#இறந்தவருக்கு செய்ய வேண்டிய கடமை & #இறந்தவர்களுக்கு நாம் செய்யக்கூடாதவை #இறந்தவருக்கு செய்ய வேண்டிய கடமை :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: இறந்தவர்களுக்காக நாம் செய்ய வேண்டியவை என்ன? புகழ் அனைத்தும் இவ்வுலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உண்டாகுக! இஸ்லாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். இதை ஏற்று வாழும் ஒவ்வொரு மனிதரும் தாம் செய்கின்ற செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் செயல்கள் மறுமையில் அல்லாஹ்வால் கூலி கொடுக்கப்பட வேண்டுமானால் அவன் அங்கீகரித்தவைகளாக இருக்கவேண்டும். அவன் காட்டித்தராத செயல்களை செய்தால் மறுமையில் அவனிடம் கூலியை நாம் பெற முடியாது. #இதனடிப்படையில் #இறந்துவிட்ட நம் உறவினர்களுக்கு நன்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தில் நடைமுறையில் பலவிதமான காரியங்களை நாம் செய்கிறோம். இவ்வாறு நாம் செய்யும் செயல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸிற்க்கு உட்பட்டதா? அல்லது மறுக்கப்பட்டதா? என்பதைக் காண்போம். #செய்யக்கூடாதவை! ---------------------------------- இறந்தவர்களுக்கு நாம் செய்யக்கூடாதவைகளில் முக்கியமானவை இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்த்தல் 3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள் ஓதுதல் ஒருவர் இறந்து போய்விட்டால் அவரின் உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே மற்றவர்கள் செய்யும் எந்த அமலும் அவரைப் போய் சேராது. "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (அல்குர்ஆன் 53:38-40) இந்த வசனத்தின் இமாம் ஷாஃபி அவர்கள் அழகிய மிக சரியான விளக்கத்தை தருகிறார்கள். இமாம் ஷாஃபியை பின்பற்றுவதாக சொல்பவர்கள் இதை கவனிக்கட்டும். "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53:39) இந்த திருவசனத்திலிருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: "குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக்காட்டுதலின் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் 53:39 வசனத்தின் விரிவுரை) மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸூம் ஆகியோர் இறந்தபோதும் அவர்களின் அன்பு மனைவியான கதீஜா (ரலி) உட்பட பல மனைவிமார்கள் இறந்த போதும் அவர்களின் அன்புத் தோழர்கள் இறந்த போதும் யாருக்கும் நபி (ஸல்) அவர்கள் பாத்திஹா ஓதியதில்லை, மேலும் குர்ஆன் ஓதி அதன் நன்மைகளை அவர்களுக்கு சேர்த்தும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் காட்டித்தார இந்த புதுமையான நடைமுறை செயல்படுத்துபவர்கள் பின்வரும் நபி மொழியின் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளட்டும்! எவரேனும் நமது அனுமதியில்லாமல் (எந்த ஒரு) அமலை செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஹா (ரலி) நூல்: முஸலிம் (3541) *இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி சேர்த்தல், பாத்தியா ஓதுதல் ஆகியவை மார்க்கத்தில் இல்லை* என்றாலும், அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று சிலவற்றை குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன அவை என்ன? என்பதைப்பார்ப்போம். #செய்யவேண்டியவைகள்! 1 . இறந்தவர் நலனுக்காக பிரார்தனையும் பாவமன்னிப்பும் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 59:10) #மைய்யித்தை அடக்கி விட்டு அங்கே நின்ற நபி(ஸல்) அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்கு உறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (இப்னு உமர்(ரழி) அபூதாவூத்,ஹாகிம்) *ஒரு மனிதன் இறந்துவிட்டால் #மூன்று விசயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகின்றன அவைகள் 1 . #நிரந்தர #தர்மம் 2 . #பயன்தரும் #கல்வி 3 . அவனுக்காக துஆ செய்யும் #நல்ல #குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்* அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3358) 2 . #தர்மம் #செய்தல் ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் திடீரென இறந்து விட்டார், அவர்கள் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படி சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! கிடைக்கும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1388) 3 . இஸலாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் #நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிறைவேற்றலாம் ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது, ஆனால் அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். நான் என்ன செய்யலாம்? என்று மார்க்க தீர்ப்பு கேட்டார்கள் அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ (2761) 4 . மரணித்தவருக்கு #ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அதை நிறைவேற்ற வேண்டும். ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ1852) 5. #நோன்பு #கடமையாகி அதை நிறைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவர்சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும். நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோற்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1952) 6 . #இறந்தவர் #கடனாளியாக இருந்து அவர் எந்த சொத்து இல்லாத #ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிறைவேற்ற வேண்டும் *ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்*. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ1852) நாம் சொன்ன இவ்விஷயங்களைத் தவிர இறந்தவருக்கு செய்ய வேண்டடிய வேறு எந்த விஷயமும் இல்லை. இதைத்தவிர இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்கள் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும். ஒரு மூமின் இறந்து விட்டால் அவரது பிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!