இடுகைகள்

மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? அல்லது ரஃயியா

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாகும். ரஃயி என்றால் மனிதனின் சுய சிந்தனையின் மூலம் வந்தவைகளாகும். மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு வஹியின் மூலமாக கொடுக்கப்பட்டதாகும். வஹியாக கொடுக்கப்பட்ட மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத, அல்லது நபியவர்கள் அனுமதி வழங்காத எந்த ஒன்றையும் மார்க்கமாக செயல் படுத்த முடியாது. அப்படி செயல் படுத்தினால் அவர்கள் தெளிவான வழிகேடர்கள் என்று அல்லாஹ் பின் வருமாறு எச்சரிக்கிறான். “மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(33-36) மார்க்க விவகாரங்களில் நாம் யாரை பின் பற்ற வேண்டும் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் மூலம் அவதானிப்போம். அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படல் “நம்பிக்கை கொண்டவர்க...

கசகசா போதைப் பொருளா?

சமீபத்தில் ஒருவர் பிஜே தன் கடையில் கசகசாவை ஹராம் என்று தெரிந்தும் (?!) விற்கிறார் என்று குற்றம்சுமத்தி இருந்தார். அவர் போன்றுஅறியாமையில் உள்ளவர்களும் இதை படித்து அதன் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். கசகசா போதைப் பொருளா? பதில்:  2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில் பதிவிடலாம் என்று கருதி இருந்தோம். இருபது மாதங்கள் கழிந்த பின்னும் இக்கட்டுரையின் ஆதாரங்களை மறுத்து யாரும் பதிவிடவில்லை. எனவே இக்கட்டுரையை நமது இணையதளத்தில் வெளியிடுகிறோம். (சவூதி அரேபியாவில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியா செல்லும் பயணிகள் கசகசாவைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்துகிறது. கசகசா செடியில் இருந்து அபின் எடுக்கப்படுவதால் கசகசா ஒரு போதைப் பொருள் என்பதற்காக சவூதியில் தடை செய்யப்பட்டுள்ளதாக நம்பி தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சில அமைப்புகள் கசகசா பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகி...

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்..?

மௌலவி M. பஷீர் ஃபிர்தௌஸி இஸ்லாம் கல்விக்கும் ஞானத்திர்க்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம் கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தை பாதுகாக்கவும் அதனை பரப்புவதர்க்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன் 29:48,49) இந்த வசனத்திர்க்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்: குர்ஆன் என்பது ஏவல், விலக்கல்,செய்திகள் என்று சத்தியத்தை தெரிவிக்கக்கூடிய தெளிவான வசனங்களாகும் இதனை அறிஞர்கள் தங்களது உள்ளத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் இக்குர்ஆனை மனனம் செய்வதையும், ஓதுவதையும்,இன்னும் அதனை விளக்குவதையும் அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக்கியுள்ளான். பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கற்ற...

ரமழானுக்குப்பின்

# #  ################## ரமழான்  மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்: உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99) ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும். உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று ...

#ரமழானுக்குப் #பின்

ரமழான்  மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும்,அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது. அல்லாஹ் கூறுகிறான்: உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99) ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும். உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்ற...

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன. எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித இனத்திற்குப் பேரழிவாக மாறி வருகின்றது. முன்பு வாழை இலையில் சோறு போட்டு சாப்பிடுவர். அது சோற்றுக்கும் நல்ல மணத்தைத் தரும். உண்டு முடிந்த பின்னர் அந்தக் கழிவு மண்ணுக்கு வளமாகவே மாறிவிடும். ஆனால், இன்று அந்தளவுக்கு வாழை இலைகளைப் பெற முடியாதுள்ளது. பரவாயில்லை போயிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாமல் வாழை இலையை பொலித்தீனில் செய்து அதில் நமது மக்கள் சாப்பிட்டுவிட்டு வாழை இலையில் சாப்பிட்ட பெருமிதத்தை...

ரமளான் ஓய்வு மாதமா?

அசத்தியத்தைத் தூக்கிப் பிடிப்பவன் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் அணியணியாய் அதை ஊரெல்லாம் பரப்பித் திரிகிறான். . அந்த அசத்தியத்தை அடிக்கடி பார்த்துப் பார்த்தே பழகிப் போகும் பொதுசனமும் நாளடைவில் அதையே “சத்தியமாக இருக்குமோ” என்றும் நம்ப ஆரம்பித்தும் விடுகிறது. . அசத்தியத்தை உலகில் வாழ வைத்துக் கொண்டிருப்பதே அதன் பிரச்சார வேகம் தான். . அசத்தியத்தின் வேகத்தையும் மிஞ்சும் வேகத்தில் சொல்லப்பட வேண்டிய சத்தியமோ பாவம் இன்று ஒரு மூலையில் சுருண்டு போய் உறங்குகிறது. . “புனித மாதத்தில் ஷைத்தான்களோடெல்லாம் சச்சரவு எதற்கு? அமல் செய்வதற்குத் தான் ரமழான்” என்று பரவலான பிரச்சாரத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. . ஷைத்தானோடு களமிறங்கிப் போராடுவதே ஒரு மாபெரும் அமல் என்பதை நம்மில் அனேகர் இன்று மறந்து போனது ஏனோ? . ரமளான் மாதம் என்பது, ஏதோ கொஞ்சம் தொழுது விட்டுத் தேவாங்கு மாதிரி சுருண்டு படுக்கும் மாதம் அல்ல. . இஸ்லாத்தின் முதல் யுத்தமே ரமளான் மாதத்தில் தான் தொடுக்கப் பட்டது. “புனித மாதத்தில் இந்த சச்சரவெல்லாம் தேவையா?” என்று நபியவர்கள் அன்று நினைக்கவில்லை. . இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த அனேக யுத்தங்கள் ரமழான...

இஸ்லாத்தின் பார்வையில் விளையாட்டுக்கள்

படம்
பாடசாலை விடுமுறை வந்து விட்டால் எமது சிறார்கள் அவர்களின் விடுமுறை முடியும் வரை பொழுதுபோக்குக்காக சில விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது வழக்கம். அவர்களுக்கான அந்த வாய்ப்பை பெற்றோர்களே ஏற்படுத்தி கொடுப்பார்கள்! இந்த விளையாட்டுக்களில் இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுகள் எவை? இஸ்லாம் தடை செய்துள்ள விளையாட்டுகள் எவை ? என்பதை இந்த ஆக்கத்தில் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1) சூதாட்டம் தடை அல்லாஹ் திருமறையில்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَ...