முஸ்லிம் பெண்களுக்கு அழைப்புப்பணிக்கான 33 யோசனைகள்
பெண்களும் அழைப்புப் பணியும்? இதைக் கேட்டவுடன் பல முஸ்லிம்களுக்கு முதலில் தோன்றும் எண்ணம்: ‘ஆனால் பெண்கள் வீட்டில் தானே தங்கி இருக்க வேண்டும்!. உண்மைதான், அல்லாஹ் மகத்துமிக்க குர்ஆனில் கூறுகிறான்.
o ‘உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்!.... (அல் அஹ்ஸாப், 33)
இந்த வசனம் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவேக் கூடாது என்று சொல்லவில்லை. ஒரு பெண் தன் தேவைகளுக்காக வெளியே செல்லலாம் உதாரணமாக அழைப்புப்பணிக்காக ஒரு பெண் தகுந்த மஹ்ரமான ஆண் துணையோடு அழைப்புப் பணிக்காக பயணம் மேற்க்கொள்ளலாம் இங்கு கூறப்பட்டுள்ள அழைப்புப்பணிகான யோசனைகளை மேற்கொள்ள ஒரு பெண் தொலை தூர பயணங்களை மேற்க்கொள்ள வேண்டிய அவசியமில்லை அவள் தன் வீட்டில் இருந்த-படியே செய்யலாம். எனவே நீங்கள் ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணாகவோ, ஒரு தாயாகவோ அல்லது இல்லத்தரசியாகவோ இருப்பினும் உங்களால் இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)
ஒரு முஸ்லிமான பெண் தன் சகோதரிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது அவசியமானதாகும். ஆண்களால் பெண்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது பல சமயங்களில் முடியாத காரியமாகவே உள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு எடுத்துச் சொல்வதை விட ஒரு பெண். ஒரு பெண்ணிற்கு எடுத்துச் சொல்வதை விட ஒரு பெண் ஒரு பெண்ணிற்கு எடுத்துச் சொல்வது பயனள்ளதாகவும் சிறப்பனதாகவும் இருக்கும். பொதுவாக ஆண்களை விட பெண்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறார்கள். எனவே ஒரு பெண் அழைப்புப்பணியில் பங்கெடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
1. வீட்டிலேயே இஸ்லாமிய வகுப்புகளை (நடத்தி) இஸ்லாத்தின் போதனைகளை அண்டை வீட்டுக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறுவது.
2. அண்டை வீட்டாருக்கு சுவையான உணவு தயாரித்து அத்துடன் அட்டையில் குர்ஆன் வசனங்களையோ அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளையே எழுதி அன்பளிப்பு செய்யவும்
3. திருமணமாகாத தாயிக்களுக்கு (அழைப்பாளர்களுக்கு) உணவு திட்டத்தை செயல்படுத்தலாம். சகோதரர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் அழைப்புப்பணியை முழு ஈடுபாடோடு செயலாற்ற உதவும்.
4. திருமணத்தின் போதோ அல்லது ஏதேனும் விழாவின் போது இஸ்லாம் தொடர்பான துண்டு பிரசுரங்களை வினியோகிக்கலாம்.
5. பெண்களுக்கும்
குழந்தைகளுக்கும்
தஜ்வீதோடு
குர்ஆனை
ஓத
கற்று
கொடுக்கலாம்.
6. பயான் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம். பல இடங்களில் பல தலைப்புகளில் ஏற்பாடு செய்யலாம்.
7. இஸ்லாமிய பள்ளியில் இஸ்லாத்தை போதிக்கும் ஆசிரியராக சேரலாம்.
8. பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தகுந்த ஆலோசனை வழங்கி உதவலாம்.
9. ஒருவரது கல்வி மற்றும் வேலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தை பிறர்க்கு எடுத்துக் கூறலாம். உதாரணமாக நீங்கள் மருத்துவராக இருந்தால் அழைப்புப்பணியை உங்கள் மருத்துவமனையில் செய்யலாம். பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து அதில் இஸ்லாம் குறித்தும் போதனை செய்யலாம்.
10. ஒரு இணைய தளத்தை ஆரமித்து உங்கள் கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.
11. இஸ்லாமிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதலாம்.
12. பெண்களுக்கான வார அல்லது மாத இதழ் ஆரம்பிக்கலாம்.
13. ஆதாரப்பூர்வமான புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்களிலிருந்து செய்திகள் எடுத்து சிறு புத்தகங்களை தொகுக்கலாம்.
14. இஸ்லாமிய புத்தகங்களை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து மக்கள் பயன்பெறுமாறும் செய்யலாம்.
15. பெண்களுக்கான ஒரு இஸ்hமிய பொருட்காட்சியை ஏற்பாடு செய்து இஸ்லாமிய புத்தகங்கள் ஒலி-ஒளி (ஆடியோ - வீடியோ) பொருட்கள், இஸ்லாமிய விளையாட்டுகள், சமையல் அரங்குகள் நகைகள் கண்காட்சி ஆகியவற்றை (ஏற்பாடு செய்யலாம்) அமைக்கலாம் இதை பல சகோதரிகள் சேர்ந்து மஹ்ரமான ஆண் துணைகளுடன் ஏற்பாடு செய்யலாம் அல்லது பெண்கள் மட்டும் சேர்ந்து சிறிய அளவிலான பொருட்காட்சியை ஏற்பாடு செய்யலாம்.
16. இஸ்லாமிய புத்தகக் கடை இஸ்லாமியப் புத்தகங்கள், புர்காகள், முக்காடுகள் போன்றவற்றை விற்பனை செய்யலாம்.
17. பெண்கள் அழைப்புப்பணியைத் தனியாகவோ கூட்டாகவோ செய்ய பயிற்சி அளிக்கலாம்.
18. மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் போன்றவற்றிக்கு சென்று அவர்களுக்கு பரிவையும் உதவியும் செய்து இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக் கூறலாம்.
19. முஸ்லிம் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று இஸ்லாம் குறித்து பேசலாம் (பெண்களுக்காக)
20. இஸ்லாம் சம்பந்தமான வேலைகள் செய்வதற்கு தன் கணவருக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும், ஆர்வமூட்டவும் செய்யலாம்.
21. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதற்கு தம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தல்.
22. முஸ்லிம் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சியை பல இடங்களில் நடத்தலாம்.
23. ஏழைகள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், முதியோர்கள் ஆகியோருக்கு பொருளாதாரம் உதவிகள் செய்யலாம். உடனடி தேவையுள்ளவர்களை கவனித்து பலரிடம் பணத்தைப் பெற்று கொடுக்கலாம்.
24. வீட்டில் குழந்தைகள் காப்பகத்தை தொடங்கலாம் பெற்றோர்கள் வேலை செல்லும் போது அவர்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை, நல்ல பழக்க வழக்கங்களை ஆகியவற்றை சொல்லி கொடுக்கலாம்.
25. இஸ்லாத்தை புதிதாக ஏற்றவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் வாரம் ஒரு முறை அவர்கள் சந்தித்து தங்களை இன்பம் துன்பம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு செய்யலாம். அவர்களின் கஷ்டங்கள் நீங்க தகுந்த ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யலாம்.
26. இஸ்லாமிய அறிவிப்பு அட்டைகளை தயார் செய்து அதை இஸ்லாமிய புத்தகக்கடையில் விற்பனை செய்யலாம் அல்லது இணையதளம் வழியாகவும் விற்பனை செய்யலாம்.
27. ளு.ஆ.ளு. மூலமாகவும் இ-மெயில் மூலமாகவும் இஸ்லாமிய செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பலாம்.
28. இஸ்லாமிய அமைப்பில் சேர்ந்து, அவர்களின் செயல்பாடுகளுக்கு உதவ வேண்டும் முக்கியமாக பெண்கள் குழுவிற்கு.
29. இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்த விளம்பரத்தாள்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை தயாரிக்கலாம்.
30. இஸ்லாமிய வீடியோக்கள், உண்மைத் தகவல்கள் கொண்ட செய்திப்படம் ஆகியவற்றை உருவாக்கலாம் மேலும் அறிஞர்களின் பயன் வீடியோக்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
31. இணையதளம் வழியாக இஸ்லாத்தை பற்றி சகோதரிகளை விளக்கலாம் இ-மெயில்கள் வீடியோக்கள் மூலமாகவும் கற்பிக்கலாம்.
32. புர்கா, முக்காடுகள், துப்பட்டிகள் போன்றவற்றை தைத்து அதை முஸ்லிம் பெண்களுக்கு அன்பளிப்பு செய்யலாம் அல்லது விற்கலாம்.
33. இஸ்லாத்தைக் குறித்து கடைவீதிகள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பிரச்சாரம் செய்யலாம். புத்தக கடைகள் அமைத்து இலவசமாக புத்தகங்களை கொடுத்தும் பிரச்சாரம் செய்யலாம். இவ்வாறு பிரச்சாரம் செய்ய ஒரு மஹ்ரமான ஆண் துணை தேவை, அதாவது ஆண்களுக்கு அவர் பிரச்சாரம் செய்யலாம், பெண்களுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யலாம்.
நாம் அனைவருக்கும் இங்கு குறிப்பிட்டுள்ள 33 யோசனைகளை செயல்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் அதில் நம்மால் செயல்படுத்த முடியும் என்று நம்புகிற யோசனைகளை தேர்ந்தெடுத்து செய்யலாம். முதலில் ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்படுத்தி பின்பு மற்ற யோசனைகளை தொடரலாம்.
இங்கு குறிப்பிட்டுள்ள பல யோசனைகளை செயல்படுத்த பலருடைய உதவி தேவையில்லை, அவைகளை நீங்கள் ஒருவரே இருந்து செயல்படுத்தலாம். இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசனைகளையும் பெற்று இவைகளை செயல்படுத்துவது உதவிகரமாக இருக்கும் அதன் மூலம் நமது திறனை வளர்த்துக்கொண்டு நமக்கு வரும் தடைகளையும் தகர்த்து செயல்பட உதவும் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)
முக்கியமாக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, நம் சமுதாயத்திற்கு நன்மை செய்ய உதவுமாறும் எளிதாக்குமாறும் கோர வேண்டும். மேலும் நம் அமல்களை ஏற்று அதற்கு நற்கூலி வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்போது செயல்படுத்துவது (தொடங்குவது) தான் நம் கடமை. அல்லாஹ்வின் உதவியும் நமக்கு கிடைக்கும். அவன் பல வழிகளை நமக்கு காட்டுவான்.
அல்லாஹ் கூறுகிறான்
o ‘...அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோர்க்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான் அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான் அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்வான். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஒர் அளவை நிர்ணயம் செய்துள்ளான். (அத்தலாக்-2,3) (65: 2,3)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்
o ‘நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம் நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்”. (அல் அன்கபூத்-69) 29:69)
சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூயவன்!) யார் அல்லாஹ்வை நம்பி அவனுக்கு கட்டுப்படுகிறார்களோ அவர்களுக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான், அவர் எண்ணிப் பாரத்திராத வகையில் உதவுவான் என்று கூறுகிறான். எனவே சகோதரிகளே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தூய எண்ணத்துடன் முயற்சிகள் செய்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை கொள்ள (வைக்க) வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்கும்
|
கருத்துகள்
கருத்துரையிடுக