இடுகைகள்

சுவர்க்கத்தை பரிசாகபெற்றுத் தரும் நற்கிரியைகள் 1. அநாதையைப் பொறுப்பேற்றல்: "அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி). 2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்: "எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ). ஆயத்துல் குர்ஸி: "அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் " (பகரா 2:255). 3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை: 'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு: 'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்...

தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!

உலக   அளவில்   தண்ணீர்   ஒரு   மாபெரும்பிரச்சனையாக   உருவெடுத்துள்ளது . உலகில்   40 சதவீத   மக்கள்   தண்ணீர்   கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள் . பல   கோடி   மக்கள்   நீர்பற்றாக்குறை   உள்ள   பகுதியில்   வசிக்கின்றார்கள்என்று   ஐ . நா . சபை   தெரிவிக்கின்றது . எதிர்கால   தண்ணீர்   தேவையைமனதிற்கொண்டு   சந்திரன் ,   செவ்வாய்   கிரகத்தில் மனிதன்   உயிர்   வாழ   முடியுமா ? அங்கு   தண்ணீர்உள்ளதா ? என   விஞ்ஞானிகள்   தீவிர   ஆராய்ச்சியில்ஈடுபட்டு   வருகின்றனர் . உலகத்தில்   97.5   சதவீதம்   உப்பு   சுவைகொண்ட   நீர்   உள்ளது . மீதமுள்ள   2.5   சதவீதம்   தான்சுத்தமான   நீர் . அதிலும்   2.24   சதவீதம்   துருவபகுதிகளில்   பனிப்பாறைகளாகவும் ,   மக்கள் பயன்படுத்த   முடியாத   நிலையிலும்உள்ளது . மீதமுள்ள   0.26   சதவீத   தண்ணீரைத்தான்...