முஸ்லிம் பெண்களுக்கு அழைப்புப்பணிக்கான 33 யோசனைகள்
பெண்களும் அழைப்புப் பணியும் ? இதைக் கேட்டவுடன் பல முஸ்லிம்களுக்கு முதலில் தோன்றும் எண்ணம் : ‘ ஆனால் பெண்கள் வீட்டில் தானே தங்கி இருக்க வேண்டும் !. உண்மைதான் , அல்லாஹ் மகத்துமிக்க குர்ஆனில் கூறுகிறான் . o ‘ உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள் !.... ( அல் அஹ்ஸாப் , 33) இந்த வசனம் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவேக் கூடாது என்று சொல்லவில்லை . ஒரு பெண் தன் தேவைகளுக்காக வெளியே செல்லலாம் உதாரணமாக அழைப்புப்பணிக்காக ஒரு பெண் தகுந்த மஹ்ரமான ஆண் துணையோடு அழைப்புப் பணிக்காக பயணம் மேற்க்கொள்ளலாம் இங்கு கூறப்பட்டுள்ள அழைப்புப்பணிகான யோசனைகளை மேற்கொள்ள ஒரு பெண் தொலை தூர பயணங்களை மேற்க்கொள்ள வேண்டிய அவசியமில்லை அவள் தன் வீட்டில் இருந்த - படியே செய்யலாம் . எனவே நீங்கள் ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணாகவோ , ஒரு தாயாகவோ அல்லது இல்லத்தரசியாகவோ இருப்பினும் உங்களால் இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும் . இன்ஷா அல்லாஹ் ( அல்லாஹ் நாடினால் ) ஒரு முஸ்லிமான பெண் தன் சகோதரிகளுக்கும் சி...