சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்
மத நல்லிணக்கம் என்பது என்ன?
மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.
மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. உண்மையான மத நல்லிணக்கம் எல்லா மதங்களையும் வளர்க்குமே அல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.
மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது மனப்பூர்வமாக நடை முறையில் செயல் படுத்தப்பட வேண்டிய விடயம்.
மத நல்லிணக்கம் – இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா மனிதர்களுக்கும் உள்ளது.
மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது. என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற ஊக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.
எனவே உண்மையான மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.
எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன
இந்தியத் திருநாட்டில் பல சமூகங்கள் வாழ்கின்றன. இவை சமூக ஒற்றுமையுடன் வாழும் போது தான் நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் வளரும். இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிகமிக அவசியமானதாகும்.
நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களோடும்⸴ நம்முடன் தொடர்பில் இருப்பவர்களேடும் என்றும் இன⸴ மத⸴ ஜாதி⸴ நிற⸴ மொழி வேறுபாடுகளைப் பார்க்க கூடாது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசிப் பழக வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் வளரும்.
சமூக நல்லிணக்கம் வளர்ந்தால் தான் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ முடியும். நாட்டில் சமாதானமும். சமூக நல்லிணக்கம் நிலைநாட்டப்படும்
சமூகத்தில் சமாதானமும்⸴ ஒற்றுமையும் நிலவுவதற்கு சமூக நல்லிணக்கம் முதன்மையானதும்⸴ முக்கியமானதும் ஆகும். சமூகங்கள் இடையே புரிந்துணர்வு⸴ சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்த சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும்.
நாட்டின் பாதுகாப்பிற்கு சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும். ஒவ்வொரு சமூகத்தினரும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் சமூக நல்லிணக்கம் முக்கியமான ஒன்றாகும்.
மத மொழி சாதி இன வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் இந்திய நாட்டு மக்கள் என வாழும் போது தான் நாடு வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர்ˮ இதற்கிணங்க சமூகத்தினர் எவ்வித வேறுபாடுகளுமின்றி நல்ல நோக்கத்துடன் பழகும் போது சமூகத்தில் சமாதானமும் மகிழ்வும் உண்டாகும்.
ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு உறுதுணையான வாழ்வுக்கு சமூக நல்லிணக்கம் துணைபுரியும். சண்டைகள்⸴ சச்சரவுகள் இன்றி ஆரோக்கியமான சமூகச் சூழலுக்கும்⸴ வெற்றிக்கும் சமூக நல்லிணக்கம் முதன்மையாகின்றது.
· சமூக நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்
இந்திய தேசமானது இனம் மதம் மொழி சாதி அடிப்படையில் சமூகங்களை கொண்டு காணப்படுவதால் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பல சவால்கள் எழுந்துள்ளன.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள்⸴ கலாச்சாரம்⸴ உடை⸴ மொழி⸴ வாழ்க்கைச் சூழல் இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதால் மாநிலங்களுக்கு இடையேயும்⸴ மாநிலத்துக்குள்ளேயும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வளப் பற்றாக்குறை⸴ வேலையின்மைப் பிரச்சனைகளால் மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலாகிறது.
· சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிகள்
சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப் பாடசாலைகள் அல்லது பள்ளிகள் மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப்போகும் தலைவர்களாவர். எனவே இவர்களுக்கு சமூக நல்லிணக்கம் பற்றிய விழிப்புணர்வையும்⸴ சமூக ஒற்றுமையையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
விட்டுக்கொடுப்பு⸴ சகிப்புத்தன்மையைச் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கூறி வளர்க்க வேண்டும். எல்லோரும் இந்திய நாட்டுப் பிரஜைகள் என்ற எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
பிற மத⸴ மொழி⸴ கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கும்⸴ பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சமூக நல்லிணக்கம்⸴ அதன் அவசியம்⸴ முக்கியத்துவம்⸴ அதன் தேவைப்பாடு போன்றவற்றில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்ˮ என்பதற்கு இணங்க அனைத்து ஊரும் அனைத்து மக்களும் நமது மக்களே என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சமூகத்தின் அமைதிக்கும் இந்திய தேசத்தின் நலனிற்கும் சமூக நல்லிணக்கம் இன்றியமையாதது என்பதை உணர்ந்து ஒரு தாய்ப் பிள்ளைகளாய் ஒற்றுமையாய் வாழும் மனப்பான்மையை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தெடுக்க வேண்டும்.
சமூக நல்லிணக்கத்தை வெறும் தத்துவமாகப் போதிப்பதோடு இஸ்லாம் நின்றுவிடவில்லை.
அதனைச் செயல் படுத்தியும் காட்டியது.
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை“ (அத் தாரியாத் 51:56) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இறைவனுக்குகடமைசெய்வதுஎன்பதுஇருவகைப்படும். முதலாவது – அவனை, அவனை மட்டுமே வணங்குவது. இரண்டாவது – அவனது படைப்புகளுக்கு சேவை புரிவது.
அதாவது, ஹுகூகுல்லாஹ் (இறைவனுக்கு செய்யவேண்டிய கடமை), ஹுகூகுல் இபாத் (மனிதகுலத்திற்கு செய்யவேண்டிய கடமை).
·
அல்லாஹ் கூறுகின்றான்:மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (சூரா அன்னிசா
4:36)
· மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (சூரா அத் தஹ்ர்
76:8)
ஆக, மனித குலத்திற்கு சேவை செய்வது என்பது அல்லாஹ்வை அஞ்சும் மனிதருக்கு இன்றியமையாததாகும்.
கீழ்க்கண்ட வசனம்தான் இஸ்லாம் இயம்பும் சமூக சேவையின் கோட்பாடு, (The Concept of Social Work in Islam). பயபக்தியுடையவர்களின் குணநலன்களை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளான்.
·
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள்தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)
·
தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்புவதுதான் சமூக சேவையின் முதல் படி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (புகாரீ)
·
மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் அந்தச் சகோதரருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை விரோதியிடம் ஒப்படைக்கவும் மாட்டார். எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தைப் போக்குகிறாரோ (அதற்கு கூலியாக) அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அதற்காக அல்லாஹ் மறுமை நாளில் அவரது குறைகளை மறைக்கிறான்.” (புகாரீ, முஸ்லிம்)
·
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும்.
ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்.
நல்ல வார்த்தைகளைக் கூறுவதும் தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும்.
இடையூறு அளிப்பவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமாகும்.” (புகாரீ, முஸ்லிம்)
ü சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்க்கும் இஸ்லாம், இஃதிகாஃப் இருப்பதை விட தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக சில எட்டுகள் நடப்பதை சிறந்ததாக்கியுள்ளது.
· நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதற்காக நடக்கிறாரோ அது அவர் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதை விட மேலானதாகும். எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கும் நரக நெருப்புக்குமிடையே அல்லாஹ் மூன்று குழிகளை ஏற்படுத்துகிறான். அந்த ஒவ்வொரு குழியும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிக தூரமுடையதாயிருக்கும்.” (இப்னு அப்பாஸ் (ரழி), முஃஜமுத் தப்ரானீ)
இப்படிப்பட்ட புனிதமான சமூக சேவையில்தான் முஸ்லிம்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களில் ஒரு சாரார் இதற்காக தங்களையே அர்ப்பணித்துள்ளனர்.
சமூகசேவையில்முஸ்லிம்கள்
·
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது . தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக[1] அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள். இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள், தன்னுடைய சுயசரிதையான சத்தியசோதனையில், விடுதலை போராட்டத்திற்கான ஆரம்பகாலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரி சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துக்களை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இச்சகோதரர்கள்.[7] தென் தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக இருந்தது. அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் ஆவார்.
· இந்திய
விடுதலைப்
போராட்டத்திற்கான
முஸ்லிம்களின்
பங்களிப்பு
பற்றிக்
குறிப்பிடும்
போது
எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பின்வருமாறு
எழுதுகின்றார்.
· “இந்திய
விடுதலைக்காகச்
சிறை
சென்றவர்களிலும்,
உயிர்
நீத்தவர்களிலும்
இஸ்லாமியர்
அதிகமாகவே
இருந்தனர்.
அவர்களது
மக்கள்
தொகை
விகிதாச்சாரத்தை
விட
விடுதலைப்
போரில்
மாண்டோர்
எண்ணிக்கையின்
விகிதாச்சாரம்
அதிகமாகவே
இருந்தது”.
· மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்றவர்கள்
இந்திய
விடுதலை
இயக்கத்தின்
மிகப்பெரும்
தலைவர்களாக
திகழ்ந்ததோடு
மட்டுமல்லாமல்,
சுதந்திர
இந்தியாவை
கட்டமைப்பதிலும்,
ஹிந்து-முஸ்லிம்
ஒற்றுமையை
நிலைநாட்டுவதிலும்
பெரும்
பங்காற்றினர்.
·
ஏழைகளுக்குஉணவுகிடைக்கஏற்பாடுசெய்கிறார்கள். வசதியற்றவறியவர்களுக்குவாழ்வளிக்கபாடுபடுகிறார்கள்.
·
வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முனைகிறார்கள்.
·
பல அமைப்புகள் உதவிகள் செய்து இருக்கின்றன.குறிப்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சமூக சேவை பிரிவு தமிழ்நாடு ரிலீஃப் கமிட்டி சார்பில் கோட்டக்குப்பம் பகுதியில் 38வீடுகளும் நாகை மாவட்டம் நாகூரில் தெத்தி கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 100 வீடுகள் 09/11/2006 அன்று பயனாளிகளுக்கு தரப்பட்டுள்ளன.
·
சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு உதவிடவும் முயற்சிகள் பல செய்கிறார்கள்.
·
பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் இளம் சிறார்களைபள்ளிக்குச்செல்லஊக்குவிக்கிறார்கள்.அதற்காகபலவிழிப்புணர்வுப்பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்.
·
வறுமையில் கல்வி பயில இயலாதவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்து படிக்க வைக்கிறார்கள்.
·
வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு தொழிற்பயிற்சிஅளிக்கிறார்கள். அவர்களுக்கு அரசிடமிருந்து உரிய உதவிகளையும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
·
ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்கிறார்கள். கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். பெருவெள்ளம், பேரிடர் காலங்களில் மக்கள் தவிக்கும்போதெல்லாம் உதவிகள் பல செய்கிறார்கள்.
·
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்த இந்துக்களின் உடல்களை உறவினர்கள் கூட தொட மறுத்துபோது, தங்களை உயிரை துச்சம் என நினைத்து, கரோனாவால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இந்துக்களின் உடல்களை அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் அடக்கம் செய்யும் பணியை செய்தவர்கள் முஸ்லிம்கள் தோழர்கள்.
·
அதேபோன்று 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளம் உள்பட பல்வேறு பேரிடர் காலங்களில் தங்களை உயிரை பணயம் வைத்து, நிவாரண பணிகளையும், உணவு, உடை இன்றி தவித்த மக்களுக்கு முஸ்லிம்கள் தோழர்கள் பெரும் பங்காற்றினர்
இஸ்லாம் போதித்த முறைப்படி தங்கள் வாழ்வை அமைத்துகொண்டுள்ள இவர்களுக்குத்தான் இறைவன் மாபெரும் நற்கூலிகளை வழங்கக் காத்திருக்கிறான்.
உலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களின் அசல் நோக்கமும் நாம் ஒழுக்கமாக, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான். அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல.
இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) ரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 4:1)
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன்
49:13)
இவ்விரு வசனங்களும் நாம் எங்கிருந்து வந்தவர்கள், எப்படி இருக்க வேண்டியவர்கள் என்பதை தெள்ளத்தௌிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக, ஜாதி, குலம், கோத்திரம் என்பதெல்லாம் ஒருவர் இன்னொருவரை இன்னாரென்று அடையாளம் காண்பதற்கே தவிர சண்டை, சச்சரவுகளுக்கல்ல என்று கூறுவதிலிருந்தே இஸ்லாம் கூறும் பொதுமைப் பண்பை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
“(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்”. (திருக்குர்ஆன் 6:108)
நீங்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். சக சகோதர சமயத்தவர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை, அவர்களது தெய்வங்களை, அவர்களது வழிபாடுகளைத் திட்டாதீர்கள். உங்களுக்கு வணக்க வழிபாடுகள் இருப்பதைப் போலவே அவர்களுக்கும் பற்பல வணக்க வழிபாடுகள் உண்டு என மிக எதார்த்தமாகக் குறிப்பிடுகிறது மேலே உள்ள திருக்குர்ஆன் வசனம்.
நாம் நம்மைச் சுற்றி குடியிருப்பவர்களோடு, நமது தொடர்பில் இருப்பவர்களோடு என்றைக்கும் ஜாதி, மத, இன, நிற, மொழி வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. எல்லோரும் ஒருதாய் மக்கள் என்ற உயர்ந்த சிந்தனையோடு தான் பேசிப் பழகவேண்டும். நபிகள் நாயகம் அப்படித்தான் அனைவரிடமும் பழகினார்கள்.
நபிகளார் மக்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டு மதீனா வந்தபோது, மதீனாவைச் சுற்றி பல சமயத்தவர்களும் வாழ்ந்தனர். அவர்கள் அனைவரோடும் நபிகளார் முதன் முதலில் உள்ளூர் வளர்ச்சிக்காக சமாதான ஒப்பந்தம் செய்தார்கள் என்ற செய்தி ஒன்றே போதும் நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு.
ஒருமுறை இறந்துபோன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைக் கண்ட நாயகத்தின் தோழர்கள், நாயகமே! அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி? என்று ஆச்சரியமாய் வினவியபோது “அவரும் நம்மைப் போன்று உயிருள்ளவர் தானே” என்றார்கள். (நூல்: மிஷ்காத்)
இன்னொரு முறை தன்னிடம் பணி புரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார்கள். (நூல்: மிஷ்காத்)
நபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
இப்படியாக நபிகளார் அனைத்து மத சகோதரர்களிடமும், தொப்புள் கொடி உறவுகளிடமும் நல்லிணக்கத்தோடு தான் நடந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபிகளாரிடமும் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.
நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மதித்து நடப்பார்கள். இதில் நாம் வேறுபாடுகாட்டுவதற்கு என்று ஒன்றும் இல்லை. இஸ்லாம் அப்படி எந்தவொரு இடத்திலும் சிறுவேறுபாட்டை கூறவும் இல்லை. சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாயமும் தோல்வியை சந்தித்ததாக வரலாறு இல்லை.
சமூக நல்லிணக்கம் மலர இஸ்லாம் காட்டியுள்ள கோட்பாடுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
1. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.
மனிதநேயம் மனிதர்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் படைப்புகள்.
ஒரே ஆதிப்பெற்றோரின் வழித்தோன்றல்கள்.
எனவே மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.
“மனிதர்களே,
நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.
பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கொத்திரங்களாகவும் அமைத்தோம்.
உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்.
திண்ணமாக,
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான்.”
(திருக்குர்ஆன்
49: 13)
“தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவன் முஸ்லிம் ஆகமாட்டான்.”
(நபிமொழி,
நூல்:
முஸ்னத் அஹ்மத்)
“மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.”
(நபிமொழி,
நூல்:
திர்மிதி)
“படைப்புகளனைத்தும் இறைவனின் குடும்பமே.”
(நபிமொழி,
நூல்:
பைஹகி)
எனவே மதவேறுபாடின்றி எல்லா மனிதர்களையும் நேசிக்கும்படி இஸ்லாம்பணிக்கிறது.
2. பிற மதங்களைத் திட்டாதே!
(இறைநம்பிக்கை கொண்டவர்களே)
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.”
(திருக்குர்ஆன்
6:108)
கருத்துகளை விமர்சிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
ஆனால் இழிவுபடுத்த அனுமதியில்லை.
கருத்துகளை மறுக்கலாம்.
ஆனால் உணர்வுகளை மதிக்குமாறு கட்டளையிடுகிறது.
3. திணிக்காதே!
கருத்துத் திணிப்பு வன்செயலுக்கு இட்டுச் செல்லும்,
நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்பதால் இஸ்லாம் அதைத் தடை செய்திருக்கிறது.
“(இறைநெறியை மேற்கொள்வதில்)
யாதொரு கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை.”
(திருக்குர்ஆன்
2: 256)
“இது
(குர்ஆன்)
இறைவனிடமிருந்து வந்துள்ள செய்தியாகும்.
இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்.
நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்.”
(திருக்குர்ஆன்
18:29)
முஸ்லிம்கள்
700-800 ஆண்டுகள் ஆட்சி செய்த நாடுகளில் இன்றும் பிறமதத்தவர் வாழ்ந்து வருகின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.
இஸ்லாத்தில் இணைந்தவர்கள் முஸ்லிம் ஆட்சி நீங்கிய பின்பும் பழைய மதத்திற்குத் திரும்பவில்லை என்பதும் கட்டாய மதமாற்றம் எப்போதும் நடைபெற்றதில்லை என்பதை நிரூபிக்கிறது.
4. உரிமைகளைப் பறிக்காதே!
முஸ்லிமல்லாத மக்களின் உயிர்,
உடைமை,
நம்பிக்கை,
கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு உத்தரவிடுகிறது இஸ்லாம்.
நபிகள் நாயகம்
(ஸல்)
அவர்கள் நவின்றார்கள்:
“ஒப்பந்தக்காரர்
(இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமகன்)
ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ,
அவன் உரிமையைப் பறித்துவிட்டாலோ,
அவன் சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்திவிட்டாலோ,
அவனுடைய பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ,
மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் சார்பில் நானே வாதிடுவேன்.”
(நூல்:
அபூதாவூத்)
“ஒப்பந்தத்தில் உள்ள ஒருவரை
(முஸ்லிமல்லாத குடிமகனை)
யராவது கொலை செய்தால் அவர் சுவனத்தின் நறுமணத்தைக் கூட நுகμமாட்டார்.”
(நூல் புகாரி,
அபூதாவூத்)
“அவர்கள்
(இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிமல்லாத குடிமக்கள்)
நம் அடைக்கலத்தில் உள்ளவர்கள்.
எனவே அவர்களின் உயிர் நம் உயிர் போன்றது.
அவர்களின் சொத்தும் நம் சொத்து போன்றது.”
(நபித்தோழர் கலீஃபா அலீ
(ரலி)
நூல்
: அபூதாவூத்)
“(நபியே)இணை வைப்பவர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி,
உம்மிடம் வந்தால் அப்பொழுது இறைவேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக.
பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவிராக.இவ்வாறு ஏன் செய்யவேண்டு மெனில் திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்திக்ராய் இருக்கிறார்கள்.”
(திருக்குர்ஆன்
9:6)
“இறைவன் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள்,
கிறிஸ்தவ ஆலயங்கள்,
யூத ஆலயங்கள்,
இறைவனின் பெயர் அதிக அளவில் கூறப்படும் பள்ளிவாயில்கள் ஆகியவைத் தகர்க்கப் பட்டிருக்கும்.”
(திருக்குர்ஆன்
22:40)
மேற்குறிப்பிட்ட சான்றுகளிலிருந்து இஸ்லாமிய அரசில் பிற மக்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தெளிவாகிறது.
எல்லாத் தரப்பு மக்களுடனும் நீதியுடன் நடந்துகொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது.
“நீதி செலுத்துங்கள்,
இதுவே இறையச்சத்திற்கு மிகவும் பொருத்தமானது.”
(திருக்குர்ஆன்
5:8)
கொள்கையின் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் எல்லா சமயங்களிலும் நல்லவர்கள் உண்டு என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
“அவர்களுள்
(கிறிஸ்தவர்களுள்)
வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும் துறவிகளும் இருக்கின்றனர்.மேலும் அவர்கள் அகந்தைகொண்டவர்களாகவும் இல்லை.”
(திருக்குர்ஆன்
5:82)
இஸ்லாத்தின் இந்தப் போதனைகள் காரணமாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த பகுதிகளில் கலவரங்கள் நிகழ்ந்ததில்லை.
எம்மதமும் சம்மதம் என்ற கருத்தை இஸ்லாம் ஏற்காத நிலையிலும் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கியதில்தான் இஸ்லாத்தின் சிறப்பு வெளிப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக