இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது
இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி ( ஸல் ) அவர்கள் கண்டார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர் . ஸுப்ஹு நான்கு ரக்அத்களா ? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா ? என்று அம்மனிதரைப் பார்த்து நபி ( ஸல் ) அவர்கள் ( கோபமாகக் ) கேட்டார்கள் . புஹாரி -663: அப்துல்லாஹ் பின் மாலிக் ( ரலி ) ( கடமையான ) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை...