பெண்களுக்காக ...

 


 

''இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;

தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது;

இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்''. (அல்குர்ஆன் 24: 31)

 

நம் பெண்கள் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். கல்வியிலும்,குடும்பத்திலும், அலுவலகங்களிலும் தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள்.   

அல்ஹம்துலில்லாஹ்...

எனவே இனி நாம் வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் பேச போகிறேன்..  

 

  1. உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும்.ரொம்ப 'டைட்டா'கவும்   இல்லாமல் அதிக 'லூசா'கவும் இல்லாமல்,கண்களை உறுத்தாமல் இருக்கட்டும்.

 2. உடலை முழுக்க மூடும் 'புர்கா' போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும்.

 3. அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ தவிர்க்கப் பாருங்கள்.

 4. பிறரிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை.ஆனால், அது ஒரு கண்ணியமிக்க நட்பாக மட்டுமே இருக்கட்டும்.மாறாக,தேவையில்லாத 'வெட்டி' அரட்டைகளுக்கு  இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்.

5. யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால், அவர்களிடம் கடுமையாக நடக்க தயங்காதீர்கள்.

6. புன்னகை முகமாக இருங்கள். ஆனால்,தேவையில்லாமல் சிரிக்கும்,வரையில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக இருக்க வேண்டாம்.

7. நன்பர்களைப் பற்றி பெற்றோரிடம் எந்த ஒளிவுமறைவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் அவர்களை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வையுங்கள்.அது அவர்களை உங்களுடன் வரைமுறையோடு பழகச் செய்யும்.

8. 'late night' போன்களையும் 'sms' களையும் தவிருங்கள். வீணாக போன் பேசுவது. அதிகமாக முகநூலில்.. வாஸ்ட்அப்...போன்ற பயன்பாட்டை விட்டு விலகி இருந்தால் உங்கள் ஈமான் பாதுகாப்பாக இருக்கும்.

9. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக தங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்,பிரச்சனைகளை பொறுமையுடன் கையாள்பவராக இருங்கள்.

10.எப்போதும் எங்கும் அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டே இருக்கின்றான்

என்பதை மறக்க வேண்டாம்.

மொத்தத்தில், அல்லாஹ் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர ….தீயபெண்ணாக அல்ல.

எனவே இனி  மேற்கண்ட விஷயங்களை நானும் நீங்களும் முழுமையாக பின் பற்றி அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூடிய பெண்களாக மாற துஆ செய்து என் உரையை நிறைவு செய்கின்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001