'சொர்க்கவாசி''களின் பண்புகள்!
الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ
اللَّهِ وَلَا يَنقُضُونَ الْمِيثَاقَ
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ
اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ
وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا
وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ
عُقْبَى الدَّارِ
"அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால்,
அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க
மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப்
பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான
முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின்
உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு
நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும்,
தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முவு இவர்களுக்கே உரிதானது." (திருக்குர்ஆன் 13 : 20 -22)
இந்த வசனங்களில் சொர்க்கவாதிகளைக் குறித்து ஒன்பது வகையான
பண்புகள் கூறப்பட்டுள்ளன.
1. வாக்குறுதியை
நிறைவேற்றல் "அஹ்தில்லாஹ்"எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு
"அல்லாஹ்வின் வாக்குறுதி' என்று பொருளாகும். மனிதர்கள் அனைவரும் படைக்கப்படுவதற்கு
முன் உயிரணுக்களாக இருந்த போது அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அதை 7 : 172இல் இறைவன்
கூறிக் காட்டுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அதாவது ஓர் இறைவனை ஏற்குமாறும்,
அவனுடைய கட்டளைக்குப் பணியுமாறும் இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
2. உடன்படிக்கையை
முறிக்காதீர்கள் இங்கே உடன்படிக்கை என்பது, கொடுக்கல் வாங்கல், கடன், வியாபாரம்,
இரு நாடுகள், இரு குழுக்களிடையே எழுதப்படும் உடன்படிக்கை என எல்லாவற்றையும் குறிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்ததும் செய்த முதல் காரியம் அங்கு வாழ்ந்து
வந்த யூதர்களோடு உடன் படிக்கை செய்துகொண்டார்கள். அதை முமையாக நிறைவேற்றுமாறு அல்லாஹ்
வலியுறுத்துகிறான். சொர்க்கத்தைப் பெறுவதையே தங்களது இலட்சியமாகக் கொண்ட நபித்தோழர்கள்
அந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றினார்கள். ஆனால் யூதர்கள் அந்த உடன்படிக்கையை
முறித்து இழிவையும் கேவலத்தையும் சந்தித்தார்கள் என்பது வரலாற்றுத் தெளிவு.
3. சேர்த்துக்
கொள்வது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்வது என்பது உறவினர்களைச்
சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். உறவினர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து
வாழ வேண்டும். இது ஒரு வகை. இன்னொரு வகை தொழுகைக்காக வரிசையாக (ஸஃப்) நிற்கும் போது
தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நிற்பதைக் குறிக்கிறது. சொர்க்கத்தைப் பெற விருப்பமா?
அப்படியானால், தொழுகையில் வரிசைகளில் நிற்கும் போது காலோடு காலும் தோளோடு தோளும் சேர்ந்து
நிற்க முயற்சி செய்யுங்கள்.
4. இறைவனை
அஞ்சுவது வாக்குறுதியை நிறைவேற்றுவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவது, உறவினர்களுடன்
சேர்ந்து வாழ்வது என்று சொல்லிக் கொண்டு வரும் போது இறைவனை அஞ்சுதல் பற்றிப் பேச வேண்டிய
காரணம் என்ன? என்னதான் உடன்படிக்கைகளை நிறைவேற்றி உறவினர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும்
இறைவனை அஞ்சுவதை மட்டும் விட்டு விடக்கூடாது. அதனால் ஓர் அலட்சியம் வந்து விடலாம்.
எனவே, இறைவனை அஞ்சுமாறு வலியுறுத்தப்படுகிறது.
5. கேள்விக் கணக்கின் கடுமையைப் பயப்படுவது கேள்விக் கணக்கு
என்றாலே பயப்பட வேண்டிய ஒன்று தான். அதிலும் கடுமையான கேள்விக் கணக்கு என்பது ஒவ்வொரு
முஸ்லிமுடைய உள்ளத்தையும் போட்டு உலுக்கி எடுக்கிறது. இந்த உலகிலேயே இறைவனிடத்தில்
அழுது மன்றாட வேண்டிய மனிதர்களாக நாம் இருக்கிறோம். அதிலும் சொர்க்கத்தைப் பெற இந்த
குணம் மிகவும் அவசியம். எனவே கேள்விக் கணக்கின் கடுமையை அஞ்சுவோமாக.
6. பொறுமையை
மேற்கொள்வது பொறுமை, சகிப்புத் தன்மையை 2வகைகளாக விரிவுயாளர்கள் பிரிகின்றனர். அவை : அஸ்ஸப்ரு அலல்பலாயி சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது. அஸ்ஸப்ரு
அலத்தாஅதி நன்மை புரிவது பொறுமை மேற்கொள்வது. இன்று தொழுகைகளை அவசர அவசரமாக
மக்கள் தொழுது விட்டுப் பள்ளிவாசல்களைக் காலி செய்யக் காரணம் என்ன? நின்று நிதானமாகப்
பேணுதலாகத் தொழ வேண்டிய தொழுகைகளை ஏதோ பல்டி அடித்து விட்டுச் செல்வதைப் போல் செல்லக்
காரணம் என்ன?
பொறுமை என்றால்
அது நற்செயல்கள் புரிதற்கும் அவசியம். பொறுமை இல்லையெனில் ஒரு நோன்பு கூட யாராலும்ம்
வைக்க முயாது. எனவேதான் பல வழிபாடுகளில் நோன்பும் பொறுமையும் இணைகின்றன. ஆக, நற்செயல்கள்
புரிவும் பொறுமை அவசியம். தீமையை விடுவது என்பதும் இலேசுபட்ட காரிமல்ல. அதற்கும் மலை
போன்ற நிலை குலையாமை தேவைப்படுகிறது. உலகில் இந்தத் தீமைகள் பெருகக் காரணம் மனிதர்களிடத்தில்
பொறுமை இல்லாததே.
7. தொழுகையைக்
கடைப்பிடிப்பது தொழுகையைக் கடைப்பிடித்துப் பேணுதலாகத் தொழ வேண்டியது முஸ்லிமான
ஆண் பெண் அனைவர்மீதும் நாள்தோறும் கட்டாயமானதாகும். ஆனால், இன்று நிலை என்ன? ஒரு வீட்டில்
வாலிப, இளைய பருவத்திலுள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க வயது முதிர்ந்த கிழவன் கிழவி
மட்டும் எழுந்து தொழுவதை இன்னும் பல இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
யார் எழுந்து கட்டாயம் தொழ வேண்டுமோ அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க,
யார் தள்ளாத வயதில் உள்ளார்களோ அவர்கள் எழுந்து தொழுது வருகிறார்கள்.
8. தான தர்மங்களை
வழங்குதல் வெளிப்படையாகவும் மறைவாகவும் எப்படியும் தான தர்மங்களைச் செய்யலாம்
என இந்த வசனம் தெரிவிக்கிறது. ஜகாத், ஸதகா போன்ற தான தர்மங்களை வாரி வழங்க செல்வந்தர்கள்
முண் வர வேண்டும். ஜகாத் மட்டுமின்றி, என்னென்ன நற்செயல்களுக்கு வாரிவழங்கும்படி மார்க்கம்
கட்டளையிட்டுள்ளதோ அவற்றுக்கெல்லாம் இறைவனின் திருப்தியை நாடி செல வழிக்க வேண்டும்
என்பதே இதன் பொருளாகும்.
9. தீமையை
நன்மையால் அகற்றுவது அதாவது ஒருவர் நமக்குத் தீமை செய்தால் பதிலுக்கு நாமும்
தீமை செய்யாமல் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட
சமுதாயம் உருவாகி விட்டால் உலகமே இஸ்லாத்தைக் கொண்டாடும் நாள் வந்து விடும். அசுத்தத்தை
அசுத்தத்தால் சுத்தம் செய்ய முடியாது. மாறாக, அசுத்தத்தைத் தண்ணீரால் தான் சுத்தம்
செய்ய முயும். ஆக, சொர்க்கத்தைப் பெற வேண்டுமா? உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும்
நீங்கள் நன்மை செய்யுங்கள். சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்கின்றன மேற்கண்ட வசனங்கள்.
வழியைச் சொல்லி விட்டான் இறைவன்; அந்த வழியில் நடைபோட நாம் தயாரா?
கருத்துகள்
கருத்துரையிடுக