வெள்ளி, ஜூன் 07, 2019

குர்ஆனை பின்பற்றுவோம்.''எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது'' 17: 108

مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏ 
எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். 23:43.

இதற்கு முன்பு நூஹ் (அலை) காலத்திலிருந்து இறுதியாக மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவன் மூழ்கடிக்கப்பட்டது வரையிலான அல்லாஹ்வின் கோபத்தால் ஏற்பட்ட சீற்றத்தின் பேரழிவை மிகவும் சுருக்கமாகப் பார்ததோம். நாம் குறிப்பிட்டது மிகச்சில சம்பங்கள் மாத்திரமேயாகும், குர்ஆன் முழுவதும் அல்லாஹ் பல இடங்களில் உங்களுக்கு முன் வாழ்ந்த எத்தனையோ கோத்திரத்தார்களை அழித்திருக்கிறோம் எனக் கூறுகிறான் அவைகள் முழுவதையும் எடுத்து எழுத நம்மால் முடியாது என்பதால் மிகச்சுருக்கமாக சில சம்பவங்கள் மாத்திரத்தையே எடுத்து இந்த நேரத்திற்கு பொருத்தமாக எழுதினோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூஹ் (அலை) கால்த்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயம்,
ஆது சமுதாயத்தவர்கள் காலத்தில் பேரிரைச்சலுடன் கூடிய வேகமானக் காற்று,
ஸமூது கூட்டத்தார்கள் மீது இடி முழக்கத்துடன் கூடிய புயல் (மழை)க் காற்று
லூத் சமுதாயத்தாவர் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்தது
ஷூஐப் நபி சமுதாயத்தவர்களை அழித்தொழித்த பூகம்பம்.

இவைகள் யாவும் அல்லாஹ்வுடைய கோபத்தின் தெளிவான வெளிப்பாடு தான் என்பதை குர்ஆன் அழகாக சுட்டிக்காட்டுகின்றது, அதற்கு சான்றாக அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளான சம்பவங்கள் நடந்த நாடுகள் இன்றும் இடிபாடுகளுடன் அரேபியப் பிதேசங்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அரேபிய நாடுகளில் வாழக் கூடியவர்களுக்கு கண்கூடான விஷயமாகும்.
இங்கே நமக்கு ஒரு கேள்வி ? தோன்றலாம் மேற்கூறப்பட்ட விதம் அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடு தான் என்றால்? அந்த அழிவு முழு அநியாயக்கார மக்களையும் அல்லவா அழித்திருக்க வேண்டும் ? பாதியை அழித்து, பாதியை விட்டு விடுவதா ? மேற்கானும் நபிமார்கள் காலத்தில் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டவைகள் முழுமையாக அழிக்கப் பட்டிருக்கிறதே ! என்பதாகும்

பதில் : அன்று அநியாயக்கார சமுதாயம் அல்லாஹ்வின் கோபத்தால் முழுமையாக அழிக்கப்பட்டால், அடுத்த சமுதாயத்தை உடனடியாக உருவாக்கிடும் திட்டம் அல்லாஹ்விடம் இருந்தது. அதன் படி அச்சமுதாயம் அழிக்கப்பட்டதும் வேறொரு சமுதாயம் தாமதமின்றி உருவாகிவிடும். அச்சமுதாத்திலிருந்து ஒரு நபியை தேர்வு செய்து, ஒரு வேதத்தையும் இறக்கி வைப்பான். இவ்வாறாக லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் தோன்றியுள்ளனர்.

 ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْـرَا‌ ؕ كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ‌ فَاَتْبَـعْنَا بَعْـضَهُمْ بَعْـضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ‌ ۚ فَبُـعْدًا لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ 
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்க முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராகக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும். 23:44.
இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களும், குர்ஆனும் அருளப்பட்டு இதற்கு மேல் வேதமும், தூதரும் அனுப்பப் படுவதில்லை என்றும் உலகம் முடியுறும் காலம் வரை குர்ஆனே கடைசி வேதம் என்றும் அல்லாஹ் கூறி விட்டதால். முழு சமுதாயத்தையும் முன்னைப்போல் துடைத்தெறிந்திட மாட்டான் அப்படித்துடைத்தெறிவதாக இருந்தால் அது யுகமுடிவாகவே இருக்கும். ஆகையால் யுக முடிவு வரும் வரை தனது கோபத்தை அப்படியும், இப்படியுமாகவே ஆக்கிக் கொள்வான். நேற்று நடந்த சுனாமி தாக்குதல் போல் தான் அவ்வப்பொழுது நடைபெறும் அவைகளும் படிப்பினை பெற்று திருந்தி வாழ்வதற்கான சோதனையேயாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இன்னுமொரு கேள்வியும் இங்கே இயற்கையாக எழும் அவை :
அல்லாஹ்வுடைய கோபப்பார்வை தீயோர்களின் மீது மட்டும் தானே விழும் எப்படி நல்லவர்களை பாதிக்கும் என்பதாகும் .

பதில் ! இதே கேள்வியை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல் ) அவர்களிடம் வினவினார்கள் அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீயோர்களுக்காக இறங்கும் வேதனை அவர்களின் மிக அருகாமையில் இருக்கும் நல்லோர்களையும் கண்டிப்பாக பாதிக்கவேச்செய்யும். ஆனால் மறுமையில் இருவரும் எழுப்பப்படும் போது நல்லவர்களுக்குள்ள வெகுமதியாகிய சொர்க்கமும், தீயோர்களுக்கான இழிவுதரும் வேதனையாகிய நரகமும் வழங்கப்படும். எனக்கூறினார்கள்;.நபிமொழி

கன்டிப்பாக அல்லாஹ்வின் கோபமே மனிதர்கள் மீது சுனாமியாக இறங்கியது என்று நினைக்க வேண்டும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாதெனில் இறந்து மடிந்து விட்டவர்கள் மடிந்து விட்டவர்களே ! அவர்களுக்காக இக்கட்டுரை எழுதப்பட வில்லை. மாறாக எஞ்சியுள்ள நாம் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவனுக்கு கீழ் படிந்து நமது வாழ்க்கையை பரிசுத்த குர்ஆனின் கூற்றுக்கு ஒப்ப அமைத்துக் கொள்ள முன் வரவேண்டும்.
இன்று அல்லாஹ்வுக்கு இனைவைப்பதும், அநியாயமாக கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும், விபச்சாரம் செய்வதும், ஓரினச் சேர்க்கை செய்வதும், வியாபாரத்தில் பொய் பேசுவதும், மிக சாதாரணமாக அதுவும் அது நாகரீகம் போன்ற மாயையை உருவாக்கி ஊர் தோறும், வீதி தோறும் நடத்தப்படுவதும், இன்னும் மனிதனால் மனிதனின் மீது ஏவப்படும் மதவெறி இனச் சுத்திகரிப்புக்கள், அதில் கொடூரமாக நடத்தப்படும் கற்பழிக்கும் மிருகத் தனம். இவை அனைத்தும் மனிதனை கற்காலத்திற்கு இட்டுச்செல்லும் கடைந்தெடுத்த காட்டுமிராண்டித்தனமாகும் அதனால் இவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் இறங்கவேச் செய்யும்.

திருப்புங்கள் உங்கள் முகத்தை பரிசுத்த குர்ஆனின் பக்கம்
அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. 17:105.

இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். 17:016.

(
நபியே!) ''அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்'' என்று (நபியே!) நீர் கூறும். 17:107.

அல்லாஹ் கூறுகிறான்: உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். 8:2

அன்றியும், ''எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது'' என்றும் அவர்கள் கூறுவார்கள். இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். 17:108 லிருந்து 109 வரைகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக