இஸ்லாமிய பார்வையில் பெண்கள்


بسم الله الرحمن الرحيم

قوله تعالي: يا ايها الناس انا خلقناكم من ذكر وانثي وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله علييم خبير( 49:13)
عن عبد الله ابن عمرو ان رسول الله صلي الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم

அல்லாஹ்வின் அளவற்ற ஆச்சர்யமான படைப்புகளிள் அந்தஸ்தான ஆறறிவு தரப்பட்ட படைப்பு மனிதப் படைப்புதான். மனிதன் என்ற வார்த்தை ஆண் வர்க்கத்தையும் பெண் வர்க்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும். குடும்ப வாழ்விலும் வெளியுலக வாழ்விலும்  ஆணும் பெண்ணும் சில உரிமைகளையும் சில கடமைகளையும் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.பெண் குடும்பத்தின் உள்துறை அமைச்சராகவும் ஆண் வெளித்துறை அமைச்சராகவும் செயல்படுகிறார்கள் பெண் என்பவள் காய்கனிகளும் பூக்களும் பச்சை பசுமையான இலைகளும் கிளைகளும் கொண்ட ஒரு மரத்தின் வேர்களைப் போன்றவள் மண்ணிற்கடியில் மறைந்து செயல்படும் வேர்களைப்போல வீட்டிற்குள் மறைந்திருந்து தன் கணவரின். தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் ஒளிமயமான வாழ்விற்காகத் தண்னையே தியாகம் செய்பவள்.
1) மாற்றார்களின் பார்வையில் பெண்கள் ( அன்று).
********************************************
ஆப்ரிக்கர்கள்: பெண்கள் நஞ்சூட்டப்பட்ட மரம்.ஷைத்தானின் அசுத்தங்களுல் ஒன்றாகும்.
ரோமர்கள்: பெண்கள் ஆண்மா இல்லாதவர்கள்.
சீனர்கள்: பெண்கள் நற்பாக்கியத்தை கழுகிடும் விஷநீராவாள். ஒரு சீனர் தன் மனைவியை உயிருடன் புதைக்கும் உரிமை பெற்றவர்.
இந்து மதத்தில் பெண்கள்
****************************

பெண்கள் விஷம் மரணம் நரகம் நெருப்பு ஆகியவைகளை விட மோசமானவர்கள். அவளின் கணவன் இறந்து விட்டால் அவள் வாழத் தகுதியற்றவள். எனவே அவள் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவேண்டும். தாய் தந்தையரின் ஆன்மா ஆண்பிள்ளையைக் கொண்டுதான் சாந்தியடையும்.பெண்ணைக் கொண்டு நற்காரியங்கள் கெட்டுப்போகும். கணவனுக்கு மனைவி அடிமையாகவே இருக்க வேண்டும் கணவன் தெய்வத்திற்குச் சமமானவன்.விதவைகள் சுபகாரியங்களில் கலத்தல் கூடாது விதவைகள் குறுக்கே வந்தால் காரியங்கள் விமோட்சனம் அடையாது அவர்களுக்கு மறுமணம் கூடாது.மாத விலக்கு காலங்களில் வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் தனிமைப்படுத்தப் படவேண்டும். இது போன்றவை இந்து  மதம் பெண்களுக்குச் செய்த அநீதிகள்.
யூதர்கள் பார்வையில் பெண்கள்
*************************************

பெண்கள் சாபத்திற்குரியவர்கள். ஏனெனில் அவர்கள்தான் வழிகேட்டிற்கு காரணமாக இருக்கின்றனர். மேலும் அவர்கள் மாதத் தீட்டின் போது அசுத்தமானவர்கள். ஒரு பெண்ணின் தந்தைக்கு அவளை விற்கும் உரிமை உண்டு.
ஆண்குழந்தை பிறந்தால் பேறுகாலத் தீட்டு ஏழு நாட்கள் என்றும் பெண்குழந்தை பிறந்தால் அசுத்த நாட்கள் பதினைந்து என்றும் ஏற்றத்தாழ்வு கையாளப்பட்டது.ஆண்குழந்தை இருந்தால் பெண்ணிற்குச் சொத்தில் பங்கு கிடையாது. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். விருப்பமில்லையெனில் காரணம் ஏதுமின்றி விவாகரத்தை எழுதிக் கையில் கொடுத்து விடலாம்.

அறியாமைக்கால அரபியர் பார்வையில் பெண்கள்
*****************************************
பெண்களை இழிவாக எண்ணி உயிருடன் புதைப்பவர்காளக இருந்தனர். 
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم (58) يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون (النحل : 58 – 59)
16:58. 
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
16:59. 
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதாஅல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்)அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?

நவீன யுகத்தில் பெண்கள் மீதுள்ள பார்வை (இன்று)
*****-**********************
பெண்களை கவர்ச்சியின் அடையாளமாக  எண்ணுகின்றார்கள்
விளம்பரங்களில் நடிக்க வைப்பது.நிதி வசூலிக்க நடிக்க வைப்பது.சினிமா நாடகம் நடணம் இன்ன பிற...
வெட்க உணர்வற்றவளாக ஆக்குகின்றனர்.அழகிப் போட்டிகள் விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற....
பணத்திற்காக எதையும் செய்பவள் எனும் தோற்றத்தை உருவாக்குவது.
மேலை நாடுகளில் பெண்கள் 14 வயதில் கற்பை இழக்கின்றாள். தன் கற்பை விற்று பள்ளிக் கட்டணத்தை செலுத்துகின்றாள்.
இஸ்லாமிய பார்வையில் பெண்கள்.
*****************************************

1)பெண்கள் ஆண்களைப் போல் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
மனிதன் ஓர் ஆ ண்மற்றும் ஒரு பெண்ணிலிருந்தே படைக்கப்பட்டுள்ளான். அப்படியாயின் ஆணுக்குரிய அந்தஸ்து பெண்ணுக்கும் இருக்கின்றது.
 
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (الحجرات : 
13
*üபெண்களின் பெயரில் ஒரு தனி சூரா (சூரா அந்நிஸா)
*
முன்மாதிரி பெண்களை உதாரணங்களாக கூறி அல்லாஹ் திருக்குர்ஆனில் கவுரவித்துள்ளான். உதாரணமாக! மர்யம் (அலை) பற்றி குர்ஆனில்
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَامَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (آل عمران : 37)
  ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அம்மையார் பற்றி 
وَضَرَبَ اللَّهُ مَثَلاً لِلَّذِينَ آمَنُوا امْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتاً فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ القوم الظالمين ( التحريم : 11)
خَوْلَةَ بِنْتِ ثَعْلَبَةَ رضي الله عنها (சூரா அல்முஜாதலா)
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (المجادلة : 1)
அல்ஹதீஸ்

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ» (النسائي : 3939)
உலகில் எனக்கு பெண்கள் மற்றும் நறுமனம் விருப்பமானதாக ஆக்கப்பட்டுள்ளது. மேலும் எனது கண்குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது. (நஸாயீ : 3939)
     
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ» مسلم : 1467
2911. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே;பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே.இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்.
******************************

1)பிறப்புரிமை :
وإذا الموءودة سئلت (8) بأي ذنب قتلت (9) 
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9. “
எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று
2) கல்வியுரிமை

اقرأ باسم ربك الذي خلق (1)
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(ஓதுவீராக) என்பது ஆண் பெண் என்ற இரு பாலரையும் நோக்கி சொல்லப்பட்ட உத்தரவு.
பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமையை இஸ்லாம் நடை முறைப்படுத்தியது பற்றி 
عَنْ أَبِي سَعِيدٍ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ، فَقَالَ: «اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا»، فَاجْتَمَعْنَ، فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلاَثَةً، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ»، فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: يَا رَسُولَ اللَّهِ، أَوِ اثْنَيْنِ؟ قَالَ: فَأَعَادَتْهَا مَرَّتَيْنِ، ثُمَّ قَالَ: «وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ» خ :

7310
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்" எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்" என்றார்கள். (1249) 
3)அமல் செய்வதற்கான உரிமை

وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون  (التوبة : 105)
9:105. (நபியே! அவர்களிடம்:) நற் செயல்களைச் செய்யுங்கள்;திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும் முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்மேலும் இரகசியங்களையும் பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.

ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما (النساء : 132)
4:32.மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோஇ அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;ஆண்களுக்குஇ அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும்இ அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டுஎனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

விவாகம் - கணவனை தேர்வு செய்யும் உரிமை
.
عن أبي هريرة أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ» رواه البخاري : 
5136. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் . நபி(ஸல்) அவர்கள்இ'கன்னிகழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள். மக்கள்இ'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ'அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.
விவாகரத்து
 
         
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» رواه البخاري: 
5273. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோஇ மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால் நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர் 'ஆம் (தந்து விடுகிறேன்)என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்) 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!என்று கூறினார்கள்.
    அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்ற பெண்ணுக்கும் தான் அடிமையாக இருந்த காலத்தில் தன் விருப்பத்திற்கு மாறாக தன் எஜமானனால் மணமுடிக்கப்பட்டவனை விவாக ரத்து செய்யும் உரிமை உண்டு.

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ. رواه البخاري 5283 
5283. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?'என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களாஎன்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லைநான் பரிந்துரைக்கவே செய்கிறேன்என்றார்கள. அப்போது பரீரா '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லைஎன்று கூறிவிட்டார்.
சொத்துரிமை

يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين (النساء : 11
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்.
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பாதுகாப்பு அரண்கள்.
Ø வீடே சிறந்தது.
********************

وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا (الأحزاب :33)
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிஇ உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
அந்நியர்களுடன் எப்படி பேச வேண்டும்?

يانساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا(32:33)
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்லநீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
புர்கா அனிவது பார்வையை பேனுவது
**************************************
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيه المؤمنون لعلكم تفلحون (النور  :31)
24:31. இன்னும்முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாதுஇன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்மேலும் (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாதுமேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்மேலும் முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி) நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
Ø நிகாப் (ஃபித்னாவின் அச்சம் இருக்கையில் முகத்திறை அணிந்து கொள்வது)

ياأيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما (الأحزاب :59)
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்அவர்கள் தங்கள் தலைமுந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்மிக்க அன்புடையவன்.
மஹ்ரமுடன் பயணம் 
************************
3006 - صحيح البخاري ، ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻧﻪ: ﺳﻤﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﻘﻮﻝ: «§ﻻ ﻳﺨﻠﻮﻥ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ، ﻭﻻ ﺗﺴﺎﻓﺮﻥ اﻣﺮﺃﺓ ﺇﻻ ﻭﻣﻌﻬﺎ ﻣﺤﺮﻡ»، ﻓﻘﺎﻡ ﺭﺟﻞ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، اﻛﺘﺘﺒﺖ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﻛﺬا ﻭﻛﺬا، ﻭﺧﺮﺟﺖ اﻣﺮﺃﺗﻲ ﺣﺎﺟﺔ، ﻗﺎﻝ: «اﺫﻫﺐ ﻓﺤﺞ ﻣﻊ اﻣﺮﺃﺗﻚ»
3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, “இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.
குடும்வாழ்வில் பெண்களின் கடமைகள் :
    1. 
கணவனுக்கு நல்ல மனைவியாக இருக்க வேண்டும். நல்ல மனைவிக்கான இலக்கணத்தை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ: «الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ، وَتُطِيعُهُ إِذَا أَمَرَ، وَلَا تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَمَالِهَا بِمَا يَكْرَهُ» سنن النسائي : 3231.
பெண்களில் சிறந்தவர் யார்என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள். அவன் (கணவன்) அவளைப் பார்த்தாள் அவள் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் விரும்பாததை தன் விஷயத்திலும் தன் பொருளாதாரத்திலும் அவனுக்கு மாறு செய்யமாட்டாள்
  இதன்படி நல்ல மனைவிக்கான இலக்கணம் மூன்று !
1.  தன் கணவனுக்கு (தன் வெளிப்படையான தோற்றத்தாலும் உள்ளப்பூர்வமான நற்குணத்தாலும்) அழகாக தோற்றமளிப்பவள்.
    நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு கணவன் தன் மனைவியை ஆவலுடன் பார்க்கும் பார்வை  அவனது சிந்தனையில் பதிந்து விடும். இது உளவியல் ரீதியாக நிரூகிப்பட்ட உண்மை. ஆகையால்வெளியூருக்குச் சென்று திரும்பும் கணவன் திடுதிப்பென தன் தன் வீட்டில் புகுந்து விடாமல் தன் வருகையை மனைவிக்கு தெரிவித்து அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ள தகவல் தெரிவிக்க வேண்டும் என கீழ் காணும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِ غَزَاةٍ، فَلَمَّا أَقْبَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ خَلْفِي، فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ، فَانْطَلَقَ بَعِيرِي كَأَجْوَدِ مَا أَنْتَ رَاءٍ مِنَ الْإِبِلِ، فَالْتَفَتُّ، فَإِذَا أَنَا بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا يُعْجِلُكَ يَا جَابِرُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، فَقَالَ: «أَبِكْرًا تَزَوَّجْتَهَا، أَمْ ثَيِّبًا؟» قَالَ: قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «هَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ» قَالَ: فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ، ذَهَبْنَا لِنَدْخُلَ، فَقَالَ: «أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا - أَيْ عِشَاءً - كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ» قَالَ: وَقَالَ: «إِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ»مسلم : 181
2909. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது நான் மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்) "ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்"நீ மணந்தது கன்னிப் பெண்ணையா அல்லது கன்னிகழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை;கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள்.
பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள். மேலும் "நீ (ஊருக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்;புத்திசாலித்தனமாக நடந்து கொள்" என்றும் சொன்னார்கள்.
2.  கணவனுக்கு மார்க்கம் அனுமதித்த விஷயங்களில் முழுமையாக கட்டுப்பட வேண்டும். குறிப்பாக இல்லறத்தில் கணவனுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். 
    
        
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ الله ، إِنَّ زَوْجِي صَفْوَانَ بْنَ الْمُعَطَّلِ، يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، وَيُفَطِّرُنِي إِذَا صُمْتُ، وَلَا يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ وَصَفْوَانُ عِنْدَهُ، قَالَ: فَسَأَلَهُ عَمَّا قَالَتْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا قَوْلُهَا يَضْرِبُنِي إِذَا صَلَّيْتُ، فَإِنَّهَا تَقْرَأُ بِسُورَتَيْنِ وَقَدْ نَهَيْتُهَا، قَالَ: فَقَالَ: «لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتِ النَّاسَ»، وَأَمَّا قَوْلُهَا: يُفَطِّرُنِي، فَإِنَّهَا تَنْطَلِقُ فَتَصُومُ، وَأَنَا رَجُلٌ شَابٌّ، فَلَا أَصْبِرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ: «لَا تَصُومُ امْرَأَةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، وَأَمَّا قَوْلُهَا: إِنِّي لَا أُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ،فَإِنَّا أَهْلُ بَيْتٍ قَدْ عُرِفَ لَنَا ذَاكَ، لَا نَكَادُ نَسْتَيْقِظُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، قَالَ: «فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، أَوْ ثَابِتٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّل( رواه ابو داود  .وابن ماجةِ
அபூசயீதில் குத்ரி( ரலி)அறிவிக்கிறார்கள்.நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் சபையிலே நாங்கள் அமர்திருக்கும் பொழுது ஒரு பெண் வந்தார்.அவர் நபிகளாரை நோக்கி.என் கணவர் ஸப்வான் இப்னு முஅத்தல் ( ரலி) அவர்கள் நான் தொழுதால் என்னை அடிக்கிறார்.நான் நோன்பு நோற்றால் என்னை நோன்பை விடச் சொல்கிறார்.சூரியன் உதயமாகும் வரை அவர் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இந்த மூண்று புகார்களையும் அப்பெண்மணி சமர்ப்பிக்கும் பொழுது அவர்களின் சபையில்தான் அவரின் கணவரும் இருந்தார். நபி ( ஸல்) அவர்கள் உடனே அவரிடம் விசாரனையை ஆரம்பித்தார்கள்.அதற்கு அவர் அளித்த பதில் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தொழுதால் அடிக்கிறார் என்ற என் மனைவியின் குற்றச்சாட்டிற்குரிய விளக்கம் யாதெனில்  என் மனைவி ஒவ்வொரு ரக்அத்திலும் நீளமான இரு அத்தியாயங்களை ஓதுகின்றால். அவ்வளவு நீளமாக ஓதித் தொழுவதைத்தான் வேண்டாம் என்று தடுத்தேனேயன்றி தொழுவதை நான் தடுக்கவில்லை. என்றார்.இவ்வாறு அவர் விளக்கம் கொடுத்தவுடன் அதை ஏற்றுக் கொண்ட நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகையிலே ஒரே ஒரு அத்தியாயமே எல்லோருக்கும் போதுமானதுதான்.என்றார்கள். அடுத்து அவர் தொடர்ந்தார் .யா ரசூலல்லாஹ் என் மனைவியின் அடுத்த குற்றச்சாட்டு அவர் நோன்பு வைப்பதை தடுத்ததாக கூறியிருக்கிறார்.அதற்கு காரணம் என் மனைவி சதா காலமும் ( நபிளான) நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.நானோ வாலிபன் இல்லறத்தையே வெறுத்துவிடும் அளவிற்கு என்னால்  பொறுமையாக இருக்க முடியவில்லை.அதனால் நபிலான நோன்பை தொடர்ந்து நோற்க வேண்டாமென தடுத்தேன் எனக்கூறினார். அவரது நியாயமான இந்த பதிலைக் கேட்ட மாநபி ( ஸல்) அவர்கள் உடனே ஓர் உத்தரவு பிறப்பித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் தன் கணவரின் அனுமதியின்றி நபிலான நோண்பு நோற்கக்கூடாது என்றார்கள். மூன்றாவது குற்றச்சாட்டிற்கும் அவர் முறையாக பதில் அளிக்க தொடங்கினார்.நாயகமே நான் சூரியன் உதயமாகும் வரை சுபுஹுத் தொழுவது கிடையாது என்ற என் மனைவியின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை. அதற்கான காரணம் நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து( தோட்டத்தில்) தண்ணீர் இரைத்து தொழில் செய்யக்கூடியவர்கள் இது அனைவரும் அறிந்ததுதான். எனவே சுபுஹு வேலையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை.சூரியன் உதிக்கும் பொழுதுதான் விழிக்க முடிகிறது என்று சொன்னார்கள். அந்த தோழரின் உண்மையான வார்த்தைகளின் மூலம் அவரின் யதார்த்த நிலையை அறிந்து கொண்ட  நபியவர்கள் ஸப்வானே நீர் எப்பொழுது கண் விழிக்கின்றீரோ அப்பொழுது உடனே தொழுவீராக என்றார்கள்.
பெண்கள் கணவனுக்கு கட்டுப்படாமல் போவதற்கான காரணங்கள்
1.  
படிப்பு (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்)
2.  
சினிமா மற்றும் நாடகம்.
3.  
தவறான  வளர்ப்பு முறை
4.  
பொருளாதாரம்.
3.)  தன் விஷயத்திலும் அவளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவளது கணவனின் பொருளாதாரத்தையும் கணவன் வெறுக்கும் விஷயத்தில் ஈடுபடுத்தமாட்டாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001