பிரார்த்தனைகளின் வழிமுறைகள்

              
பிரார்த்தனைகளின் வழிமுறைகள்ன்றதலைப்பின் கீழ்….
1.பிரார்த்தனை செய்யும் முறை
3.எப்படி பிரார்த்திக்க வேண்டும் -எப்படி பிரார்த்திக்கக் கூடாது….. என
1.பிரார்த்தனை செய்யும் முறை
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே  பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்குர்ஆன் 40:60). – ஆகவே, நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவகையில் செய்வோமாக,  அவைகள் பின்வருமாறு.
1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவன்  இவ்வாறு திருமறையில் கூறுகின்றான். ஆகவே காஃபிர்கள்  வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள். (அல்குர்ஆன் 40:14)
2. அல்லாஹ் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
• அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
• என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படியே நானும் நடந்து கொள்கிறேன், என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி
3. அல்லாஹ்விடத்தில் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
• அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும்  நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்குர்ஆன் 72:18)
• நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறியபின் பிரார்த்தனையை ஆரம்பித்து  அதைக்கொண்டே முடிக்கவும் வேண்டும்.
• நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக  அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
5. உள்ளம் சம்மந்தப்பட்ட நிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.
விடை கிடைக்குமென்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்,  மறதியான உள்ளத்தால் (உள்ளம்  சம்மந்தப்படாமல் நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
6. அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை மனதிற் கொண்டு, தான்  செய்த பாவத்தை  ஏற்றுக்கொண்டவராக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
• இறைவா! நீ எனது  இறைவன், நீயே என்னை படைத்தாய், நான் உனது அடிமை, நான் எனக்கு முடியுமான அளவிற்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன், வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை, என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி
7. பயபக்தியோடும் மனமுடைந்த நிலையிலும், அல்லாஹ்விடத்திலுள்ள சுவனத்தை ஆதரவு வைத்த நிலையிலும், நரகத்தை பயந்த நிலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
• அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு (தூக்கத்திலிருந்து) விலகிவிடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும் ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள். (அல்குர்ஆன் 32:16)
8. அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் நாம்  வேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல  வேண்டும்.
• இன்னும் அய்யூப் தன் இறைவனிடம், நிச்சயமாக என்னை (நோயிலான) துன்பம் தீண்டியிருக்கிறது. (இறைவா!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய் என்று பிரார்த்தித்த போது. (அல்குர்ஆன் 21:83)
• இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் என்று பிரார்த்தித்தபோது. (அல்குர்ஆன் 21:89)
9. சந்தோஷமான நேரத்திலும், கஷ்டமான நேரத்திலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.
• கஷ்டம், துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சந்தோஷமான








நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
• சந்தோஷமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள். அஹ்மத், தப்ரானி
10. பிரார்த்தனை செய்யும் போது கிப்லாவை முன்னோக்கி பிரார்த்திப்பது மேலானது.
• மழை தேடி பிரார்த்திப்பதற்காக தொழும் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் வெளியேறிச்சென்று கிப்லாவை முன்னோக்கி மழை தேடி பிரார்த்தனை செய்தார்கள், பின்பு தன் போர்வையை அணிந்து கொண்டார்கள்.  ஆதாரம்: புகாரி
11. சுத்தமாக இருப்பது நல்லது.
• ஒளு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை கேட்டார்கள், பின்பு தன் இரு கரங்களையும் உயர்த்தினார்கள், யா அல்லாஹ்! (இறைவா!) உபைத் அபூ ஆமிரின் (பிழைகளை) மன்னித்தருள்வாயாக, நான் நபியவர்களின் இரு கக்கத்தின் வெண்மையையும் பார்த்தேன், இறைவா! உன் மனித படைப்புகளில் அதிகமானவர்களுக்கு மேல் அவரை (உயர்த்தி) வைப்பாயாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ஆதாரம்: புகாரி
12. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி (வஸீலா) தேடுவது.  (இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா மூன்று வகையாகும்).
அ. அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது.
ஆ. நல் அமல்களைக் கூறி பிரார்த்திப்பது.
இ. உயிருடன் இருக்கும் நல்லடியார்களிடம் பிரார்த்திக்கும்படி வேண்டுவது.
13. அல்லாஹ்விடத்தில் மட்டுமே உதவி தேடுதல்.
   உன்னையே வணங்குகிறோம் இன்னும் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)
• இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.      ஆதாரம்: திர்மிதி
14. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும், (நான் பிரார்த்தனை செய்தேன் அல்லாஹ் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வது)
அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
15. இரு கைகளையும் ஏந்திப் பிரார்த்திப்பது.
• தனது இரு கைகளையும் ஏந்தி நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
• நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான், ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான், என ஸல்மானுல் பாரிஸி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
16. நபியவர்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரார்த்தனைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது சிறந்தது.
17. பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்பிற்குரிய நேரங்களையும், காலங்களையும் பயன்படுத்திக் கொள்வது. (இதுபற்றி விரிவாக சென்ற பதிவில் கூறப்பட்டு விட்டது)
18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.
19. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக உள்ள திக்ருகளை தேர்ந்தெடுத்து பிரார்த்திப்பது.
உதாரணம்: அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு பிரார்த்திப்பது, நாம் செய்த நல்ல அமல்களை முன் வைத்து பிரார்த்திப்பது,  யூனுஸ்(அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் இருக்கும் போது இந்த வார்த்தையைக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான், இன்னும் இதுபோன்ற வார்த்தைகள்.
20. பிரார்த்தனையில் எல்லைகடக்காமல் இருக்க வேண்டும்.
(ஆகவே முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:55)
எல்லை கடந்து பிரார்த்தனை செய்வதற்கு சில உதாரணங்கள்.
• அல்லாஹ் அல்லாத பெயர்களைக் கொண்டு அழைத்து பிரார்த்திப்பது.
• எல்லை கடந்து சத்தத்தை உயர்த்துவது.
• மெட்டெடுத்து பிரார்த்திப்பது, இன்னும் இது போன்றவைகள்.
21. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது கூடாது. என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக் கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள், இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான், என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ஆதாரம்: திர்மிதி
குடும்பத்தாரின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது கூடாது. யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்) அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் ஆகவே, நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றார்! அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள்.         ஆதாரம்: திர்மிதி
பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்விற்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
பிரார்த்தனை என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று,  பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டும் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்த படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மட்டும் தான் பிரார்த்தித்து கேட்க வேண்டும் என்று கூறக்கூடிய குர்ஆன் வசனங்களின் எண்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,
40:60, 2:186,  35:13-14, 22:73, 7:144, 46:4-5, 40:20, 39:38, 27:62, 10:107, 6:17, 46:5, 16:20-21, 16:17, 22:73-74, 27:62, 3:135, 39:53, 2:186, 42:49, 21:89-90, 11:70-73, 26:80, 21:83-84 இன்னும் இது போன்ற பல குர்ஆன் வசனங்களும் இருக்கின்றன. அவைகளையும் தெரிந்து அல்லாஹ்விடத்தில் மட்டும் பிரார்த்தித்து ஈருலக வெற்றிகளையும் பெறுவோமாக! 
ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும்அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு
1. லைலதுல் கத்ரின் இரவில் கேட்கப்படும் பிரார்த்தனை.
‘அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ரின் இரவை நான் அடைந்து கொண்டால் என்ன கூறவேண்டும் என கேட்டேன்
அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃப அன்னீ’.
பொருள்: இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன், என்னை மன்னிப்பாயாக!’
2. இரவின் நடுப்பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை.
இரவின் நடுப்பகுதி அல்லது (இரவில்) மூன்றில் இரண்டு பகுதி சென்றதற்கு பின் உயர்வு மிக்க அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிக் கேட்கின்றான். ‘ கேட்கக்கூடியவர் இருக்கின்றாரா? கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவருக்கு விடையளிக்கப்படும், பிழைபொறுப்பு கேட்பவர் இருக்கின்றாரா அவருடைய பாவம் மன்னிக்கப்படும் என்று சுப்ஹுடைய நேரம் வரும் வரை அல்லாஹ் கேட்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
3. ஐநேரத் தொழுகைக்குப் பின் (ஸலாம் கொடுப்பதற்கு முன்)
அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள். ஆதாரம்: திர்மிதி
4. அதான் இகாமத்துக்கு இடையில் செய்யப்படும் பிரார்த்தனை.
‘அதானுக்கும் இகாமத்துக்குமிடையில் செய்யப்படும் துஆ தட்டப்படமாட்டாது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.           ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி
5. பர்ளான தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போதும் யுத்த களத்தில் போர் மூழும்போதும் செய்யப்படும் பிரார்த்தனை.
‘இரண்டு பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது.தொழுகைக்காக அழைப்பு கொடுக்கப்படும் போதும்   போர்களத்தில் சிலர் சிலருடன் சண்டை போட்டுக் கொள்ளும் போதும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’   ஆதாரம்: அபூதாவூத்
6. மழை பொழியும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
‘இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படமாட்டாது,  தொழுகைக்காக பாங்கு சொல்லப்படும் போதும் மழை பொழியும் போது கேட்கப்படும் பிரார்த்தனையும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’  ஆதாரம்: அபூதாவூத்
7. இரவில் ஒரு நேரம்.
‘இரவில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் உலகம் மற்றும் மறுமையின் நலவை கேட்டால் அல்லாஹ் அதை அவனுக்கு கொடுக்காமலில்லை, இது ஒவ்வொரு இரவிலும் இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம்
8. வெள்ளிக் கிழமையில் கேட்கப்படும் பிரார்த்தனை.
‘வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் தொழுத நிலையில் அல்லாஹ்விடத்தில் எதைக் கேட்டாலும் அதை அவன் கொடுக்காமல் இருப்பதில்லை என  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’                      ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
9. சுஜுதில் செய்யப்படும் பிரார்த்தனை.
‘ஒரு அடியான் அவனுடைய இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில் ) அதிகம்  துஆச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
10. சேவல் கூவும் சப்தத்தை கேட்கும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
‘சேவல் கூவும் சப்தத்தை நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடம் அவனின் அருளை கேளுங்கள் நிச்சயமாக அந்தச் சேவல் ஒரு மலக்கை கண்டிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
11. ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
நான் நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கின்றேன். எந்த ஓர் அடியாருக்காவது ஒரு சோதனை ஏற்பட்டு, அவர்
”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஉஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ ஹாதிஹி வக்லுஃப் லீ கைரன் மின்ஹா’
பொருள்: (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவன் பக்கமாகவே மீளுபவர்களாக உள்ளோம். யா அல்லாஹ்! என்னுடைய சோதனையில் எனக்கு நற்கூலியை தந்தருள்வாயாக! அதைவிடச் சிறந்ததை எனக்குப் பகரமாக்கித் தந்தருள்வாயாக!) என்று கூறுவாரேயானால், அல்லாஹ் அவருக்கு அவரின் சோதனையின் விஷயத்தில் நற்கூலியை வழங்கி, மேலும் அதைவிடச் சிறந்ததை அவருக்குப் பகரமாக்கித் தருவதை தவிர வேறில்லை.
உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அபூ ஸலமா(ரலி) மரணம் அடைந்ததும், நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த துஆவைக் நான் கூறினேன். அதனை ஏற்று அல்லாஹ் எனக்கு அவரை விடச் சிறந்தவர்களாக  நபி(ஸல்) அவர்களை கணவராக ஆக்கித் தந்தான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்:முஸ்லிம்.
12. ஒருவரின் உயிர் கைப்பற்றப்பட்டதற்கு பிறகு மனிதர்கள் செய்யும் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்த போது அவருடைய பார்வை (கண்) திறந்திருந்ததை பார்த்த நபி(ஸல்) அவர்கள், அவர்களின் கண்ணை மூடிக்கொண்டு, நிச்சயமாக உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை உயிரை பின்தொடருகின்றது என்றார்கள், அப்போது அவர்களின் குடுப்பத்தினர்கள் ஓலமிட்டார்கள், நல்லதைக்கொண்டே தவிர உங்கள் மீது நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம் காரணம் நீங்கள் கூறுவதற்கு மலக்குகள் ஆமீன் கூறுகின்றார்கள்.                ஆதாரம்: முஸ்லிம்
அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்த பொழுது நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அவரின் கண்கள் திறந்து இருந்தன. அவரின் கண்களை நபி(ஸல்) அவர்கள் மூடினார்கள்,  பிறகு கூறினார்கள், ”நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் அவரின் பார்வையும் உயிரை பின்தொடருகின்றது. (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடிவிடுங்கள்) அப்பொழுது அபூஸலமாவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கதறி அழுதார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கிக் கூறினார்கள், நன்மையைக் கொண்டே தவிர நீங்கள் உங்களுக்கு துஆச் செய்யாதீர்கள். நிச்சயமாக மலக்குகள் நீங்கள் சொல்லக் கூடியவைகளுக்கு ஆமீன் கூறுகிறார்கள்”. பின்பு நபி(ஸல்) அவர்கள்,
பொருள்: இறைவா! அபூஸலமாவின் பிழைகளைப் பொறுப்பாயாக! நேர்வழி பெற்றவர்களின் (அந்தஸ்தில்) அவரின் அந்தஸ்தை உயர்த்துவாயாக! அவரின் வாரிசுகளுக்கு நீயே சிறந்த பிரதிநிதியாக இருப்பாயாக! அகிலங்களின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விஸ்தீரணமாக்கி வைப்பாயாக! அவரின் மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பாயாக! என அவருக்காக துஆச் செய்தார்கள். ஆதாரம்: முஸ்லிம்,  அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
13. நோயாளியிடம் செய்யப்படும் பிரார்த்தனை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் நோயாளியிடமோ, அல்லது மரணித்தவரிடமோ சென்றால் நன்மையானவைகளைக் கூறுங்கள். (நல்ல துஆக்களைச் செய்யுங்கள்) நிச்சயமாக மலக்குகள் நீங்கள் கூறுவதின் மீது ஆமீன் சொல்கிறார்கள். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்ததும், நான் நபியவர்களிடம் சென்று அபூஸலமாவின் மரணச் செய்தியைக் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்.
பொருள்: இறைவா! எனக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! எனக்கு அவரை விட அழகிய பகரத்தை ஏற்படுத்துவாயாக! என நீர் துஆச் செய்வீராக எனக் கூறினார்கள். நான் அவ்வாறு துஆச் செய்தேன். பின்னர் அவருக்கு பகரமாக அவரை விடச் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்கு கணவராக ஏற்படுத்தித் தந்தான். ஆதாரம்: முஸ்லிம்,  அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
14. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை பயந்து கொள்ளுங்கள், காரணம் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் திரையில்லை என    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: அஹ்மத்
‘அநியாயம் செய்யப்பட்டவன் கெட்டவனாக இருந்தாலும் அவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவனுடைய பாவம் அவனோடு சேர்ந்தது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்
15. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் பிரார்த்தனை
‘மூன்று பேருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது,
 1.பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை,
 2.நோன்பாளி செய்யும் பிரார்த்தனை
 3.பிரயாணியின் பிரார்த்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகி
16. பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம்
மூன்று பிரார்த்தனைகள் எந்த சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும்,
1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை,
2.பிரயாணியின் பிரார்த்தனை,
3.பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ஆதாரம்: திர்மிதி
17. ஸாலிஹான குழந்தை தன் பெற்றோர்களுக்கு செய்யும் பிரார்த்தனை
‘ஆதமுடைய மகன் மரணித்தால் அவனுடைய அமல்களில் மூன்றைத்தவிர (மற்ற அனைத்து அமல்களும்) துண்டித்து விடும்.
1.நிரந்தர தர்மம்,
2.அவருக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான குழந்தை, 
3.பயனுள்ள கல்வி
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: முஸ்லிம்

18. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து லுஹர் தொழுவதற்கு முன் செய்யப்படும் பிரார்த்தனை
‘நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததற்கு பின் லுஹர் தொழுவதற்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுதுவிட்டு, இது வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரமாகும், இந்த நேரத்தில் எனது அமல் உயர்த்தப்படுவதை நான் எனது  எனது எனது அமல் உயர்த்தப்படுவதை நான் விரும்புகின்றேன் என கூறினார்கள்.                    ஆதாரம்: திர்மிதி
19. இரவில் தூக்கத்திலிருந்து விழித்து செய்யும் பிரார்த்தனை
யாராவது இரவில் விழித்தெழுந்து ஏதாவது பிரார்த்தனை செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும், அவர் உளு செய்து தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
20. ஒரு முஸ்லிம் சகோதரருக்காக மறைமுகமாக கேட்கப்படும் பிரார்த்தனை
‘ஒரு முஸ்லிம்,  தன்  சகோதரருக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவருடைய தலைப்பக்கம் அதற்காக சாட்டப்பட்ட ஒரு மலக்கு நின்று கொண்டு தன் சகோதருக்காக நலவானதைக் கொண்டு அவர் பிரார்த்திற்கும் போதெல்லாம், ஆமீன் (அல்லாஹ் இந்த துஆவை ஏற்றுக் கொள்வானாக) என்று கூறுகின்றார், இன்னும் உனக்கும் இவ்வாறு கிடைக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ஆதாரம்: முஸ்லிம்
21. நீதியான அரசன் செய்யும் பிரார்த்தனை
‘மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது,
1.நோன்பாளி நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை,
2. நீதியான அரசனின் பிரார்த்தனை
3.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
 (இம்மூவரின் பிரார்த்தனையையும்) அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி வானத்தின் வாசல்களை திறந்து, என் கண்ணியத்தின் மீது ஆணையாக (இப்போது இல்லாவிட்டாலும்) பிறகாவது நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
22. பிரயாணி பிரயாணத்தின் போது செய்யும் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! அல்லாஹ் தூய்மையானவன் தூய்மையில்லாதவைகளை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். தூதர்களுக்கு ஏவியதையே இறை விசுவாசிகளுக்கும் ஏவியிருக்கின்றான்    (என்று கூறிவிட்டு பின்வரும் ஆயத்தை கூறினார்கள்) (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்ல காரியத்தையும் செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை   நன்கறிகிறவன் (அல்குர்ஆன் 23:51) இன்னும் விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 2:172) என்ற வசனத்தை கூறிவிட்டு, புழுதிபடிந்த நிலையில் பரட்டைத்தலையுடன் நீளமான பிரயாணம் செய்யும் ஒரு மனிதர் தன் இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி என் இறைவா! என் இறைவா! என்று (பிரார்த்திக்கின்றார்) அவர் உண்பதும் ஹராம், அவர் குடிப்பதும் ஹராம், அவர் அணிவதும் ஹராம், அவர் ஹராத்தைக் கொண்டே வளர்க்கப்பட்டிருக்கின்றார் அவருடைய பிரார்த்தனை எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.     ஆதாரம்: முஸ்லிம்.
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்புக்குரிய                    நேரங், காலங்களையும் பயன் படுத்திக்கொள்வது.
1. ரமளான் மாதம்.
2. லைலத்துல் கத்ர் இரவு.
3. இரவின் கடைசிப்பகுதி.
4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.
5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.
6. அரஃபா தினத்தில்.
7. ஜும்ஆவடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.
8. கடமையான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது.
9. யுத்த நேரத்தில்.
18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.
19. சிறப்புக்குரிய நேரங்களில் பிரார்த்தனை செய்வது.
உ-ம் : சுஜூது செய்யும் போது
உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது செய்யும் நேரம்,ஆகவே சுஜூது செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
சுஜூதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
தொழுகையில் சூரத்துல்ஃபாத்திஹா ஓதிமுடிந்ததும் ஆமீன்சொல்லும் போது.
இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் (மலக்குகளும் ஆமீன் சொல்கிறார்கள்) யாருடைய ஆமீன் மலக்கு மார்களின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஆதாரம் : புகாரி
சேவல் கூவும் போது.
சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள், அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். ஆதாரம் :- பைஹகி
மற்ற சகோதரருக்காக பிரார்த்திக்கும் போது.
ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
20. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களை உபயோகிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது.
என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக்கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
இரத்தபந்தங்களின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது.
யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்!அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். ஆதாரம் : திர்மிதி
பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4-48)
பிரார்த்தனை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தப்படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் கேட்க வேண்டும்.
நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.

 3. எப்படி பிரார்த்திக்க வேண்டும் -எப்படி பிரார்த்திக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!