இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய பார்வையில் ஆசிரியர்கள்

     28/05/21   சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரை பற்றி தான் இப்படி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு எழுதியுள்ள கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அங்கு படித்த மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகிறார்கள். இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஒன்று நெஞ்சை பதற செய்வதாக இருக்கின்றன. அக்கவுண்டன்சி (கணக்குபதிவியல்) மற்றும் வணிக பாடம் நடத்துபவர் ஆசிரியர் ராஜகோபாலன். 20 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருக்கிறார். ஆனால் மாணவிகளுடன் அவர் மிக மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார்.   பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களை பயன்படுத்தியுள்ளார். ஆபாச கமெண்ட் பாலியல் தொடர்பாக கமெண்ட் அடித்துள்ளார் . ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான உன்னத உறவை கெடுத்துள்ளார் ராஜகோபாலன். மாணவிகளிடம் பாடம் தொடர்பாக பேசும்போது, இரட்டை அர்த்தத்திலும் பாலியல் தொடர்பாகவும் பேசி அவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துள்ளார் . மாணவிகளின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக கமெண

கற்பித்தல் ஓர் கலை

  மாணவ  சமூகத்திற்கு அறிவு, ஆற்றல், ஊக்கம் தன்னம்பிக்கை என அனைத்தையும் ஒரு சேரக் கற்றுக்கொடுத்து அவனை பண்பாடும் பக்குவமுள்ளவனாகவும், அறிஞராக, மேதையாக உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் உயரிய பொறுப்பு மிக்க பணியே ஆசிரியப் பணியாகும். கற்பித்தல் பணியை இஸ்லாம்  ஒரு தொழில் என்பதற்கு பதிலாக ஆசிரியம் ஒரு சிறந்த நற்பணி, அது ஈருலகிலும்  பயனளிக்கும் சேவை என கருதுகின்றது. ஏனெனில்,  நபி  ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்,  ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரை விட்டும்  அவர்களது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும். மூன்று விடயங்களைத் தவிர. அதில் ஒன்று; அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி"  (புகாரி ) கற்பித்தல் ஒரு புனிதமான பணி. இது நபிமார்களின் பணி. நபி (ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தும் போது "நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள். அல்லாஹ் நபி ( ஸல் ) அவர்களை அறிமுகம் செய்யும் போது " மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக்கொடுப்பவர்" என அறிமுகம் செய்கின்றான்.  (62: 2)  உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் ஆசான்களாக திகழ்ந்து தம் பணி

ஆசிரியர்களின் முன் மாதிரி

  அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. ஆசிரியர் தொழில் ஓர் உன்னதமான தொழில். மனித உறவுகளோடு உறவாடும் தொழில். இதனால்தான் “சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது ஆலோசகராக ஒழுங்கமைப்பவராக ஊக்குவிப்பவராக உதவுபவராக இருக்க வேண்டும்” என கல்வியல் அறிஞரான லூயிஸ் கோகலே என்பவர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்கள் பொறுப்பாக செயல்படும் போதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம். ஆசிரியர் வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் போது பாடங்கள் பற்றிய அறிவு மாத்திரம் ஆசிரியருக்கு போதுமானதல்ல பாடத்துடன் சம்பந்தப்பட்ட எவ்வளவு தேர்ச்சியுள்ளதோ அதேபோல் மாணவர்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்ப சூழல் மன நிலை கிரகிக்கும் தன்மை என அவர்களை விளங்கிக்கொள்ளும் நிலையினையும் அடைய வேண்டும். கிரகித்தல

அமல்களில் சோம்பல்!

  சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல் ! முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல் ! முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல் !   சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல் , உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள் . சோம்பல்மிக்கவர்கள்தானும்சலித்துக்கொள்வார்கள் ;   மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள் . இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம் .   இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி , சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம் . அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது , இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான் . யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘ நயவஞ்சகர்கள் ’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான் .   அல்லாஹ் கூறுகின்றான் :   اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌   وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا