இரவு தொழுகை "தராவிஹ்" கடமையா! கடமையில்லையா!!
நோன்பு மாதம் வந்துவிட்டால் இரவு தொழுகைக்கு நாம்கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற நல்ல விசயங்களுக்கு கொடுப்பதுயில்லை இரவு தொழுகைக்கு முக்கியத்துவம் அனுமதிக்க பட்டவையா?இல்லையா? நினைத்தல் வேதனையான உள்ளது நாம் ஏன் இன்னும் அறியாமையில் இருந்து கொண்டுள்ளோம். நாம் அனைவரும் எதற்காக தொழுகிறோம்? நன்மைகிடைக்கும் என்ற நோக்கில் தான். ரமலான் மாதம் நாம் செய்யும் ஒரு நன்மைக்கு ஆயிரம் நன்மைகள் என்பது அனைவர்களும் அறிந்த ஒன்றுதான். நாம் செய்யும் தவறுகளால் இறைவன் எப்படி நமக்கு எப்படி நன்மை கிடைக்கும் தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் எப்படி இறைவன் மன்னிப்பான் சுன்னத் ஜமாஅத்என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் அதுவும் நபிவழிப்படி இல்லை. வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. ...