இடுகைகள்

அரபா நோன்பு பற்றிய கேள்விகள்

கேள்வி 01. அரபா நோன்பு வெள்ளிக்கிழமையில் நோற்கலாமா? ➖➖➖➖➖ பதில்:வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதாக இருந்தால் முந்திய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் சேர்த்து நோன்பு பிடிக்க வேண்டும் என்று ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸில் *"லா தஹுஸ்ஸூ யவ்மல் ஜும்அதி பிஸியாமின்"* என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது, வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி *(விசேஷமாகக் கருதி)* நோன்பு நோற்க வேண்டாம் என்றுள்ளது. அப்படி நோற்பதாக இருந்தால் மாத்திரமே மேல் கூறிய சட்டம். வெள்ளிக்கிழமை என்பதை கருத்திற் கொள்ளாமல் வேறு சுன்னத்தான நோன்புகளை கருத்திற் கொண்டு அந்நாளில் நோற்பது மேல் கூறிய சட்டத்திற்குள் இடம் பெற மாட்டாது. எனவே, வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு வந்தால் முந்திய நாள் அல்லது பிந்தைய நாள் நோன்பு நோற்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் ஒரு நாள் நோன்பு நோற்கலாம். இது மிகவும் தெளிவான ஒரு விஷயம். யாராவது ஒருவர் பேணுதல் கருதி வெள்ளிக்கிழமை அரபா நோன்பு நோற்று அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்பாராக இருந்தால் அது குற்றமில்லை. பிந்தைய நாள் துல் ஹஜ் 10 இல் நோன்பு நோற்பது கூடாது. அது பெருநாள் தினமாகும். ....................

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை பள்ளிவாசல் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வழியுமில்லை சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை. பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் முக்கியப்பணி. இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை. ஒரு மஹல்லாவில் பல்வேறு சிந்தனைகள்கொண்ட மக்கள், பலதரப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதென்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு நிமிடமும் ஒருவித அச்சத்தோடும் ப...

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்

மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள் , மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக இன்று பார்க்க இருக்கிறோம்! ü   தகுதி சொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு தகுதிகளை அது குறிப்பிடுகிறது. முதலாவதாக இணை வைப்பு இல்லாத , நல்லறங்களுடன் கூடிய இறைநம்பிக்கை கொண்டவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர் என்பதைப் பல வசனங்களில் இறைவன் அழுத்தமாகக் கூறியுள்ளான். ü   இணைவைப்பு இல்லா இறைநம்பிக்கை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத ஏகத்துவவாதிகள் மட்டுமே சொர்க்கம் செல்லத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டாரோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நம்ப மறுத்து விட்டாரோ அவர் சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறார். ...