இடுகைகள்

தொழுகை இருப்பில் விரலசைப்பது! ஷைத்தானின் செயலே!

  அந்நஜாத்   2014 மே   அபூ அப்தில்லாஹ் தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் தனது ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டு தரையில் மணலோடு மணலாக கிடக்கும் பொடிக்கற்களைக் கிளறிக் கொண்டு இருந்த ஒரு மனிதரைக் கண்ட இப்னு உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரே இவ்வாறு பொடிக் கற்களை உமது ஆட்காட்டி விரலால் அசைத்துக் கொண்டு கிளராதீர். இது ஷைத்தானுடைய செயல் என்று கண்டித்தார். அப்போது அந்த நபர் அப்படியானால் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலாக, أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلاً يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لاَ تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلاَةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ‏.‏ قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ ال...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன் ? ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை அடையாளம் காட்டுகிறது ?  என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும் . இந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் பலரின் உள்ளங்களில் கூட இந்தச் சந்தேகம் குடிகொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தச் சந்தேகத்தைப் பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தாவிடினும் இப்படி ஒரு எண்ணம் அவர்களின் அடி மனதில் குடி கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களினது முதல் கேள்வியும் கூட இது பற்றியதாகவே அமைந்துள்ளது . இந்த ஐயத்தை அகற்றும் விதமாக அறிஞர் பெருமக்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து மறுப்புகள் பல அளித்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமனங்கள் செய...

விதவைகள் வழிதவற சமூகம் வற்புறுத்துகிறத?

விதவைகள் வழிதவற சமூகம் வற்புறுத்துகிறது! [ விதவைகள் என்றாலே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதும் கலாச்சாரத்திற்கு மத்தியில் விதவைத்திருமணத்தை இஸ்லாம் ஆதரித்த அளவுக்கு வேறு எந்த மதமும் ஆதரித்ததில்லை.  ஆனால் துரதிஷ்டவசமாக  நமது  இந்திய முஸ்லிம் சமூகம் இதில் சரியான வழிமுறையைப் பேண தயங்குகிறது. விதவைகள் மறுமணம் நிச்சயம் ஊக் கு விக்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரும்பாலான மனைவிமார்கள் விதவைகளே என்பதை அறிந்தும் கூட நமது சமூகம்  இதில் தயக்கம் காட்டுவது விந்தையிலும் விந்தைதான்.  அதுவும் ஆசாபாசங்கள் கொடிகட்டிப்பறக்கும் இன்றைய காலகட்டத்தில்  ஒரு பெண் கணவனின் துணையின்றி வாழ்வது எவ்வளவு கடினம் எனது அனைவரும் அறிந்ததே! எவருக்கெல்லாம் சக்தியும், செல்வமும் இருக்கிறதோ அவர்கள் இந்த சுன்னத்தை ஹயாத்தாக்கலாம் தானே!  இந்த சுன்னத்தை ஹயாத்தாக்க முஸ்லிம்சமூகம் தயக்கம் காட்டும் பட்சத்தில்;   விதவைகள் சிவப்பு விளக்கில் விழுவதற்கு பச்சை விளக்கு காட்டும் செயலாகவே அது அமையும் ஆபத்தும் இருக்கிறது. ]  வி...

ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்? ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம். உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்ச...

பலதார மணம் - ஓர் அலசல்

பலதார மணம் - ஓர் அலசல் இறைநேசன் பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும் . இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி ( Polygamy ) என்பார்கள் . இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இரு வகைப்படும் . 1. முதலாவது வகை - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது . இதனை பாலிஜினி ( Polygyny ) என்பார்கள் .   2. இரண்டாவது வகை - ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது . இதனை பாலியாண்டரி ( Polyandry ) என்பார்கள் .   இக்கட்டுரையின் கருவான முதலாவது வகை , ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்படியாக நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குவாட்ரோஜினி ( Quadrogyny ) இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில் இரண்டாவது வகை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது .  ...