பெண் சொத்துரிமை
மகளிர் நாள் ஒவ்வோர் ஆண்டும் (மார்ச் 8 இல்) கொண்டாடப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது இஸ்லாம். இஸ்லாமிய சொத்துரிமை சட்டங்களைப் பற்றி பல நூல்கள் எழுதலாம். விரிவான விளக்கங்களுக்குச் செல்லாமல் எந்த சூழ்நிலையில் ஆழ அறிவிக்கும் சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டன என்பதை மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தோழர் அவ்ஸ் பின் தாபித் அன்சாரி இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகள்களும் இருந்தனர். இறந்தவரின் சிறிய தந்தையின் இரு மகன்கள் ஸýவைது, அர்பஜா ஆகிய இருவரும் சொத்துக்களை எடுத்துக் கொண்டனர். இறந்த அவ்ஸ் பின் தாபித் அன்சாரியின் மனைவிக்கோ மகளுக்கோ சொத்தில் எள்ளளவும் கொடுக்கவில்லை. உண்ணும் உணவிற்கே வழியின்றி வாடிய அவ்ஸின் மனைவி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்பொழுது திருக்குர்ஆனின் 4- 7 ஆவது வசனம் அருளப்பட்டது. ""பெற்றோர்களோ உறவினர்களோ விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பாகமுண்டு. பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகம்''. இச் சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட