கடன் சிக்கல்... அவிழ்க்க 5 வழிகள்!
கடன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது இந்த காலத்தில். ஆபீஸில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கடன், மனை மற்றும் சொந்த வீடு வாங்கக் கடன், வாகனக் கடன் என இன்றைக்கு கடன் வலையில் சிக்கியவர்கள் பலர். கடனை வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துத்தான் வாங்குகிறோம். பிற்பாடு அதிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலில் சிக்கித் திண்டாடிப் போகிறோம். மோகன், சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைக் கணக்காளர். கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், மாதக் கடைசியில் அவரிடம் பைசா மிஞ்சியதில்லை. அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டுதான் மாசக் கடைசியில் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்துவருகிறது. எதிர்காலத்தில் நல்ல லாபத்தை சம்பாதித்துத் தரும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய வீடுதான் அவரைக் கடன் பிடிய...