வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்
அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன. ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்) நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள் 1. அளவை நிறு...