ரமளான்: தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

 


ரமழான் மாதத்தில் நாம் மிகவும் கவனக்குறைவாக இருப்பதால் பல விஷயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். இதன் காரணமாக ரமழானுடைய நன்மைகளை நாம் இழந்து விடுவ தோடு இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாகவும் மாறி விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. ஆகையால், கீழே குறிப்பிட் டுள்ள செயல்களில் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.

1. தராவீஹ் பிறகு கண் விழித்தல்                                                                       தேவையில்லாமல் இரவில் வெகுநேரம் விழித்திருக்கி றோம். தராவீஹ் தொழுகைக்குப் பிறகும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரங் கழித்து தூங்கச் செல்கிறோம்.
இன்னும் சிலர் ஸஹ்ரு வரை தூங்காமல் இருந்துவிட்டு ஸஹ்ரு செய்த பின்பே தூங்கப் போகிறார்கள்.

அதேபோல, பகலில் சகட்டுமேனிக்கு தூங்குகிறோம். நோன்பிருக் கிறோம் என்னும் போர்வையில் பெரும் சோம்பேறிகளாக மாறிவிடுகிறோம்.

இதே ரமழான் மாதத்தில்தான் பத்ருப் போரும் மக்கா வெற்றி யும் நடந்துள்ளன. நம்மைப்போன்ற சோம்பேறிகளால் இந்த போர்க் களங்களை எல்லாம் சந்திக்க முடியுமா? என கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

2. லுஹர் தொழுகையை விடுதல்                                                                                  பகலில் ஒருசிலர் லுஹர் தொழுகையைக் கூட தொழாமல் தூங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சுபுஹ் தொழுகையைக் கூட தொழாமல் ‘ஸஹ்ரு’ செய்த களைப்பில் தூங்கப் போய் விடுகிறார்கள். நோன்புக் காலத்தில் லுஹர் தொழுகையும் அசர் தொழுகையும் பரிதாபமான நிலைக்கு ஆளாகி விடுகின்றன.                                                                                                                                               3. பள்ளிவாசல் ஏற்பாடு செய்யாத ஆன்மாவிற்கான விருந்து

உண்ணுவதிலும் குடிப்பதிலும் பெரும் பணத்தைச் செலவு செய்கிறோம் என சொல்வதோடு அதற்காக ஏகப்பட்ட நேரத் தை வீணடிக்கிறோம்.பள்ளிவாசல்களில் கூட நோன்பாளி களுடைய ‘தர்பியா’ வுக்கு முக்கியத்துவம் தருவதைக் காட்டி லும் அவர்களுக்கு சிறப்பான இஃப்தார் உணவுகளைத் தயாரிப் பதிலேயே கவனம் செலுத்துகின்றன.

ஸஹாபாக்கள், தாபிஈன் கள் காலத்தில் ஈமானுக்கும் தக்வாவிற்கும் பள்ளிவாசல்களில் முக்கியத்துவம் தரப்படுமாம்.
ரமழான் வந்துவிட்டால் இஃப்தார் விருந்துகள் களைகட்டு கின்றன. இப்போது நிலைமை இன்னும் பலபடிகள் மேலேறிச் சென்று ஸஹ்ரு விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அளவு ஆகிவிட்டது.

இரவின் கடைசிப் பகுதியில் இறைவனுக்கு முன் னால் மண்டியிட்டு தொழுது, அழுது வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக விருந்துகளை ஏற்பாடு செய்வதி லும் விருந்துக்கு கிளம்பிச் செல்வதிலும் நாம் நேரத்தைச் செல விடுகிறோம்.

ரமழான் மாதத்தில் மற்ற மாதங்களை விட சற்று அதிக மாகவே நமக்கு உணவுச் செலவுகள் ஆகின்றன. கவலையோடு கவனத்தைப் பதிக்க வேண்டிய விஷயம் இது.

இறைவனின் நாட்டத்தால் இவ்வாண்டு இதில் நாம் தப்பிப் பிழைத்துக் கொண்டோம். கஞ்சி விநியோகமும் இஃப்தார் விருந்துகளும் சஹ்ரு அழைப்புகளும் இவ்வாண்டு இல்லாமல் போய்விட்டதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி.

4.பொழுதை போக்கும் நேரங்களா ரமலான்?

ரமழான் மாதம் இபாதத்துக்கான மாதம் என்பதே நம் நினைவில் இருப்பதில்லை. நோன்பிருந்து பட்டினி கிடக்கி றோம் என்பதையே பெரிதாக நினைத்துக்கொண்டு ஏகப்பட்ட நேரத்தை வீணடித்து விடுகிறோம்.

உறக்கம், அலட்சியம், தேவையற்ற பொழுதுபோக்கு, டிவி, அரட்டை என எப்படி எப்படியோ நம்முடைய ரமழான் மாதத்தின் பொன்னான நேரம் கழிந்து விடுகின்றது.

‘நோன்பு வைத்துக் கொண்டு தூங்கினாலும் நன்மை’ என அதற்கும் ஒரு நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். மற்ற நேரங் களில் எக்கச்சக்கமாக சாப்பிடுவதால் ரமழானில் சாப்பிடாமல் இருப்பதே பெரும்பாடாக இருக்கின்றது. ‘தொழுவது பிரச்ச னையே இல்லை. நோன்பு வைப்பதுதான் பிரச்சனை’ என பலரும் சர்வ சாதாரணமாகச் சொல்வதைப் பார்க்கலாம்.

5. சமையல் களைப்பில் பெண்கள்

நம்முடைய பெண்களின் நிலை படுமோசம்.
அவர்களை நாம் சமையலறைவாசிகளாக ஆக்கிவிட்டோம். இஃப்தாருக் கான ஏற்பாடுகள், ஸஹ்ருக் கான ஏற்பாடுகள் போன்றவற்றைச் செய்தே அவர்கள் களைத்துப் போய்விடுகிறார்கள்.

இஃப்தார் முடிந்ததும் இரவு உணவிற்கான தயாரிப்புகள் வேறு அவர்களை படுத்துகின்றன. கடைசியில் அவர்கள் இஷா தொழுவதே பெரும் சாதனையாக மாறி விடுகின்றது. இரவுத் தொழுகை யைப் பற்றி அவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.

6. ஊரை சுற்றும் வாலிபர்கள்
இளைஞர்கள் ரமழான் மாதத்தில் நன்மைகளைச் சேர்க்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடாமல் ஊர் சுற்றுவதிலும் கூடி நின்று கதை பேசுவதிலும் காலத்தைக் கழித்துவிடுகிறார்கள்.
ரமழான் மாதம் மறுபடியும் ஒருமுறை நமக்குக் கிடைப்பதே சந்தேகம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்னும் வைராக்கியத்துடன் விவேகமாக உழைப்போர் யாருமில்லை.

7. அமல்களை மறக்கடிக்கும் வியாபாரம்
இறைவன் ஈமானைப் பற்றியும் இஸ்லாமிய வாழ்க்கை யைப்பற்றியும் கூறும்போது ‘சிறப்பான, நஷ்டமடையாத வியாபாரம்’ என சொல்கிறான். இதைவிட பெரிய வியாபாரம் வேறு எதுவும் கிடையாது.

நம்முடைய வியாபாரிகளுக்கு இது உறைப்பதேயில்லை. அதுவும் குறிப்பாக ரமழான் மாதத்தின் கடைசி இரவுகளில் நன்மைகளைக் கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு உலக லாபங்களை ஈட்டுவதிலேயே முனைப்பு காட்டுகிறார்கள். லைலத்துல் கத்ரு இரவை விட அன்றைக்கு கடை வருமானத்தில் கிடைக்கும் தொகை அவர்களுக்கு பெரி தாகக் காட்சி அளிக்கின்றது.

8. புறம் பேசுதல்

நோன்புக்கால பகல்பொழுதுகளில் நாம் பேசும் சாக்கில் பலபேருடைய ‘கறி’யைச் சாப்பிடு கிறோம். ஆம், பலபேரைப் பற்றி புறம் பேசுகிறோம். அவதூறுகளை வாரி இறைக்கிறோம்.
பட்டினி கிடந்தும் நமக்கு நோன்புக்கான நன் மைகள் எதுவும் கிடைப்பதில்லை. அதற்கு மாற்றமாக, பாவமும் இறைவனு டைய கோபமும்தான் கிடைக்கின்றது.

9. அலட்சியம் செய்யப்படும் தொழுகைகள்

இரவுத் தொழுகையில் நாம் அவ்வளவாக கவனம் செலுத் துவதே இல்லை. அசட்டையாக இருந்து விடுகிறோம். வழக்க மாக வருவோர்கூட நேரத்தோடு வருவதில்லை. ஒன்றிரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு போய்விடுகிறோம்.

10.அமல்களை மறக்கடிக்கும் சஹர் நேர டிவி நிகழ்ச்சிகள்

ரமழான் காலத்தில் டிவிக்களில் பல்வேறு அறிஞர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தயவுசெய்து இவற்றில் எதனையும் காணாதீர்கள். என்னதான் மிகப்பெரிய அறிஞர் உரையாற்றினாலும் டிவியை ஆன் செய்யாதீர்கள்.

உலகத்தி லேயே மிகப்பெரிய அறிஞரின் உரையைக் கேட்பதைக் காட்டி லும் உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனுக்கு முன்னால் கைகட்டி நின்று புனித ஸஹ்ரு நேரத்தில் நாம் கேட்கும் துஆக்களுக்கு பெரும் சிறப்பு இருக்கின்றது.

ஆகையால், ஸஹ்ரு உணவு சாட்பிட எழுந்திருக்கும்போது முடிந்தவரை இரண்டு ரகஅத்களாவது தொழுங்கள். நாம்தான் தராவீஹ் தொழுது விட்டோமே என அசட்டையாக இருந்து விடாதீர்கள். என்னதான் முன்னிரவில் தராவீஹ் தொழுதா லும் பின்னிரவில் எழுந்து ஸஹ்ருக்கு முன் இரண்டு ரகஅத் தொழுது துஆ கேட்பதன் சிறப்புக்கு வேறு எதுவுமே ஈடாகாது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001