புதன், செப்டம்பர் 24, 2014

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாதுஇகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? என்று அம்மனிதரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.
                                                                                 புஹாரி-663:     அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி)
(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
                                                               அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1281
 கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை தொழக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.    
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நபி[ஸல்]கூறியதாக பின்வருமாறு 
பகர்ந்தார்கள் 
இகாமத் சொல்லப்பட்டால் பர்லான தொழுகையை தவிர வேறுதொழுகை
 கிடையாது. {முஸ்லிம்}
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்இந்த ஹதீஸிலிருந்து நாம்அறிந்து கொள்வது என்னவெனில் யாராவதுஒருவர் பள்ளிவாசலுக்கு சமூகமளித்து ஸுன்னதான தொழுகைகளைதொழுது கொண்டிருக்கும் வேளையில் பர்ள் தொழுகைக்காகஇகாமத்சொல்லப்பட்டால் அவர் அந்த ஸுன்னதான
 தொழுகையை விட்டு விட்டு பர்ள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 
இவ்வாறே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்பள்ளியில் இருந்த சமயம் முஅத்தின் இகாமத் சொன்னதன் பின்னர்
 ஒருமனிதன் தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை விசாரணை செய்தார்கள். இதனை நபி [ஸல்]அவர்களின்பின்வரும் நிகழ்ச்சி எமக்கு எடுத்து காட்டுகிறது.
இப்னு புஹைனா ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது
ஸுபஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் ஒரு மனிதர்முஅத்தின்
 இகாமத் சொல்லும் போது இரண்டு ரகஅத்துகள் தொழுதுகொண்டிருந்ததை நபி [ஸல்] அவர்கள்கண்டதும் , நீ ஸுபஹை நான்கு ரகஅத்துகளாகவா தொழுகிறாய் ? எனக்கேட்டார்கள். (முஸ்லிம்). 

அப்துல்லாஹ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து நபி[ஸல்] அவர்கள் சென்றார்கள்
அவரிடம் நபி[ஸல்] அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை
தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, "நபி[ஸல்] அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?'' என்று கேட்டோம்
அவர், "உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்க பார்க்கிறார்' என்று கூறினார்கள் என்றார்.      நூல்: முஸ்லிம்

சுபுஹூத் தொழுகையின் முன் சுன்னத் சம்பந்தமாக
சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகள் :
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1169
இதிலிருந்து சுபுஹின் முன் சுன்னத் முக்கியமானது என்பதை அறியலாம். ஆனால் சில முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சுபுஹூ பர்ளு தொழுகை நடக்கும் போது தாமதமாக வந்து முன் சுன்னத் தொழுது விட்டு பின்பு ஜமாஅத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281,1282
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்என்று கூறினார்கள் என்றார்.
நூல்: முஸ்லிம் 1283
இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1284
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், “இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?” என்று கேட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 1285
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
நூல்: புகாரி 663
சுபுஹின் ஜமாஅத் நடக்கும் போது ஜமாஅத் தொழுகையை தொழுது விட்டு பின்பு விடுபட்ட முன்சுன்னத்தை பின்பு தொழலாம் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர்: கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 2471
இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்என்று சொன்னார்கள். அதற்கவர், “ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.”
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதீ 387
                   நபிவழிப் படி நம் தொழுகைகளை அமைத்துக் கொள்வோம்