கற்பித்தல் ஓர் கலை

 மாணவ  சமூகத்திற்கு அறிவு, ஆற்றல், ஊக்கம் தன்னம்பிக்கை என அனைத்தையும் ஒரு சேரக் கற்றுக்கொடுத்து அவனை பண்பாடும் பக்குவமுள்ளவனாகவும், அறிஞராக, மேதையாக உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் உயரிய பொறுப்பு மிக்க பணியே ஆசிரியப் பணியாகும்.

கற்பித்தல் பணியை இஸ்லாம்  ஒரு தொழில் என்பதற்கு பதிலாக ஆசிரியம் ஒரு சிறந்த நற்பணி, அது ஈருலகிலும்  பயனளிக்கும் சேவை என கருதுகின்றது.

ஏனெனில்,  நபி  ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்,  ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரை விட்டும்  அவர்களது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும். மூன்று விடயங்களைத் தவிர. அதில் ஒன்று; அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி"  (புகாரி )

கற்பித்தல் ஒரு புனிதமான பணி. இது நபிமார்களின் பணி. நபி (ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தும் போது "நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள்.

அல்லாஹ் நபி ( ஸல் ) அவர்களை அறிமுகம் செய்யும் போது " மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக்கொடுப்பவர்" என அறிமுகம் செய்கின்றான்.  (62: 2)

 உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் ஆசான்களாக திகழ்ந்து தம் பணியை நிறைவேற்றினார்கள். அத்தகைய சிறப்பான பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கண்ணியத்திற்கு உரியவர்களே!

ஆக போற்றுதற்குரிய ஆசிரிய பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?

*தவறு செய்யும் மாணவர்களை அரவணைக்க வேண்டும்

 ஆசிரியர்கள் பணியாற்றுவது இயந்திரங்களோடோ, இரும்போடோ அல்ல! மாறாக பிஞ்சு உள்ளங்ளோடு பணியாற்றுகிறார்கள்.

 தவறு செய்யும் மாணவனை அரவணைத்து தவறை திருத்தி நெறிப்படுத்துவது இலகுவில் மாணவனின் தப்பை களைய உதவும்.

 ஆசான்களின் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர் உள்ளத்தில் பதிகின்றன.

பெற்றோருக்கு கட்டுப்படாத எத்தனையோ பிள்ளைகள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படுகின்றனர். எனவே அவர்களை ஏசியோ அடித்தோ அவர்களின் உள்ளத்தை நொறிங்கடித்து விடக்கூடாது பொறுமையாக தவறை எடுத்துச் சொல்லி, சகிப்புத்தன்மையை பேணி படிமுறை அடிப்படையில் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் அதீத தண்டனையால் அன்பு கலந்த கண்டிப்புக்கள் குறைந்து பாம்பும் கீரியுமாய் மாணவர்கள் ஆசிரியரை எதிரியாக நோக்கும் நிலை உருவாகிறது.

இதனால்  அவ் ஆசிரியர் புகட்டும் பாடத்தை வெறுத்து, கல்வியை வெறுத்து, பாடசாலையை வெறுத்து உள, உடல் ரீதியாக பாதிப்புற்று பிரயோசனம் அற்ற  பிரஜையாக மாறும் சூழல் ஏற்படுகின்றன. எனவே மாணவர்கள் எதிர்பார்ப்பது தாய் தந்தை போன்ற ஆசிரியரின் அன்பினால், அக்கறையினால் ஆன தண்டிப்பையும் அரவணைப்பையுமே!

*மாணவர்களின் விடயத்தில் ஆர்வமுள்ளவராக இருத்தல் 

மாணவர் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டும். தன் வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் தனிப்பட்ட நலனில் கரிசனை கொள்வது ஆசிரியரின் கடமையாகும்.

மணவர்களில் ஒருவர் பல நாள் விடுமுறை எடுத்தால் அவர் குறித்து விசாரித்து காரணம் கண்டறிய வேண்டும். உதாரணமாக நோயுற்றால் விசாரிக்க செல்தல்.

 ஒரு முறை ஸுப்யான் அஸ்ஸவ்ரி(ரஹ்) கூறினார்கள் "எனது மாணவர்கள் கற்பதற்காக  என்னைத்  தேடி வராத போது நான் அவர்களைத் தேடி அவர்களது வீடுகளுக்குப்  போய் பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்புகின்றேன் ."  எனவே,  தம் மாணவன் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள் குறித்து அறிந்து  ஒரு மணவனின் சிறந்த தாய் தந்தையாகவும் சில போது ஆசிரியர் தொழிற்பட வேண்டும்.

*ஆசிரியத்தொழிலில் வியாபரம் களைய வேண்டும் 

 தொழில்  என்பது பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வழியேயன்றி அது இலட்சியம்  அல்ல.

இறைவனின்  திருப்தியை நாடி சேவை செய்கின்றோம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாறாக ஆசிரியத் தொழிலில் பண்டமாற்று வியாபரம் அர்ங்கேற கூடாது.

தனது பிரத்தியோக வகுப்பிற்கு வரும் மாணவர்க​ைள மட்டும் பாடசாலையில் கவனித்தல். பாடசாலையில் புகட்டும் பாடத்தை விட பணத்திற்காக டியூசன் வகுப்புக்களில் அதிக அக்கறை கொள்வது என்ற நிலையில் இருத்தல் கூடாது.

இன்று மாலைநேர டியூசன் வகுப்புக்கள் மாயையாய் அதிகரித்து விட்டன. இது மாணவர்களின் கல்வியை உயர்துவதற்கான தூய சிந்னையா? இல்லை பெற்றோர் பிள்ளைகளின் கண்களில் மாயையை விரித்து விட்டு இதுதான் கற்றலுக்கான சிறந்த வழிகாட்டி என்று சொல்லும் பித்தலாட்டமா?

ஒரு மாணவனின் கல்வியில்  பாடவிதான செயற்பாடுகள் முக்கியமானதே. ஆனால் கற்பித்தல் பணியில் ஈடுபடுபவர் பாடவிதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்து விடக்கூடாது. மாணவனுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001