குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களே!
எல்லோரும் நபி(ஸல்) அவர்களிடம் நல்ல விஷயத்தைப் பற்றிக் கேட்பார்கள், தவறிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நான் கெட்ட விஷயத்தைப் பற்றி கேட்பேன் என்று ஹுதைபா அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணியக்கூடியவனாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல் என்பது அல்லாஹ்வும் அவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யவேண்டும். அவ்விருவரும் தடுத்தவைகளை முற்றாகத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் ஏதாவது ஒன்றை ஏவினால் அதில் முடியுமானவைகளை எடுத்து செயல்படுங்கள், நான் ஏதாவது ஒன்றை தடுத்தால் அதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாமும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக ஆக வேண்டுமானால் ஏவல்களை எடுத்தும் விலக்கல்களை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்களில் பலர் கடமைகளை நிறைவேற்றுவதுடன் பல பெரும் பாவங்களை சாதாரணமாக செய்து கொண்டும் இருக்கின்றார்கள், இது அல்லாஹ்வுக்கு முழுக்க அடிபணியும் அடியானின் அடயாளமல்ல. கடமைகளை செய்வதுடன் பாவங்களையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும், அதிலும் பெரும் பாவங்களை அறவே செய்யக் கூடாது.
அழித்துவிடக்கூடிய ஏழு பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்,
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம், அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்வது, வட்டி சாப்பிடுவது, எத்திம்களின் பொருளை உண்பது, யுத்த களத்திலிருந்து புற முதுகுகாட்டி ஓடுவது, பத்தினிப் பெண்ணை அவதூறு கூறல் என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலே உள்ள ஹதீதில் கூறப்பட்டவைகள் மாத்திரம் பெரும்பாவங்கள் அல்ல, இன்னும் பல பெரும் பாவங்கள் இருக்கின்றன. எந்தப் பாவத்தைச் செய்தால் அல்லாஹ்வின் லஃனத் உண்டாகும் அல்லது நரகத்தில் வேதனை செய்யப்படும் அல்லது அது ஹராம் என்று சொல்லப்படுகின்றதோ அவைகள் எல்லாம் பெரும் பாவங்கள்தான். இவைகள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இக்குறிப்பில் பெரும் பாவங்களின் பட்டியல் ஆதாரத்துடன் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது, இதைப் படித்து உங்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தவறுகளை தவிர்த்துக் கொள்வதுடன் மற்றவர்களைளும் இப்படிப்பட்ட தவறுகளிலிருந்து தவிர்ப்பதற்குரிய முயச்சி செய்யுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் இவ்வாய்ப்பினை தந்தருள்வானாக
70 பெரும் பாவங்கள்
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத்திட்டுதல்
கருத்துகள்
கருத்துரையிடுக