பரகத் என்றால் என்ன?
பரகத் என்றால் என்ன? அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது.பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும். உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை வைத்து அதைவிட அதிகமான சம்பாதித்தால் அதை வைத்து என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 5000 ருபாவை வைத்து செய்வோம்.நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்...