2019 முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?





تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ
وَتُعِزُّ مَنْ تَشَآء وَتُذِلُّ مَنْ تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ُ
 (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். 3:26

காலங்காலமாக முஸ்லிம் சமுதயாய மக்கள் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றார்கள். நமது முஸ்லிம் சமுதயாயமும் இந்த அரசியல்வாதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சமுதாயத்திற்கு கிடைத்ததென்னவோ நளினமான வார்த்தைகளும் ஏமாற்றமும் தான்.
நம்மிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, கல்வியறிவின்மை, மார்க்கத்தில் போதிய தெளிவின்மை ஆகியவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் முஸ்லிம்களை கறிவேப்பிலையைப் பயன்படுத்துவது போன்று தேர்தல் நேரங்களில் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் முடிந்த மறுகணமே தூக்கி எறிந்து விடுகிறார்கள். அரசியல் வாதிகளின் இத்தகைய செயல்களிலிருந்து இன்னும் நாம் பாடம் கற்கவில்லையென்றால் நாம் தான் நஷ்டவாளிகளாவோமே தவிர அந்த அரசியல்வாதிகளல்ல!
எனவே முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முன்வர வேண்டும். முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இடம் கொடுக்காத எந்தக் கட்சியையும் முஸ்லிம்கள் புறக்கணித்தே ஆகவேண்டும்.  இதன் மூலம் முஸ்லிம்களை உதாசீனப்படுத்தும் அந்த அரசியல்வாதிகள்,  முஸ்லிம்கள்  தங்களோடு இணைந்திருக்கின்ற வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள் என்று உணர வைக்க வேண்டும்.
ஏன் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்?
ஒரு முஸ்லிமால் மட்டுமே முஸ்லிம் சமுதாயயத்தின் அவல நிலையையும் அவர்கள் படுகின்ற இன்னல்களையும் உணர்ந்து அவர்களுக்கு உதவ முடியும்.தமிழகத்திலோ அல்லது வேறு எந்த மாநிலத்திலோ அல்லது உலகின் வேறு எங்கேயாகிலுமோ முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது முஸ்லிம்கள் மட்டுமே நமது சமுதாயம் பாதிப்புக்குள்ளாகின்றது என்றுணர்ந்து அதற்காக குரல் கொடுக்க முன்வருவார்கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அத்தகைய உணர்வுகள் நிச்சயம் இருக்காது. அவர்கள் வேண்டுமானால் கூறலாம், நாங்கள் முஸ்லிம்களின் நன்பர்கள் என்று! ஆனால் உண்மையில் அவ்வாறல்ல!
அல்லாஹ் கூறுகிறான் :
وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِىِّ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَآءَ وَلٰـكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ 
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களை (இறை நிராகரிப்பாளர்களைத் தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 5:81)
நம்மில் சிலர் கேட்கலாம் நாங்கள் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் என்று பார்த்து தானே வாக்களித்தோம்! ஆனால் அவர்களால் நமது சமுதாயத்திற்கு எவ்வித பலனும் இல்லையே என்று! நாம் மீண்டும் கூறுகிறோம், முஸ்லிம்கள் என்ற போர்வையில் இறை நிராகரிப்பவர்களோடு இணைந்திருக்கும் சக்திகளை நாம் இனம் கண்டு அவர்களை முற்றிலும் ஒதுக்காமல் அவர்களுக்கு வாக்களித்ததே அதற்கு காரணமாகும். அதனால் தான் அவர்கள் பிற மதகுருமார்கள் தங்களை கண்ணியமானவர்கள் என்று கருத வேண்டும் என்பதற்காக அவர்களின் காலில் விழுந்து அவர்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுதயத்தின் கண்ணியத்தையும் அவர்களிடம் அடகு வைக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
 ۨالَّذِيْنَ يَتَّخِذُوْنَ الْـكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ ؕ اَيَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا ؕ‏ 
இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (இறை நிராகரிப்பாளர்களை தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது (அல்-குர்ஆன் 4:139)
எனவே! நாம் நன்கு சிந்தித்து அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிகாட்டுதலையும் அதிகமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் வேட்பாளர்களையே ஆதரித்து அவர்களுக்கு வாக்களிக்க முன்வரவேண்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடாத இடங்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் அவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வித இடையூறும் தொல்லைகளும் ஏற்படாதோ அந்த கட்சிகளின் வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிம்களை வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளோடு இதற்கு முன்னர் கூட்டனி வைத்திருந்த கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் அற்ப அரசியல் ஆதாயத்திற்காவும் பதவி சுகத்திற்காகவும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று மீண்டும் அந்தப் பாசிச கச்திகளோடு இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகவே செயல்படக் கூடும். நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அவ்வாறு அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான் :
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَه وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ 
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள் (அல்-குர்ஆன் 5:56)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001