இன்றைய அவசியத்தேவை-மார்க்க ஒற்றுமை
அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ ? நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர் , இது உலகப்பொதுமறை திருக்குர்-ஆன் 3:104- ன் வசனமாகும் இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்பதுதான். ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் நம் சமூகத்தினர் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா ? நீயா ? எனறு பலப் பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா ? மார்க்கத்தில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று கூக்குரலிடும் ஜமா-அத் தலைவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் மட்டும் கூட்டாக ஒன்று சேர்ந்து தாவாபு செய்யலாமா ? தனியாக இவர்களுக்கென்று ஜமாஅத் தலைவர்களுக்கு என்று ஒரு ஹஜ் மற்றும் கிப்லா உள்ளதா ? மார்க்கத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிறார்களா ? இந்த ஜமாஅத் தலைவர்கள்! உண்மையை உணர்ந்து எல்லா...