இடுகைகள்

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

( குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம்  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்) அழகிய வரவேற்பு -  வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். -  மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட.  -  அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா" செய்யலாம். -  வெளியில் சந்தித்த நல்ல செய்திக i ளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற் காக தள்ளி வையுங்கள். இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும் -   நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள். -  உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். -  தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். - மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கல...

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும

o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது. o  பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது. o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது. o  பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது. o  பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது. o  ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.) o  பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் க...

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான். وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையி...

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

  மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி  மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம்  உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது. புறம் என்றால் என்ன? புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். “புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்...

இறைவன் மன்னிக்காத குற்றம்.

மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான். இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான். இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரிய...

கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்

படம்
மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி ‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்" (அல்குர்ஆன் 2:43). ‘ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்" என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்). போர் நிலையில் கூட ஜமாஅத் : ‘(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்குத் தொழ வைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும், அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்), அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் – ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக்குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சா...