சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம்
மதிப்பீடு பற்றி மிக அதிகமாக அக்கறைகொள்ளும் காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய பெட்டிக் கடைகள் வரை தங்களது பொருளாதார மேன்மைக்காக தொடர்மதிப்பீடு செய்கின்றன . மாதாந்திர , காலாண்டு , அரையாண்டு மறறும் வருடாந்திர கணக்குத் தணிக்கைகள் (Audit) போன்ற மதிப்பீட்டு முறைமைகள் தொடர்கின்றன . பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்மதிப்பீடு செய்யும் மனிதன் தனது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக , ஈருலக வெற்றிக்காக மதிப்பீடு செய்ய மறந்துவிட்டான் . ஷைத்தான் மனிதர்களை உலகமோகத்தில் மூழ்கடித்து மறக்கடித்துவிட்டான் . ஆனால் , படைத்த இறைவனோ திருமறையில் சுயமதிப்பீட்டின் பக்கம் நம்மை அழைக்கின்றான் . یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ؕ ' இறைநம்பிக்கை கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் , மேலும் , ஒவ்வொரு மனிதனும் , நாளைய தினத்திற்காக எ...