இஸ்லாத்தின் பார்வையில் கல்வி
இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கனணி (computer), மின்அஞ்சல் (e-mail), இணையம் (Internet)இ டிஜிடல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என நம்பப்படுகின்றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (cloning) எனும் செயற்பாடு உலகை பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல் மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சம கால மேற்குலகின் அனைத்...