நபிகளார் ﷺ வாழ்வில் இருந்து சவால்களை எதிர்கொள்ளும் பாடங்கள்
நபிகளார் ﷺ வாழ்வில் இருந்து சவால்களை எதிர்கொள்ளும் பாடங்கள் (திருக்குர்ஆன் வழிகாட்டல்) சவால்கள் வரும்போது "எனக்கு ஏன் இந்த நிலை?" என்று நாம் சோர்ந்துவிடக் கூடாது. சோதனை என்பது இந்த உலக வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை குர்ஆன் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیْنَ திருக்குர்ஆனில் கூறுகிறான்: " ஓரளவு அச்சத்தாலும் , பசியாலும் , பொருள்கள் , உயிர்கள் , விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம் . ( இத்தகு சோதனைகளில் ) பொறுமையைக் கடைப்பிடிப்போருக்கு ( நபியே !) நீர் நன்மாராயம் கூறுவீராக !" — (அல்குர்ஆன் 2:155) لَقَدْ كَانَ لَكُمْ فِیْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது ." — (அல்குர்ஆன் 33:21) மதிப்பிற்குரிய ...