அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள்


அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள்

اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌  وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏
"வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."    (அல்குர்ஆன் : 2:268)
ஒரு இளம்பெண், தனக்குத் திருமணம் நடக்காது என்று எண்ணுகிறாள்.
ஒரு மனைவி, தனக்கு குழந்தை பிறக்காது என்று எண்ணுகிறாள்.
ஒரு இளைஞன், தனக்கு ஏழ்மை ஏற்பட்டு விடும்; தன் வேலை பறிபோகும் என்று எண்ணுகிறான்.
ஒரு மாணவன், பரீட்சையில் தான் தோல்வியடைந்து விடுவேன் என்று எண்ணுகிறான்.
இந்த எண்ணங்கள் அனைத்தும் ஷைத்தானிடமிருந்து தூண்டப்படுபவை.
நாம் அல்லாஹ்வின் மீது பற்றுதலும், அவன் மீது நல்லெண்ணமும் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மீது பற்றுதலும், நல்லெண்ணமும் ஏற்பட அவனைப் பற்றி நன்கறிய வேண்டும்.
"அல்லாஹ்வைப் பற்றி ஃகபீர்- அனுபவசாலிகளிடம் தான் கேட்க வேண்டும்.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்:

اَلرَّحْمٰنُ فَسْــٴَــــلْ بِهٖ خَبِيْرًا‏
"(அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அனுபவமிக்கவர்களிடம் அவனைப்பற்றிக்கேட்பீராக." (அல்குர்ஆன் : 25:59)
ஃகபீர்- என்ற வார்த்தைக்கு வெறுமனே கற்றறிந்தவர் என்பதல்ல; exbert- அனுபவமிக்கவர் என்று பொருள்.
அல்லாஹ்வின் நடைமுறைகள் குறித்து அதிகம் அனுபவம் படைத்தவர்கள் இறைத்தூதர்கள் தான்.   அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஸாலிஹ் (அலை) ‌اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏
"நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”(:11:61)என்றார்.
ஷுஅய்பு (அலை), اِنَّ رَبِّىْ رَحِيْمٌ وَّدُوْدٌ‏
நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான் (என்று கூறினார்).: 11:90)
நூஹ் (அலை),اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ ‏
"நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.(:11:41)
யூசுஃப் (அலை), اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُ‌
"நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்என்று கூறினார்.(: 12:100)
இப்ராஹீம் (அலை), اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
"நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்."(14:39) என்றார்.
சுலைமான் (அலை),  فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
"என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார்."(27:40)
இறைத்தூதர்கள் அனைவரும் தம் வாழ்க்கை அனுபவங்களின் வழியாகவே அல்லாஹு தஆலாவை மக்களுக்கு அறிமுகம் செய்தனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ஒருவர் "மறுமை நாளில் மனிதர்களிடம் யார் கணக்கு வழக்குக் கேட்பார்? என்று கேட்டார். 'அல்லாஹ்!' என்றார்கள்.
அரபுப்பழங்குடி இனத்தவரான அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக,  நாம் தப்பித்து விடுவோம்." என்று கூறி நிம்மதியடைந்தார்.
அல்லாஹ்வின் மீது முன்னோர் கொண்டிருந்த நல்லெண்ணம், அவனுடைய நீதம், ஆட்சியமைப்பின் மீதான பற்றுதல், அவன் முன்னிலையிலான ஒழுங்கு எவ்வளவு அழகு!

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
" நிச்சயமாக  நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில்  படைத்திருக்கின்றோம் . .(95:4)
ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து . . . . . .
அல்லாஹ் எல்லாரையும் வசதியாக எல்லா செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ,ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன் . .
" இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான் . .
மனிதன் 2 : " நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு . .
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு . .
மனிதன் 1 : " நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது . .
மனிதன் 2 : அல்லாஹ் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியமத்துகனை தந்துயிருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி  செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றாயே ? ? ?
"  எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள் . .
" அல்ஹம்துலில்லாஹ் ! ! !" அல்ஹம்துலில்லாஹ் ! ! !" அல்ஹம்துலில்லாஹ் ! ! !
" அவன் தான் அல்லாஹ் . .
" பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன் . .
கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33 டன் " அதாவது, 36,960 கிலோ  " மீன்களை " உணவு வழங்குகிறான் . .
" சுப்ஹானல்லாஹ் ! ! !
" உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள் ," அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான் . .
 இன்னும் சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான் . .
" ஆக , ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் . .
"நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவா சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று . .
 உங்களைப் படைத்து, ரிஜ்க் அளித்து பரிபாலிக்கக்கூடிய ரப்பை அவனுடைய அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . .
" அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .
" நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய் . .
" எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர் . .
" அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். .
"நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய் . .
  எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர் . .
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .
 நீ உடல் " ஆரோக்கியத்துடன் " உலா வருகின்றாய் . .
எத்தனையோநோயாளிகள்அதைப்பெறுவதற்காகவேண்டிகோடியைக் கொட்டுகின்றனர் . .
" அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .

" நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய் . .
" எத்தனையோ மண்ணறைவாசிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ."அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .
 நீஉனதுதேவைகளைமுறையிட்டுவணங்குவற்குஉனக்கொருஇறைவன் இருக்கின்றான் . .
எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் . .
" அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .
"நீ நீயாக இருக்கின்றாய் .  .
"  எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர் . .
அல்லாஹ்விற்கே நன்றி செலுத்து நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாக பிறந்ததற்கு . .
 எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருங்கள் . . " பிறரை மகிழ்விங்கள்
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் . .

اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ‏
"நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்திற்குப் பின்னும்) மீள வைக்கிறான்."(85:13)
வழிதவறியஇதயத்தையும்-மறைந்தமகிழ்ச்சியையும்-தலைகீழான ஆரோக்கியத்தையும்-துண்டித்த உறவையும்
-குறைந்து போன செல்வ வளத்தையும்-அல்லாஹ் மீள வைக்கிறான்.
இருந்திராத, சாத்தியமற்றதை அவனே புதிதாக உற்பத்தி செய்கிறான்.
எனவே,ஏழையின்உடைந்தநிலையுடன்,பற்றுக்கொண்டவனின் நம்பிக்கையுடன் அவன் வாசலில் நில்!
"அல்லாஹ்வின் மீது நாம் எப்போது தவறான எண்ணம் கொண்டவர்கள் ஆகிறோம்?" என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
"வஸ்வஸா- மனதில் ஊசலாட்டம் ஏற்படும்போது,
ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்திலேயே இருக்கும் போது,
அருட்கொடைகள் நீங்கிவிடுவதை எதிர்பார்க்கும் போது.
இவையனைத்தும் கருணையாளன் அல்லாஹ்வின் மீது தவறான எண்ணத்தின் மூலம் ஏற்படுபவை." என்று பதிலளித்தார்கள்.
யூசுஃப் (அலை) அவர்களை, ஓநாய்  அடித்து விட்டதாகக் கூறி சகோதரர்கள் அவர்களின் கதையை முடித்து விட முயற்சித்தார்கள்.
ஆனால் தந்தையார் யஃகூப் (அலை) அவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகேனும் யூசுஃப் (அலை) அவர்களை திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்ல என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
அவ்வாறே, யூசுஃப் (அலை) திரும்பவும் வரப்போவதை அறிந்து

قَالَ اَلَمْ اَقُل لَّـكُمْ‌ ‌ ۙ اِنِّىْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று கூறி (மகிழ்ந்தார்கள்). (அல்குர்ஆன் : 12:96)
அனுபவப்பூர்வமாக அல்லாஹ்வை உணர்ந்தவர்களால் அவன் மீது தவறான எண்ணம் கொள்ள முடிவதில்லை.
ஹஸனுல் பஸரீ (ரஹ்) கூறுவார்கள்:
செல்வ வளங்களை அல்லாஹ் நிர்ணயம் செய்து, தன் படைப்பினங்களுக்கு அவற்றை வழங்கும் பொறுப்பை தானே ஏற்றிருப்பது குர்ஆனில் 90 இடங்களில் வாசிக்கிறேன்;

வறுமையைக் கொண்டு ஷைத்தான் பயமுறுத்துவது குறித்த வசனத்தை ஒரேயொரு இடத்தில் வாசித்து விட்டு, 90 இடங்களில் கூறப்பட்ட உண்மையாளனின் கூற்றை சந்தேகிக்கிறோம்.

ஒரேயொரு இடத்தில் கூறப்பட்ட பொய்யனின் கூற்றை உண்மையாக்குகிறோம்."

இந்நோய் தீர அல்லாஹ்வை நன்கறிவது தானே நன்மருந்து.

...................................................................................................................................



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!