புகை நமக்குப் பகை

               
மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய இஸ்லாமியப் பார்வையை ஷெய்க் அகார் முஹம்மத் இங்கு விளக்குகின்றார். 855. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. 
தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்று பாவனையில் இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றி தெளிவான மார்க்கத் தீர்ப்பை ஆரம்பகால இமாம்கள் வழங்கவில்லை. அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் மக்ரூஹ் என்றார்கள். வேறு சிலர் முபாஹ்(பிழையானதல்ல) அது ஆகுமானது என்றார்கள். மற்றும் சிலர் ஹராம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஆலிம்கள் புகைத்தலை ஹராம் என்றே கருதுகிறார்கள். புகைத்தல் ஹராமனது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. அவற்றைச் சுருக்கமாக கீழே நோக்குவோம்.
1.    போதையை எற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக் கூடியதும் ஹராமானது' என்பது நபிமொழி.
2.    சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. நபியவர்கள் உடல் உறுப்புக்களில் ;சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்துள்ளார்கள். இது பற்றிய ஹதீஸ் முஸ்னத் அஹமத், அபூதாவூத் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இவற்றுடன் புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.
(i)    உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார்.
  அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கின்றது. மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதினால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்;கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களில்  நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.
புகைத்தலால் பல் வேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைபிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்று நோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்று நோய்களைவிட நுரையீரல் புற்று நோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள்.90 வீதத்துக்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது.
தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி
  புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
புகைப்பிடித்தல் இனப்பெருக்க, சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர்  உண்மையாகும்.
சொத்தைப்பல், பல்விழுதல்,ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது. மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றது. உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறது. குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.
இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து புகைபிடித்தல் உடல் நலனை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கிறது என்பதை விளங்கமுடிகிறது. இவ்வாறு மனிதனின் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியன இஸ்லாமிய நோக்கில் ஹராமானவையாகவே கொள்ளப்படுகின்றன. அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
'உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்'. (அந்நிஸா:29)
'மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்' (அல்பகரா195)

மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் அனைத்தையும் நபிகளார் தடுத்துள்ளார்கள் என்பதற்கு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை வகுக்கும்போது கவனத்திற் கொள்ளும் அடிப்படையான விதி,
 'நலன்கள் விளைதல் வேண்டும். தீங்குகள், கேடுகள் தவிர்க்கப்படல், அல்லது தடுக்கப்படல் வேண்டும்' என்பதாகும்.
புகைபிடிப்பதானால் விளைகின்ற மூன்று வகையான கேடுகளில் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றியே இதுவரைக்கும் கலந்துரையாடினோம். இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.
(ii)    பொருள் நஷ்டம்:
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
'வீண்விரயம் செய்யாதீர்கள், ஏனெனில் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்கள்;'
வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ஹஸ்ம் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
வீண்விரயம் செய்வது ஹராமாகும்.(மூன்று வகைப்படும்.)
1.   அல்லாஹ் விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின் இறைக்கையளவு அற்பமாக இருப்பினும் சரியே.
2.   அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவுசெய்தல், இந்தச் செலவினால் குறித்த நபரின் செல்வநிலை அகலும் ஆபத்து ஏற்படும் போது அதுவும் வீண்விரயமாகும்.
3.   செல்வத்தை வீணாக வீசியெரிதல், இது குறைந்தளவுடையதாக இருப்பினும் சரியே..'
(iii)    ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.
எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைபிடித்தல் ஹராமானது என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்
























. ஹலால் - ஹராம் பேணல்

ஜாபிர் (றழி) கூறுகிறார்:
(ஒரு முறை) ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து,'(அல்லாஹ்வுடைய றஸுல்) நான் கடமையான தொழுகைளை நிறைவேற்றி, றமழானில் நோன்பும் நோற்று, ஹராமானதை ஹராமானதாகக் கருதி (தவிர்த்து வாழ்ந்து) ஹலாலை ஹலாலாகக் கருதி வாழ்ந்தால் சுவர்க்கம் புகுவேனா, என்பதை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு, 'ஆம்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவற்றை விட அதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன்' எனக் கூறினார். (ஆதாரம்: முஸ்லிம்)
றஸுலுல்லாஹ்வின் பாசறையில் பயிற்சி பெற்ற அன்னாரின் தோழர்கள் எவ்வளவு தூரம் சுவர்க்கத்தை அடைவதில் ஆசையும் ஆர்வமும் கொண்டோராயும், அதனை அடைந்து கொள்வதற்கு உரிய வழிகளைத் தெரிந்து கொள்வதில் தீராத வேட்கை கொண்டோராயும் இருந்தனர் என்பதற்கு ஓர் உயர்ந்த உதாரணமாக இந்த ஹதீஸ் காணப்படுகிறது. நபித் தோழர்கள், சுவர்க்கத்தையும் நரகையும் உலகிலேயே தம் கண்களால் காண்பது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர் என்பதற்கும், இத்தகைய ஹதீஸ்கள் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றது.
நாம் விளக்க எடுத்துக்கொண்டுள்ள இந்த ஹதீஸில் ஸக்காத், ஹஜ் போன்ற கடமைகள் குறிப்பிடப்படாமைக்குக் காரணம், கேள்வி எழுப்பப்பட்ட காலத்தில் அவை கடமையாக்கப்பட்டிருக்காததேயாகும் எனச் சில அறிஞர்களும், ஹராத்தை ஹராமாகக்கருதி, ஹலாலை ஹலாலாகக் கருதி வாழ்தல் எனும் சொற்றொடரில் அனைத்துக் கடமைகளும் அடங்கி விடுவதனால்தான் அவை குறிப்பிடப்படவில்லை என வேறு சில அறிஞர்களும் கூறுகின்றனர்.
இங்கு, 'ஹர்ரம்துல் ஹராம்' எனும் சொற்றொடரே ஹராத்தை ஹராமாகக் கருதுதல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது இரு விடயங்களை உள்ளடக்குமென்றும் ஹராமானதை ஹராமாக நம்புவதும், பின்னர் அவற்றைத் தவிர்ந்து வாழ்வதுமே அவ்விரண்டு அம்சங்களுமாகுமென்றும் இமாம் இப்னு ஸலாஹ் குறிப்பிடுகிறார். ஹலாலானவற்றைப் பொறுத்தவரையில், அவற்றை ஹலாலானவை என நம்பினால் மாத்திரம் போதுமானது என்றும் மேலும் அவர் கூறுகிறார்.
இந்த ஹதீஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஹலால் - ஹராம் விடயத்தில் ஒரு முஸ்லிம் எவ்வளவு தூரம் கவனமாக நடந்துகொள்ளல் வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக விளக்குகின்றது. இத்தகைய ஹதீஸ்களை வைத்துத்தான் சுவர்க்கம் புகுவதற்கு நிபந்தனையாக இருப்பது ஹராம் - ஹலாலைப் பேணுவதாகும் என்றும், ஸுன்னத்துக்களைப் பொறுத்தவரையில் அவை அந்தஸ்துகளைக் கூட்டுவதற்கும், நற்கூலியை அதிகரிப்பதற்கும் உதவுகின்ற துணை அமல்களே என்றும் இமாம்கள் கூறுகின்றனர்.
இவ்வகையில், முதலில் ஹராமானதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். தொடர்ந்து பர்ளுகளைப் பேணவேண்டும். பின்னர்தான் ஸுன்னத்து களைப் பின்பற்ற வேண்டும். இதுவே 'தீனை' முறையாகப் பின்பற்று வதற்குரிய சரியான வழியாகும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இந்நபிமொழியின் அடிப்படையில் மார்க்கம் ஹராமாக்கியவற்றையே ஹராம் எனக் கருதவேண்டும் என்பதும், அது ஹலால் எனக் கூறுபவற்றையே ஹலாலாக ஏற்கவேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. உண்மையில், மார்க்கம் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குகின்ற அதிகாரமோ, அது ஹலாலாக்கிய ஒன்றை ஹராம் எனக் கருதுகின்ற அதிகாரமோ எந்த மனிதனுக்கும் கிடையாது. ஆட்சியாளருக்கோ, அரசர்களுக்கோ மதத்தலைவர்களுக்கோ அத்தகைய அதிகாரம் இல்லை. இவ்விடயத்தில் கைவைப்பவர், தன்னை 'றப்'பாக (இறைவனாக) ஆக்கிக் கொண்ட மாபெரும் குற்றத்தைச் செய்தவராவார். அத்தகையவர்களை அங்கீகரித்துப் பின்பற்றுவோர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் 'முஷ்ரிக்'களாகக் கருதப்படுவர்.
''அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கிவைக்கக் கூடிய இணைகளும் அவர்களுக்கு இருக்கின்றனவா?'' (42:21) எனக் குர்ஆன் கேட்கின்றது.
ஹராம் ஹலால் விடயத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைத் தமது மதத் தலைவர்களுக்கும், பாதிரிமாருக்கும் கொடுத்த, வேதத்தையுடை யோர்களைக் குர்ஆன் கீழ் வருமாறு சாடுகிறது.
''இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக (றப்புகளாக) எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் ஏவப்பட்டிருக்கின்றனர், வணக்கத் துக்குரிய நாயன் அவனையன்றி வேறெருவருமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.'' (9:31)
இத்திருவசனம் இறங்கியபோது, ஆரம்பத்தில் கிறிஸ்தவராக இருந்து பின் இஸ்லாத்தையேற்ற அதீ இப்னு ஹாதிம் (றழி) நபி (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் (யூத-கிறிஸ்தவர்கள்) அவர்களை (தமது மதத் தலைவர்களை) வணங்குவோர்களாக இருக்கவில்லையே' எனக் கூறினார்கள். அதற்கு றஸுலுல்லாஹ், உண்மைதான், ஆனால், அவர்கள் ஹலாலை ஹராமாக்கியும், ஹராத்தை ஹலாலாக்கியும் கூறியபோது அவற்றை அவர்கள் பின்பற்றினார்களல்லலவா? அதுதான் இவர்கள் அவர்களுக்குச் செய்த வணக்கமாகும்' எனக் கூறினார்கள்.
ஹலால்-ஹராம் விடயத்தில் தமது சொந்தக் கருத்துக்களைக் கூறிய முஷ்ரிக்குகளைக் குர்ஆன் கீழ்வருமாறு சாடுகிறது:
''உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப் போல் இது ஹலாலாகும். இது ஹராமாகுமென்று அல்லாஹ்வின் மீது பொய் கூறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகச் சித்தியடையவே மாட்டார்கள்.'' (16:114)
குறிப்பாக, ஹலாலானவற்றை ஹராமாகக் கருதுவது பாரதூரமான குற்றமாகும். ஷிர்க்காகும். ஹலாலானவற்றையும் பேணுதல் எனும் பெயரில் தமக்கு ஹராமாக்கிக் கொள்ளவிழைகின்ற போக்கைக் குர்ஆன் பல இடங்களில் சாடுகின்றது. இக் கண்ணோட்டம் மதீனாவில் சில முஸ்லிம்களிடம் தலைதூக்குவதை அவதானித்த குர்ஆன், அதனைத் தடுத்து நிறுத்திச் சரிசெய்யும் விதத்தில் கீழ்வரும் வசனத்தை இறக்கியது.
'விசுவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவைகளை நீங்கள் ஹராமான வைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அன்றி நீங்கள் வரம்பு மீறியும் செலலாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதே இல்லை.'' (5:87)
இந்த ஹதீஸில் வந்துள்ள நபித்தோழர் அந்நுஃமான் இப்னு கவ்கல் (றழி) உஹது யுத்தத்தில் தன் உயிரை நீத்த உத்தமர் என்பது குறிப்பிடத்தக்கது. நொண்டியாக இருந்த இவர், உஹத் யுத்தததின் போது தனது வாளை ஏந்தியவாறு, 'இறைவனே, உன்மீது சத்தியமாக இன்று சூரியன் மறைவதற்கு முன்னால் நான் எனது இந்த முடத்துடன் சுவர்க்கத்தை மிதிப்பேன்' எனக் கூறியவராகக் காபிர்களை நோக்கி விரைந்தார். மிகவும் வீராவேசத்தோடு போராடி இறுதியில் ஷஹீதானார். பின்னர் இவரைப்பற்றிக் குறிப்பிட்ட நபி(ஸல்)அவர்கள், 'நான் அவரைச் சுவனத்தை மிதிக்கும் நிலையில் கண்டேன். அவரது காலிலோ முடம் இருக்கவில்லை' எனக் கூறினார்கள். இந்த இப்னு கவ்கல் (றழி) அவர்களை உஹது யுத்தத்தில் கொலை செய்த அபான் இப்னு ஸஈத் என்பார் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுச் சிறந்ததொரு முஸ்லிமாக வாழ்ந்த நபித்தோழர் என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்.

 

 

 

ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி?

அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்

அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள்.
இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும்முஸ்லிம்அல்லாதவர்களுக்குமத்தியிலும்பரவலாகக்காணப்படுகின்றசிலகேள்விகளுக்கானபதில்களைத்தேடமுயன்றதன்விளைவேஇவ்வாக்கமாகும்.
இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம்.
அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. இது வெறுமனே உணவு பானங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இல்லை உலகிலுள்ள சகல மதங்களிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. அதாவது அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத விடயங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பௌத்த மதத்தை எடுத்துக் கொண்டால் அந்த மதத்தின் போதனைகளின் படி மதுபானம் அருந்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்). அநீதி இழைத்தல் ஹராமாகும், அநியாயமாக கொலை செய்தல் ஹராமாகும். பௌத்த மதத்தலைவர்கள் சுமார் பத்து வகையான இறைச்சிகளை சாப்பிடுவது ஹராமாகும்.
நிச்சயமாக இல்லை. ஏற்கனவே மேலே கூறிக்காட்டியது போல வாழ்வின் சகல விவகாரங்களிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் அதாவது ஹலால் ஹராம் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக பார்வையில் கூட ஹலாலான பார்வை ஹராமான பார்வை என இரண்டு வகைகள் உள்ளன. ஹலாலான பார்வை என்பது ஒரு மனிதன் தனக்கு பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பார்ப்பதாகும்.
ஒரு மனிதன் பாதையில் நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், பாதையோரத்திலிருக்;கின்ற வீடுகளை எட்டிப் பார்ப்பது அவனுக்கு ஹராமாகும். பாதையில் நடந்து செல்கின்ற பெண்களைப் பார்ப்பது ஹராமாகும். மோசமான காட்சிகளைப் பார்ப்பது ஹராமாகும். இப்படி ஹராமான பார்வையை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

 


அதே போன்றுதான் ஆடைகளிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. ஆனால் இங்கு ஷேர்ட் ஹலால் ட்றவுசர் ஹராம் என்று யாராலும் சொல்ல முடியாது. இங்கு ஹலால் ஹராமைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹலால் ஆகும். ஆந்த நிபந்தனைகளைப் புறக்கணித்து ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹராமாகும்.
முதலாவது நிபந்தனை உடலில் கட்டாயம் மூட வேண்டிய பகுதிகளை மறைத்ததாக குறித்த ஆடை இருக்க வேண்டும். இதில் ஆண் கட்டாயம் மூட வேண்டிய பகுதி அவனது தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியாகும். ஒரு பெண் கட்டாயம் அவளது முகம் மற்றும் மணிக்கட்டின் கீழுள்ள கையின் பகுதி ஆகியன தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும்.
நியாயமான கேள்விதான், ஆனால் நிதர்சனமான கேள்வியல்ல. ஒரு மனிதன் பாதையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனுக்கு ஹலாலான பார்வையை மாத்திரம் தான் அவன் பார்க்க வேண்டும். அவனது பார்வை தடுக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் அந்தப் பெண் ஹராம் என்று அர்த்தமில்லை. அவள் வேறு யாருக்கோ ஹலாலானவளாக இருப்பாள்.
ஆனால் நான் வாங்கும் யோகட்டில் பன்றிக் கொழுப்பு கலந்திருக்கின்றதா? என்பதைப் பார்க்கும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில் அதனைப் பரிசோதனை செய்வதற்கு இரசாயனக் கலவைகள் தேவைப்படுகின்றன, இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, விஷேட தகைமைகள் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியாது, அப்படி யாராவது செய்ய நினைத்தால் ஒரு பிஸ்கட் பக்கற் வாங்கக் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு ட்ரக் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு உள்ள இயந்திரங்கள் இரசாயனங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் தடுக்கப்பட்டவைகள் கலந்திருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். இது சாத்தியமே இல்லாத விடயமாகும்.
எனவே இதற்குப் பொறுப்பாக ஒரு குழுவினர் இருந்து இவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அவ்வாறு பரிசோதனை செய்த பின்னர் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நிலையில் காணப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இது தான் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதற்கும் ஏனையவற்றுக்கு வழங்கப்படாமலிருப்பதற்குமான காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா? என்ற கேள்வியும் நியாயமானது தான்.
ஆனால் அதுவும் கூட நிதர்சனமான கேள்வியல்ல. ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் சந்தையில் அனைத்துமே ஹலாலாகத் தான் இருந்தன. அங்கே ஹராமான எதனையும் விற்க யாருக்கும் அனுமதியிருக்கவில்லை. எனவே வாங்குவது ஹலாலா ஹராமா என்ற பிரச்சினையும் யாருக்கும் இருக்கவில்லை. எனவே ஹலால் மட்டுமே இருந்த இடத்தில் ஹலால் சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல எது ஹலால் எது ஹராம் என்பதை நுகர்வோரினால் பிரித்தறிய முடியாத நிலையே இன்றைய சந்தையில் காணப்படுகின்றது. எனவே இதுதான் ஹலால் என்பதை நுகர்வோருக்குக் காட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதன் காரணமாகத் தான் நபியவர்கள் காலத்தில் வழங்கப்படாத ஹலால் சான்றிதழ் இன்று வழங்கப்படுகின்றது.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?
எனவே இப்படியாக மனிதர்களுக்கே சட்டங்களை வரையறைகளை வகுக்க முடியுமாக இருந்தால் மனிதர்களையெல்லாம் படைத்த இறைவனுக்கு வரையறைகளை வகுக்க முடியாதா?! ஆனால் சட்டங்கள் வரையறைகள் அனைத்திலும் பின்பற்றப்படுவதற்கு அதிகம் தகுதியானது இறைவன் வகுத்த சட்டங்களும் வரையறைகளுமே. நாங்கள் மனிதர்களை மதிக்கின்றோம், ஆனால் அதனை விட அதிகமாக மனிதர்களைப் படைத்த இறைவனையும் அவனது சட்டங்களையும் மதிpக்கின்றோம்.
அது மட்டுமல்ல இந்த ஹலால் ஹராம் தொடர்பாக ஓர் அடிப்படையான விதியே இஸ்லாத்தில் காணப்படுகின்றது. ‘இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனையும் அனுமதிக்கப்பட்டதாகும் படைத்த இறைவனால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர’ என்பதே அந்த விதியாகும். இதன் மூலம் ஹலாலானவற்றின் எல்லை எந்தளவு விரிவானது என்பதையும் ஹராமானவற்றின் எல்லை எந்தளவு சுருங்கியது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அப்படி ஹலாலின் எல்லை விரிவானதாக இருந்தாலும் இன்று இருக்கின்ற கொஞ்சம் ஹராத்தை எல்லா ஹலால்களுடனும் கலக்கின்ற வேலையை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர். எனவே தான் ஹலால் ஹராம் போன்ற சொற்கள் முன்பில்லாத அளவு மக்களுக்கு மத்தியில் பரிச்சயமாகின்ற அளவுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்தோடு இது யாரின் மீதும் எதனையும் திணிக்கின்ற செயற்பாடும் அல்ல. முஸ்லிம்கள் தமது பேணுதலுக்காக செய்கின்ற விடயமே இது. ஆனால் இது அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதையும் தாண்டி யாராவது இது தமக்குத் தேவையில்லை என்று கருதினால் அவர் தாராளமாக அவர் விரும்பியது போல் ‘சுதந்திரமாக’ வாழ்ந்து விட்டுப் போகலாம். அது அவருக்கும் அவரைப் படைத்தவனுக்கும் இடையில் உள்ள விவகாரம். ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடமைப்பாடு ஹலால் தேவையில்லை என்று சொல்கின்ற சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி எங்கள் மீது ஹலாலைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போன்று ஹலால் தேவையில்லை என்பதை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை எங்களுக்கும் இருக்கின்றது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!