இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகப்பேறும் அல்குர்ஆனும்⁉️

 இன்றைய நவீன காலத்தில் கண்டறியப்பட்ட அனேக அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு தீர்க்கதரிசனமாக அல்குர்ஆன் உள்ளது. கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால் ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிகச் சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் அல்குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும் மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில். மகப்பேறு மருத்துவர்கள் சென்ற பத்தாண்டு வரை கண்டு பிடிக்காத ஒரு விஷயத்தை மிக அழகான சம்பவம் மூலம் விளக்குகிறது. மரியம் என்ற அத்தியாயத்தில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா? என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிலிருந்து வானவர் அழைத்தார். பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும் (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக ந...

மனித இயல்புகளும், இறை வழிக்காட்டுதலும்

 மனித இயல்புகளும், இறை வழிக்காட்டுதலும் இன்றைய நவீன கால கட்டத்தில் மனிதவளம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. முன்பு மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு சுமையாக கருதப்பட்டது. ஆனால், இப்போது மனிதவளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆக்கசக்தி என்பது பரவலாக உணரப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் எல்லாம் மனிதவளத்துறை(Human Resources Department) என்று தனியாக செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் மனிதனின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று ஆய்வு செய்யப்பட்டு, தனிமனித ஆளுமையை மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆலோசனைகள், ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பெரும்தொகையும் நிறுவனங்களால் செலவு செய்யப்படுவதையும் காண்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் கவனிக்க தவறும் முக்கிய விஷயம் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது மனிதனின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்தவன், நிச்சயமாக, அவனை படைத்த இறைவனே! படைத்தவன் மட்டுமே தன் படைப்புகளைப் பற்றி தெளிவாக அறிய முடியும். சரியான வழிகாட்டுதலையும் வழங்கமுடியும். அப்படிப்பட்ட வழிக்காட்டல்தான் துல்லியமானதாக, சரியானதாக, பக்கசார்பு அற்றதாக, பக்கவிளைவுகள் இல்லாததாக அ...