இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்

  மத நல்லிணக்கம் என்பது என்ன ? மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை , அன்பை , அமைதியை உருவாக்கக் கூடியது . மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று . மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை . உண்மையான மத நல்லிணக்கம் எல்லா மதங்களையும் வளர்க்குமே அல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது . மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல . அது ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ந‌டை முறையில் செய‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌யம் . மத நல்லிணக்கம் – இதைச் செய்ய‌ வேண்டிய‌ பொறுப்பு எல்லா ம‌னித‌ர்களுக்கும் உள்ள‌து . மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை . உலகிலே எந்த ஒரு சமுதாயமும் , எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது . என்கிற அளவிற்கு பொருளாதார , சமூக , கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன . இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது . எல்லா ...