இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்காக ...

    ''இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர , (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க...

ரமளானில் நமது நிய்யத்தை சீராக்கிக்கொள்வோம்

  நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தைபொருத்தே அமைகிறது நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மைகொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக்கொள்ளவேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பது தான். இமாம் இப்னுல் முபாரக் رحمه الله அவர்கள் கூறினார்கள் எத்தனையோ அற்பமான செயல்களைக்கூட நிய்யத் மிகப்பெரியதாக மற்றிவிடுகிறது எத்தனையோ மிகப்பெரிய செயல்களைக்கூட நிய்யத் அற்பமானதாக மாற்றிவிடுகிறது. சரியான நிய்யத் தான் அச்செயலை நன்மையானதாக மாற்றும் எனவே நாம் நிய்யத்தை சீராக்குவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி رحمه الله அவர்கள் கூறினார்கள் என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகிட்ச்சை அளிப்பதற்கு சிரமப்பட்டதைப்போன்று வேறு எதற்கும் நான் சிரமப்பட்டதில்லை ஏனெனில் எனது நிய்யத் அடிக்கடி புரண்டுகொண்டே இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் صَلّ...

ரமளான்: தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

  ரமழான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விஷயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். இதன் காரணமாக ரமழானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவ தோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் மாறி விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. ஆகையால், கீழே குறிப்பிட் டுள்ள செயல்களில் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். 1. தராவீஹ் பிறகு கண் விழித்தல்                                                                        தேவையில்லாமல் இரவில் வெகுநேரம் விழித்திருக்கி றோம். தராவீஹ் தொழுகைக்குப் பிறகும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரங் கழித்து தூங்கச் செல்கிறோம். இன்னும் சிலர் ஸஹ்ரு வரை தூங்காமல் இருந்துவிட்டு ஸஹ்ரு செய்த பின்பே தூங்கப் போகிறார்கள்...

இறைவனின் பொருத்தத்தை பெறுவோமா?

    முதியோர் இல்லம் தவிர்!                                                                                                         நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இது உண்மை! உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான். இதைப் புறக்கணித்தால் உங்களுக்கு இவ்வுலகிலும் அதற்கான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. மறுமையிலும் நரக நெருப்பின் வேதனை உண்டு. o பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட...

குர்ஆனை எப்படி மனப்பாடம் செய்வது?

  اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ அல்லாஹ் குர்ஆனி ல் கூறுகின்றான் : நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 15:9 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . (ஆதாரம்: திர்மிதி) குர்ஆனை வழி வழியாகப் பாதுகாத்து வரும் சங்கிலித் தொடரின் ஒருவரா௧ நாம் அமைவது ஒரு பெரும் பாக்கியமல்லவா? நாம் ஏன் அந்தப் பாக்கியசாலியாக ஆகக் கூடாது? நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளார்கள். தொழுவிப்பதற்கு முதல் தகுதியே குர்ஆனை மனனம் செய்வது தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார். நூல்: முஸ்லிம் 1077 மக்களுக்கு வழி நடத்துவதில் மட்டும் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர...

இமாமத்கான சட்டமும், ஒழுங்குகளும்

  இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: அإِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَاஞ صحيح البخاري மாலிக் இப்னு ஹுவைரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி: 630, முஸ்லிம்) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: அإِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْஞ صحيح مسلم நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ...