்காக வக்ஃபு செய்து) விட்டேன்.                                                                      4.  தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.                                சாபத்திற்குரிய மூன்று இடங்களை அஞ்சிக் கொள்ளுங்கள். (அவைகள்) நீர்வழித்தடங்கள். நிழல் .மத்திய பாதைகளாகும். (இவைகளில் அசுத்தம் செய்வதை தடைவிதித்தார்கள்)                                                                              5.  அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). 14:7.                                                                        6.  எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்?                     1.  தனி மனிதன் தண்ணீரை வரம்பு மீறி பயன்படுத்துகின்றான்.      2.  தண்ணீர் சேகரிப்பதற்காக நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட நதிகள் முதலிய நீராதாரங்களிலுள்ள மணல்களை அள்ளி அவைகளை  வீட்டு மனை , அடுக்குமாடி வீடுஎன மாற்றி விட்டார்கள்.                                                                               3.  தண்ணீரை இயற்கையாக சுத்திகரிக்கின்ற மணல்கள் லாரி லாரியாக அள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.                                                                                                4.  உயிர் வாழ்வதற்கு ஜீவதாரமாக உள்ள விவசாயத்தை விட மனித உயிர்களுக்கு வேட்டு வைக்கின்ற பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தண்ணீரை அதிகார வர்க்கத்தினர் தாரை வார்க்கின்றார்கள். பொதுமக்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.                                            5.  நிலத்தடி நீரை மிதமிஞ்சிய அளவில் அள்ளி நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

6.   இன்றைக்கு ஒருநாளைக்கு மட்டும், 3 கோடி லிட்டர் மது ஆலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்கிறார்கள். மது ஆலைகளுக்கு தருகின்ற தண்ணீரை சென்னை மக்களுக்கு தந்தாலே போதும்.

தி.மு..வினர் நடத்தும் மது ஆலைகள் அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு தினமும் 6.21 லட்சம் லிட்டர் முதல் 9 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீரை உறிஞ்சும். சராசரியாக ஒரு ஆலைக்கு 7 லட்சம் லிட்டர் என வைத்துக் கொண்டாலும் அடுத்த 10 மாதங்களில் 105 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும், சுற்றுச்சூழலும் மிக மோசமாக பாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 16.2 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்படுகிறது. இதில் 50 விழுக்காட்டை தி.மு.. சார்பு ஆலைகள் தான் தயாரிக்கின்றன. அப்படியானால் அடுத்த 10 மாதங்களில் 24.30 கோடி லிட்டர் மது தி.மு.. மது ஆலைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் சுமார் 6,800 மதுக்கடைகள், 44,000 ஊழியர்கள், 48 சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் மது விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம். நாட்டிலேயே மதுவால் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் என்ற பெருமையையும்(?) தமிழகமே தக்க வைத்துள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மதுபான ஆலைகள் நடத்துவதே காரணம் ஆகும்.
தமிழகத்தில் உள்ள11 அதில் ஐந்து மதுபான ஆலைகளில், நான்கு ஆலைகள் திமுக மற்றும் அதிமுக புள்ளிகளுக்கு சொந்தமானதாகும்.
இதில் மிடாஸ் கோல்டன் என்ற மதுபான ஆலை சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமானது.
எலைட் டிஸ்டிரில்லரீஸ் என்ற மதுபான ஆலை திமுக மமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது.
கோல்டன் வாட் என்ற மற்றொரு ஆலையும் திமுகவின்  மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உறவினர்களுக்கு சொந்தமானது.
எஸ்என்ஜே டிஸ்டிரில்லரீஸ் என்ற மதுபான ஆலை திமுகவிற்கு நெருக்கமான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமானது.
ஊற்று நீர் போல பீறிட்டு கொட்டும் இந்த வருவாயை இழக்க அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தயாராக இல்லை
8.  தண்ணீர் இல்லையென்றால்?                                                                                   தண்ணீர் இல்லையென்றால் மனிதன் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் வழி இன்றி தவிக்கும் நிலையும் அதன் பின் மரணத்தை தழுவும் நிலையும்தான் ஏற்படும். எனவேதான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகவே நிகழும் என்று கூறுகின்றனர். இதற்கு முன்னுதாரணமே தமிழக விவசாயிகளில் மரணங்கள்.
மழைத்தொழுகை தொழுவோம்                                                                                                இந்த வறட்சிநிலை மார இறைவனிடம் மழைத் தொழகை தொழுது துஆச் செய்ய வேண்டும்.               
தண்ணீரின் மான்பினை அறிந்து அது தொடர்ச்சியாக தங்கு தடையின்றி நமக்கு கிடைத்திட நம் முன்னோர்கள் அமைத்த நீராதங்களை பேணிப் பாதுகாத்து விவசாயத்தை செழிப்படையச் செய்து நம் ஜீவாதாரத்தைப் பாதுகாப்போம். நம் சந்ததிகளும் வாழ தகுதியான நிலையில் தேசத்தை விட்டு வைப்போம்


.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001