இஸ்லாமிய பார்வையில் ஆசிரியர்கள்

 

  28/05/21

 

சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரை பற்றி தான் இப்படி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு எழுதியுள்ள கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அங்கு படித்த மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.

இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஒன்று நெஞ்சை பதற செய்வதாக இருக்கின்றன.

அக்கவுண்டன்சி (கணக்குபதிவியல்) மற்றும் வணிக பாடம் நடத்துபவர் ஆசிரியர் ராஜகோபாலன். 20 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருக்கிறார்.

ஆனால் மாணவிகளுடன் அவர் மிக மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

 பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களை பயன்படுத்தியுள்ளார்.

ஆபாச கமெண்ட் பாலியல் தொடர்பாக கமெண்ட் அடித்துள்ளார் . ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான உன்னத உறவை கெடுத்துள்ளார் ராஜகோபாலன்.

மாணவிகளிடம் பாடம் தொடர்பாக பேசும்போது, இரட்டை அர்த்தத்திலும் பாலியல் தொடர்பாகவும் பேசி அவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துள்ளார் .

மாணவிகளின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளார் ராஜகோபாலன்.
மாணவிகள் பெற்றோர் புகார் பள்ளி திறந்திருந்தபோது மாணவிகளை தவறான நோக்கத்துடன் உடல்ரீதியாக தொட்டு பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் புகார் சொல்லியுள்ளனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, அவர்கள், புகார் கொடுத்தும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் வெறும் வாய் வார்த்தையில் ராஜகோபாலனை, கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சேட்டைகளை தொடர்ந்துள்ளார். மேலும், இனிமேல் புகார் கொடுத்தால் பாஸ் செய்ய முடியாது என்று மாணவிகளை மிரட்டி உள்ளார்.

ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போது, இடுப்பில் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வேறு எந்த உடையும் உடுத்தாமல் மாணவிகள் முன்பாக தோன்றியுள்ளார்.
மாணவிகள் வாட்ஸப் நம்பருக்கு அவர்களின் உடல் அமைப்பு அல்லது பற்றி கமெண்ட் செய்து மெசேஜ் அனுப்பியுள்ளார்.

 தன்னுடன் சினிமா பார்க்க வரும்படி கூட மெசேஜ் அனுப்பி உள்ளார். ராஜகோபாலன் கையில் மாணவிகளின் தொலைபேசி எண்கள் அவர்களின் பெற்றோர்கள் தொலைபேசி எண்கள் முகவரி எல்லாம் இருக்கிறது. இவர்களின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பொறுப்பு அவரிடம் இருக்கிறது. எனவே வெளியே புகார் தெரிவித்தால் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக மிரட்டி வருகிறார் ராஜகோபாலன்.
போஸ்கோ சட்டத்தின்படி குற்றம் ராஜகோபாலனின், இந்த நடவடிக்கை, முன்னாள் மாணவர்கள் ஆகிய எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவரது நடவடிக்கைகள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2012 கீழ் தண்டனைக்குரிய குற்றம். எனவே நாங்கள் பள்ளி மாணாக்கர்களுக்கு முழுவதும் துணை நிற்கிறோம். இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

மாணவிகள் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் உடனடியாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்து விசாரணை துவங்கப்பட வேண்டும். அவர் எந்த ஒரு வகுப்பும் எடுக்காமல் தடுக்க வேண்டும். ஒருவேளை விசாரணை முடிவதற்கு முன்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால் விசாரணை கமிட்டி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் வெளியே தெரியாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பை பள்ளி நிர்வாகம் கையிலெடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. இவ்வாறு முன்னாள் மாணவர் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

 

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ؕ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ

 (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”(அல்குர்ஆன் 39:9)

 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பலதகுதிகளைஉயர்த்துவான்.நீங்கள்செய்வதைஅல்லாஹ்நன்கறிந்தவன்.(அல்குர்ஆன் 58:11)

எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நல்லவர்களை  உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரத்தை பெற்றுத்தரும் கல்வியை போதிக்கும் கல்விக்கூடங்கள் தரமான பள்ளிக்கூடங்களே ! அறிவை வளர்க்கும் இப்படிப்பட்ட தரமான பள்ளிக்கூடங்களில், அறிவை அடகு வைக்கும் விதமான வணக்க வழிபாட்டு முறைகள், அறிவிற்கு இடமளிக்காமல் வலுக்கட்டயமாக பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படும் வணக்க வழிபாட்டு முறைகள், மூட நம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகள்,சமூகத்தில் குரோதத்தை வளர்க்கும் விதமான பாடத்திட்டங்கள் என கேடு விளைவிக்கும் அம்சங்களை எந்த பள்ளி பெற்றுயிருந்தாலும் அது தரமான பள்ளிக்கூடமாக ஆகாது. மாறாக கல்வி என்ற பெயரால் தங்களுடைய சரக்குகளை விற்கும் தெருவொரு அங்காடிகளை போன்றது தான் இப்பள்ளிக்கூடங்கள்.

எனவே, பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்கும் போது அறிவை வளர்க்கும் கூடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவிற்கு பொருத்தமில்லாத காரியங்களை போதிக்கும் மடமை கூடங்களை புறக்கணிக்க வேண்டும்.

மாணவ  சமூகத்திற்கு அறிவு, ஆற்றல், ஊக்கம் தன்னம்பிக்கை என அனைத்தையும் ஒரு சேரக் கற்றுக்கொடுத்து அவனை பண்பாடும் பக்குவமுள்ளவனாகவும், அறிஞராக, மேதையாக உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் உயரிய பொறுப்பு மிக்க பணியே ஆசிரியப் பணியாகும்.

 

முன்மாதிரி ஆசியர்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” ஒரு மனிதர் மரணித்துவிட்டால் அவரை விட்டும் அவரது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று விடயங்களைத் தவிர அதில் ஒன்று அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி (புஹாரி)

கற்பித்தல் ஒரு புனிதமான பணி. இது நபிமார்களின் பணி. நபி (ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தும் போது "நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள்.

அல்லாஹ் நபி ( ஸல் ) அவர்களை அறிமுகம் செய்யும் போது " மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக்கொடுப்பவர்" என அறிமுகம் செய்கின்றான்.  (62: 2)

 உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் ஆசான்களாக திகழ்ந்து தம் பணியை நிறைவேற்றினார்கள். அத்தகைய சிறப்பான பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கண்ணியத்திற்கு உரியவர்களே!

ஆசிரியர் தொழில் ஓர் உன்னதமான தொழில். மனித உறவுகளோடு உறவாடும் தொழில். இதனால்தான் “சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது ஆலோசகராக ,ஒழுங்கமைப்பவராக ,ஊக்குவிப்பவராக, உதவுபவராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பொறுப்பாக செயல்படும் போதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

ஆசிரியர் வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் போது பாடங்கள் பற்றிய அறிவு மாத்திரம் ஆசிரியருக்கு போதுமானதல்ல பாடத்துடன் சம்பந்தப்பட்ட எவ்வளவு தேர்ச்சியுள்ளதோ அதேபோல் மாணவர்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்ப சூழல் மன நிலை கிரகிக்கும் தன்மை என அவர்களை விளங்கிக்கொள்ளும் நிலையினையும் அடைய வேண்டும்.

ஒழுக்கமுள்ள சமுதாயத்ததை உருவாக்க, முன்மாதிரியான ஆசிரியர்களால் தான் இயலும். சமூகத்தில் ஒழுகத்துடன் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, நம்முடைய குழந்தைகளை ஒழுக்கத்துடன் கல்வி கற்க உதவுவது மட்டுமின்றி, குழந்தைகளின் கர்ப்பிற்கும் பாதுகாப்பாக அமையும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராம வாசியும் இருந்தனர்.ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராம வாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, “உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, “(முதலில்) வலப் பக்கம் இருப்ப வரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்க மிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்என்று சொன்னார்கள்.

 அறி : அனஸ் (ரலி),நூல் :புகாரி (2352)

நீதி நேர்மை போதிக்கும் ஆசிரியர்கள் தாங்களும் நேர்மையாகவும் பிரச்சனைகள் ஏற்படும் போது நீதத்துடன் நடந்து பள்ளிக்குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

வெறும் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய குழந்தைகளை சேர்த்து விடுவதுடன் பெற்றோர்களின் கடமை முடிவதில்லை. மாறாக நம்முடைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு அவ்வப்போது குழந்தைகளுடன் அவர்களுடைய படிப்பை பற்றி கலந்துரையாடுவதும், அவர்களின் ஆசிரியர்களோடு கேட்டு தெரிந்து கொள்வதும் அவசியம்.

இது மட்டுமின்றி, குழந்தைகள் மார்க்க போதனைகளை பெற முயற்சி எடுக்க வேண்டும்.மார்க்கமின்றி, வெறும் உலக கல்வி மட்டும் எந்த பயனும் தராது என்பது நிதர்சன உண்மை. இதை அன்றாட நிகழ்வுகள் உணர்த்தி கொண்டே வருகின்றன

ஆசிரியர் மாணவருக்கு பாடங்களை இலகுபடுத்தி ஆர்வமூட்டும் வகையில் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அமையும். முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசனாகிய நபி (ஸல்) அவர்கள் மக்களை அன்பின் அடிப்படையில் வழிநடத்துபவர்களாகவே இருந்தார்கள். இதனை பின்வரும் திருமறை வசனம் உணர்த்துகிறது

(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார். (09:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இலகுபடுத்துங்கள்; கஷ்டப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள் (புஹாரி)

பொதுவாக மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்லாசிரியர் யார்? இவ்வினாவிற்கு பல கோணங்களிலிருந்தும் விடைகள் ஏவுகணைகளாகப் பாயலாம். ஆயினும் இறுதியாக மாணவர்களின் உள்ளங்களை வென்றவரே மாணவர்களால் எதிர்பார்க்கப்படும் நல்லாசிரியர் என்ற முடிவுக்கு வரலாம். உள்ளங்களை வெல்லுதல் எனும் போது மாணவர்களுடன் சுமுகமாக மட்டுமன்றி அவர்களின் அந்நியோன்யத் தேவைகளைக் கூட அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப் பாடுபடுபவரை மாணவர்கள் பெரிதும் விரும்புவர். அவர்களை தம் வாழ் நாள் பூராவும் மறக்கமாட்டார்கள்.

கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மாணவர்களின் உள நிலையை அறிதல் வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களையும் மீத்திரன் கூடிய மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது. எனவே ஆசிரியர்கள் எவ்வகையான மாணவர்களுக்கும் பொருத்தமானவாறு நடு நிலையைக் கைக்கொள்பவராக காணப்பட வேண்டும். மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் அளவுக்கு கற்பித்தல் அமையக் கூடாது. மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை பரிகசித்து தண்டித்து கடுமையாக நடந்து கொள்வதை விட அவர்கள் மீது அனுதாபம் கொள்வதே சிறந்த வழியாகும். ஆசிரியர்கள் மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்த வேண்டும்.

ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித் தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி “அவரைக் கண்டிக்காது விட்டுவிடுங்கள்என்று கூறினார்கள். அவரை அணுகி “இப்பள்ளிவாயல்கள் சிறுநீர் கழிப்பது அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்கு தக்க இடங்களல்ல; இவை அல்லாஹ்வை திக்ர் செய்வது தொழுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்என்று கூறிவிட்டு ஒருவரை அழைத்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரின் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு அவரது தவறை அனுதாபத்துடன் நோக்கி மிக நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கிறோம்.

மாணவர்களுக்கு அன்பு காட்டுவது அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி நாசுக்காக திருத்துவதுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும் அவர்களின் நன்னடத்தைகளை பாராட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும். எப்போதும் ஆசிரியர்கள் திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அழகாக அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புஹாரி)

ஆற்றல்களையும் திறமைகளையும் பொருத்தமட்டில் மாணவர்கள் பல தரத்தினவர்களாக காணப்படுவார்கள். விளங்கும் தன்மை கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அவதானித்து தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும் பொருத்தமான நேரத்திலும் வழங்கும் ஆளுமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.

நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய போது அவர்கள் வித்தியாசமான உபதேசங்களை செய்தார்கள்.

ஒருவருக்கு “நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு ஷிர்க் வைக்கக் கூடாதுமற்றொருவருக்கு “நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்வீராகமேலும் ஒருவருக்கு “கோபப்படாதீர்என அவர்களின் வேறுபாட்டிற்கேற்ப பதில்களை வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது கல்விப் போதனைகளின் போது தமது தோழர்களின் தனியாள் வேறுபாடுகளை கவனத்திற் கொண்டு அவர்களுக்கு கற்பித்துள்ளார்கள் என்பதை காணலாம்.

கற்பித்தல் பணியைச் செய்பவர் வெறுமனே பாட விதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்துவிடலாகாது. மாறாக மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வது அவசியமாகும். ஏனெனில் வெறும் கல்வியை மட்டும் போதிப்பதால் அவர்கள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாத்திரம் பெறலாம். ஆயினும் சமூகத்தில் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் நடந்துகொள்பவர்களாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள நற்பிரஜைகளாக திகழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான் நபியாக (ஆசிரியராக) அனுப்பப்பட்டதன் நோக்கம் (இப்பூமிப் பந்தில்) நற்போதனைகளை (செயல் வடிவில்) பரிபூரணப்படுத்தவேயாகும் (புஹாரி)

அதனால்தான் கற்பித்தல் பணியை ஒரு தொழில் என்பதற்கு பதிலாக ஒரு சிறந்த நற்பணி ஈருலகத்திற்கும் பயனளிக்கும் சேவை என இஸ்லாம் கருதுகிறது.

ஆகபோற்றுதற்குரியஆசிரியபணியைமேற்கொள்ளும்ஆசிரியர்கள்எப்படிஇருக்கவேண்டும்?

*தவறு செய்யும் மாணவர்களை அரவணைக்க வேண்டும்

 ஆசிரியர்கள் பணியாற்றுவது இயந்திரங்களோடோ, இரும்போடோ அல்ல! மாறாக பிஞ்சு உள்ளங்ளோடு பணியாற்றுகிறார்கள்.

 தவறு செய்யும் மாணவனை அரவணைத்து தவறை திருத்தி நெறிப்படுத்துவது இலகுவில் மாணவனின் தப்பை களைய உதவும்.

 ஆசான்களின் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர் உள்ளத்தில் பதிகின்றன.

பெற்றோருக்கு கட்டுப்படாத எத்தனையோ பிள்ளைகள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படுகின்றனர். எனவே அவர்களை ஏசியோ அடித்தோ அவர்களின் உள்ளத்தை நொறிங்கடித்து விடக்கூடாது பொறுமையாக தவறை எடுத்துச் சொல்லி, சகிப்புத்தன்மையை பேணி படிமுறை அடிப்படையில் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் அதீத தண்டனையால் அன்பு கலந்த கண்டிப்புக்கள் குறைந்து பாம்பும் கீரியுமாய் மாணவர்கள் ஆசிரியரை எதிரியாக நோக்கும் நிலை உருவாகிறது.

இதனால்  அவ் ஆசிரியர் புகட்டும் பாடத்தை வெறுத்து, கல்வியை வெறுத்து, பாடசாலையை வெறுத்து உள, உடல் ரீதியாக பாதிப்புற்று பிரயோசனம் அற்ற  பிரஜையாக மாறும் சூழல் ஏற்படுகின்றன. எனவே மாணவர்கள் எதிர்பார்ப்பது தாய் தந்தை போன்ற ஆசிரியரின் அன்பினால், அக்கறையினால் ஆன தண்டிப்பையும் அரவணைப்பையுமே!

*மாணவர்களின் விடயத்தில் ஆர்வமுள்ளவராக இருத்தல் 

மாணவர் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டும். தன் வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் தனிப்பட்ட நலனில் கரிசனை கொள்வது ஆசிரியரின் கடமையாகும்.

மாணவர்களில் ஒருவர் பல நாள் விடுமுறை எடுத்தால் அவர் குறித்து விசாரித்து காரணம் கண்டறிய வேண்டும். உதாரணமாக நோயுற்றால் விசாரிக்க செல்தல்.

 ஒரு முறை ஸுப்யான் அஸ்ஸவ்ரி(ரஹ்) கூறினார்கள் "எனது மாணவர்கள் கற்பதற்காக  என்னைத்  தேடி வராத போது நான் அவர்களைத் தேடி அவர்களது வீடுகளுக்குப்  போய் பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்புகின்றேன் ."  எனவே,  தம் மாணவன் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள் குறித்து அறிந்து  ஒரு மணவனின் சிறந்த தாய் தந்தையாகவும் சில போது ஆசிரியர் தொழிற்பட வேண்டும்.

*ஆசிரியத்தொழிலில் வியாபரம் களைய வேண்டும் 

 தொழில்  என்பது பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வழியேயன்றி அது இலட்சியம்  அல்ல.

இறைவனின்  திருப்தியை நாடி சேவை செய்கின்றோம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாறாக ஆசிரியத் தொழிலில் பண்டமாற்று வியாபரம் அர்ங்கேற கூடாது.

தனது பிரத்தியோக டியூசன் வகுப்பிற்கு வரும் மாணவர்களை​ மட்டும் பாடசாலையில் கவனித்தல். பாடசாலையில் புகட்டும் பாடத்தை விட பணத்திற்காக டியூசன் வகுப்புக்களில் அதிக அக்கறை கொள்வது என்ற நிலையில் இருத்தல் கூடாது.

இன்று மாலைநேர டியூசன் வகுப்புக்கள் மாயையாய் அதிகரித்து விட்டன. இது மாணவர்களின் கல்வியை உயர்துவதற்கான தூய சிந்னையா? இல்லை பெற்றோர் பிள்ளைகளின் கண்களில் மாயையை விரித்து விட்டு இதுதான் கற்றலுக்கான சிறந்த வழிகாட்டி என்று சொல்லும் பித்தலாட்டமா?

ஒரு மாணவனின் கல்வியில்  பாடவிதான செயற்பாடுகள் முக்கியமானதே. ஆனால் கற்பித்தல் பணியில் ஈடுபடுபவர் பாடவிதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்து விடக்கூடாது. மாணவனுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ வேண்டும்.

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001