இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முஹர்ரம்: ஓர் சுயபரிசோதனை மாதம்

  முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவம் , செய்ய வேண்டியவை , செய்யக்கூடாதவை மற்றும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்   அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே . நாம் அவனைப் புகழ்கிறோம் . அவனிடம் உதவி தேடுகிறோம் . அவனிடம் மன்னிப்பு கோருகிறோம் . நம்முடைய உள்ளங்களின் தீமைகளிலிருந்தும் , நம்முடைய செயல்களின் தீமைகளிலிருந்தும் அல்லாஹ்விடமே பாதுகாப்பு தேடுகிறோம் . அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ , அவரை யாராலும் வழிதவறச் செய்ய முடியாது . யாரை அவன் வழிதவறச் செய்கிறானோ , அவரை யாராலும் நேர்வழியில் செலுத்த முடியாது . வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன் . மேலும் , முஹம்மது ( ஸல் ) அல்லாஹ்வின் அடியாரும் , அவனது தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் .   அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான் :   إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَ...