ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்பு பட்ட சில சட்டங்கள்
1- இரு பெருநாட்கள்: நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த நேரத்தில் மதீனா வாசிகள் இரு நாட்களில் விளையாடி மகிழ்வதைப் பார்த்து அல்லாஹ் இதை விட சிறந்த இரு நாட்களை உங்களுக்குப் பகரமாக ஆக்கியிருக்கின்றான் அவைதான் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும். " எனக் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நஸாயி 1556). 2- பெருநாளுடைய நாட்களில் தக்பீர் கூறுதல்: وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍؕ "குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்" (அல்குர்ஆன் 2: 203) இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கும் போது துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நாட்களையை இது குறிக்கும். كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ "அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன் 22: 37). உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறிய...