மகப்பேறும் அல்குர்ஆனும்⁉️
இன்றைய நவீன காலத்தில் கண்டறியப்பட்ட அனேக அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு தீர்க்கதரிசனமாக அல்குர்ஆன் உள்ளது.
கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால் ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிகச் சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் அல்குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும் மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில். மகப்பேறு மருத்துவர்கள் சென்ற பத்தாண்டு வரை கண்டு பிடிக்காத ஒரு விஷயத்தை மிக அழகான சம்பவம் மூலம் விளக்குகிறது. மரியம் என்ற அத்தியாயத்தில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள்.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா? என்று அவர் கூறினார்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிலிருந்து வானவர் அழைத்தார்.
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும் (என்றார்)
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன் என்று கூறுவாயாக! (19:23-26)
இதில் உள்ள மருத்துவ அறிவியல் கருத்துகளாவன;
1 . தண்ணீரில் பிரசவம் நடந்தால், பிரசவ வேதனை குறையும்.
2 . பிரசவத்தின் போது தண்ணீர் பருகினால் (பிரசவம் மிக வேகமாக இலகுவாக முடியும்)
3. பிரசவத்தின் போது தண்ணீர் பருகுவதன் மூலம், தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்து, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
4. பிரசவத்தின் போதும், அதற்குப் பின்னும், பெண்ணுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.. அதனால் இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறுகிறது.
5. தண்ணீர்ச் சத்தும், இரத்த சோகையும் சரியானால், கண்ணில் மாற்றம் தெரியும்,
இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்:
தண்ணீரில் பிரசவம்
************************
திருக்குர்ஆன் இந்த வசனத்தில், மரியம் (அலை ) அவர்களுக்கு, தாங்க முடியாத பிரசவ வேதனை ஏற்பட்ட போது, தண்ணீரில் பிரசவம் நடந்து வலி இன்றி முடிந்ததாக கூறுகிறது. சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தண்ணீரில் பிரசவம் என்று ஒன்று உள்ளது என்று, மருத்துவ உலகமே அறிந்திருக்கவில்லை. அப்படி அப்போது யாராவது சொன்னால், அவரை மருத்துவ அறிவு இல்லாதவர் என்று எள்ளி நகையாடும் நிலையே இருந்தது.
சரி, சாதாரணமாக பிரசவத்தின் போது என்ன உடலியல் மாற்றங்கள் நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு, தண்ணீர் பிரசவத்துக்குச் சென்றால், விளங்க வசதியாக இருக்கும்.
பிரசவம் எப்படி?
மனித உடலிலில் மூளையில் {C}{C}{C}Pituitary Gland என்ற நாளமில்லா சுரப்பி உள்ளது. இதில் பின்புறம் இருக்கும் {C}{C}{C}posterior pituitary இரண்டு ஹோமோன்களைச் சுரக்கிறது. {C}{C}{C}1. oxytocin 2 vasopressin. இதில் {C}{C}{C}oxytocin என்ற ஹார்மோன்தான், பிரசவ நேரத்தில், (கர்ப்பை {C}{C}{C}uterus மற்றும் கற்பவாய் {C}{C}{C}cervix விரிவடைவதன் மூலம் தூண்டப்பட்டு )அதிகம் சுரக்கிறது. இந்த ஹோமோன், கர்ப்பப்பையை, நன்றாக சுருங்கி சிசுவைக் கீழே தள்ளவும், கர்ப்பவாய் ({C}{C}{C}cervix), மற்றும் யோனி குழாய் ({C}{C}{C}vaginal canal) மிருதுவாக விரிவடையச் செய்யவும், இதன் மூலம் குழந்தை பாதுகாப்பாகப் பிறக்க உதவுகிறது.
மேலும் இந்த ஹோமோன்தான், குழந்தை பிறந்த உடன் , மார்பகத்தில் உற்பத்தியான பால், வெளிவர உதவுகிறது.(பாலை உருவாக்க {C}{C}{C}anterior pituitary இல் இருந்து {C}{C}{C}prolactin என்னும் ஹார்மோன் உதவுகிறது)
{C}{C}{C}anterior pituitary என்னும் ஹார்மோன், உடலில் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு ஹோமோன்கள் சுரந்து வெளியாகும் இடம், ஒரே இடத்தில், ஒன்றோடு ஒன்று ஒட்டியே உள்ளது.
சரி இனி தண்ணீர் பிரசவம் பற்றி {C}{C}{C}American Academy of Pregnancy என்ன கூறுகிறது ?
மகப்பேறு மருத்துவ அறிவியலுக்கு, அமெரிக்காவின் அமைப்பான இந்த அமைப்பு, தண்ணீரில் டெலிவரி பற்றி கூறுவதைக் காண்போம்.
{C}{C}{C}water birth என்பது லேசான சூடான தண்ணீர் தொட்டியில் பிரசவம் நடப்பது. இதில், வலி ஏற்பட்ட உடன் தண்ணீரில் இருந்து விட்டு, டெலிவரி நேரம் மட்டும் வெளியில் வந்து குழந்தை பெறுவது, அல்லது குழந்தை பிறக்கும் வரை தண்ணீரிலே இருப்பது.
தண்ணீர் பிரசவத்தால் ஏற்படும் நன்மைகள்⁉️⬇️
தாய்க்கு தண்ணீர், பிரசவத்தின் பின் பகுதியில் பெண்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. தண்ணீர் இனிமையான, சுகமான, ஓய்வைக் கொடுக்கிறது.
தண்ணீரின் மிதப்பு தன்மையால், உடல் எடை குறைவதோடு , தடையில்லாத அசைவு, மற்றும் புதிய நிலையைத் தருகிறது.தண்ணீரின் மிதப்புத் தன்மையால், கர்ப்பப்பை நல்ல முறையில் சுருங்கி, நல்ல இரத்த ஓட்டம் தாயின் உடலிலில் ஏற்பட்டு அதனால், கர்ப்ப்ப்பை தசைகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதன் மூலம், பிரசவ
வலி குறைகிறது, மேலும் குழந்தைக்கு நல்ல ஒக்சிஜன் கிடைக்கிறது.
தண்ணீரில் மூழ்குவதால், இரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தம் குறைகிறது.
தண்ணீர், மன அழுத்தம் சம்பந்தமான ஹோமோன்களைக் குறைப்பதோடு, தாயின் உடலில் வலிலியைக் குறைக்கும் வேதிப்பொருள் உருவாக உதவுகிறது.
தண்ணீர் , பெண்ணின் கீழ்ப்பகுதி நன்றாக மிருதுவாகவுமாக உதவுவதால், அந்தப் பகுதியில் பிரசவத்தால் காயம் ஏற்படுதல், தையல் போடுதல் தேவை வெகுவாகக் குறைகிறது. தண்ணீர் ஒரு தனிமையான உணர்வைப் பெண்ணுக்கு ஏற்படுத்துவதால், பெண்ணின் பயம், மனஉளைச்சல், போன்றவை வெகுவாக குறைகிறது.
குழந்தைக்குப் பயன் என்ன⁉️
********************************
குழந்தை கருவறைக்குள் எந்தச் சூழ்நிலையில் இருந்ததோ , (தண்ணீர் சூழ்ந்த சூழ்நிலை), அதே நிலை கிடைக்கிறது.
குழந்தைக்கு நல்ல ஒக்சிஜன் கிடைப்பதால், பின்னர் மூளை வளர்ச்சி குறைவு, போன்ற நிலை ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.
மகப்பேறு மருத்துவ உலகிற்கே ஜாம்பவானான இங்கிலாந்து நாட்டில் உள்ள அமைப்பு இதைப் பெரிதாக ஆமோதித்து உள்ளது.
பிரசவத்தின் போது தண்ணீர் பருகுவதால் உண்டாகும் பயன்கள்⁉️⬇️
இதே வரலாற்றை விளக்கும், இன்னொரு வசனத்தில், வானவர், மரியம் (அலை) அவர்களிடம், பேரீச்சைப் பழத்தை உண்டு, (ஆற்று நீரை) பருகி கண்குளிர்ந்து இருப்பீராக என்று கூறுகிறார்.
இப்போதும், பெண்களுக்கு பிரசவ வேதனை அதிகம் இருக்கும்போது, மருத்துவர்கள் அதிகம் தண்ணீரைக் குடிக்கச் சொல்கிறார்கள். அப்படி தண்ணீர் குடித்தால், வேதனையால், ஏற்படும் தண்ணீர் சத்து குறைவு வர வாய்ப்பு இல்லாமல் போய் விடுவதோடு, பிரசவமும் எளிதில் முடியும்.
மகப்பேறு மருத்துவர்கள், பிரசவத்தின் போது, பிரசவம் இலகுவாக, பாதுகாப்பாக, சீக்கிரம் நடக்க, இந்த ஹார்மோனை இன்ஜெக்சன் வடிவில் கொடுப்பார்கள்.
தண்ணீர் குடிப்பதைப் பற்றி, சற்றும் அலட்டிக்கொள்ளாமல், பதினாலு நூற்றாண்டுக்கு முன்பு, அந்த அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத காலத்தில், சர்வ சாதாரணமாக இன்றும் , மருத்துவர்கள் கூட விளங்க சற்று கஷ்டமான கருத்தை குர்ஆன் கூறி, அது இறைவனின் வேதம் தான் என்று இன்றளவும் மெய்பித்து உள்ளது.
3 பிரசவத்தின் போது தண்ணீர் குடிப்பதால், பிரசவித்த பின் தாய்ப்பால் இலகுவாக சுரந்து, வெளிவரும்.👍
பிரசவத்திற்கும் பேரீச்சைப்பழத்திற்கும் என்ன சம்பந்தம்⁉️
மரியம் (அலை ) அவர்களை வானவர் ஜிப்ரீல், பேரீச்சைப் பழத்தைச் சாப்பிட்டு, கண்குளிர இருப்பீராக என்று கூறினார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த இடத்தில் திருக்குர்ஆன் ,பிரசவத்திற்கும் பேரீச்சைப் பழத்திற்கும் ஒரு நேர்முறையான சம்பந்தம் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. அது பற்றி பார்ப்போம்.
இன்றைய நவீன மகப்பேறு மருத்துவர்கள், எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்குப் பின் மூன்று மாதத்திற்கு, இரும்புச் சத்து மாத்திரை தருகிறார்கள். காரணம் பொதுவாகவே, பெண்களுக்கு மாதமாதம், ஏற்படும் மாதவிடாய் காரணமாக இரத்த அளவு குறைவாகவே இருக்கும். மேலும் கர்பபமும், பிரசவமும், அவர்களின் இரும்புச் சத்து தேவையை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இவ்வளவு அதிக அளவு, கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுவதால், இதை உடல் தன்னால் ஓரளவுக்கு மேல் உற்பத்தி பண்ண முடியாது. அதனால், இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே கர்ப்பத்தால், குமட்டல், வாந்தி இருக்கும் போது, இரும்பு சத்து மாத்திரை இன்னும் குமட்டலை அதிகரிக்கலாம்.
எனவே உணவு மூலம், எந்த குமட்டலும் இல்லாமல், இயற்கையாக இனிப்புச் சுவையுடன் இரும்புச் சத்தை அதிகரிக்கும் உணவு பேரீச்சைப்பழம் மட்டுமே என்று அறிவியல் கூறுகிறது.
100 கிராம் பேரீச்சைப் பழத்தில், சராசரியாக 1.15mg இரும்புச் சத்து உள்ளது. இது போக பேரீச்சைப் பழத்தில், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியும், நார்ச்சத்து, வைட்டமின் இ காம்ப்ளெக்ஸ், காப்பர் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இப்படி பிரசவத்திற்கு முன்னும, பின்னும் சுவையான சத்தின் அவசியத்தையும் சர்வசாதாரணமாக, எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாத காலத்தில் அழகாகக் கூறி இது கட்டாயம் இறை வேதமே என்று திருக்குர்ஆன் நிரூபிக்கிறது. தண்ணீர்ச் சத்தும், இரத்த சோகையும் சரியானால், கண்ணில் மாற்றம் தெரியும்.
அல்குர்ஆன், தண்ணீர் பருகியும், பழத்தை உண்டும் கண் குளிர இருப்பீராக என்று கூறுகிறது.
இதில் அறிவியல்பூர்வமாக என்ன உண்மை உள்ளது என்று பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு தண்ணீர்ச் சத்து குறையும் போது, ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று, கண் குழிவிழுந்து போதல், மற்றும் கண் மங்குதல். கண் கரித்து வெட்பமாக உணருதல். நீர்ச்சத்து சரியாகியவுடன் கண்ணைச் சுற்றி உள்ள குழி போன்றது சரியாகி விடும். கண் மங்குதல் சரியாகி விடும். மேலும் கண் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும் என்று இன்றைய நவீன மருத்துவ உலகம் கூறுகிறது. இதை நாம் பலர் பலமுறை உணர்ந்துள்ளோம்.
அதுபோல, இரும்புச் சத்து குறைந்து இரத்த சோகை ஏற்படும் போது, கண் இமையின் உள்பகுதியில் தான், சிவப்பு நிறம் குறைந்து வெளிரிப் போக ஆரம்பித்து, கண் பார்வையைக் கெடுக்கும். இரத்த அளவு சரி செய்யப்பட்டவுடன், இந்த அறிகுறிகள் படிப்படியாக சரியாகி விடும்.
எவ்வளவு பெரிய இரண்டு விசயத்தை அல்குர்ஆன் மிக சாதாரணமாக கூறியுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.
இந்த சில வசனங்களிலேயே நம் அறிவுக்குட்பட்ட ஐந்து மருத்துவ கருத்துக்கள் உள்ளன என்றால், அல்குர்ஆன் அடிக்கடி கூறுவது போல் இதில் உள்ளதைச் சிந்திப்பீராக என்ற கோணத்தில் இந்தக்குர்ஆனை சிந்தித்தால், அறிவியலிலின் பெரிய களஞ்சியமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா⁉️ (47:24)
அல்லாஹு அக்பர்!👍👍👍
அல்லாஹ் மிக அறிந்தவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக