மழை ...அருளா ?அழிவா ?

பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.

இறைவனின் கோபப்பார்வை வர்கள் மீது இறங்குகிறது.

தத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ

மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

இவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? சுயநலம் கொண்ட தங்களது மோசமான செயல்களால் மழையைத் தடுத்தார்கள். நதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். தண்ணீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஆகவே வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் அவர்களை அழித்தான்.

தண்ணீர் மனிதனுக்கு மாத்திரமல்லஉயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என படைப்பினங்கள் அனைத்திற்கும் இன்றியமையாதஒன்றாகும்.அந்த தண்ணீரை மழை நீர் எனும் நன்னீர் மூலம் அல்லாஹ் வழங்கி உயிரினங்களை வாழவைக்கின்றான்.இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லவேண்டுமானால் உயிரினங்கள் அனைத்தும்தண்ணீரை அடிப்படையாகக் கொண்டேபடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்

.ﻭَﺟَﻌَﻠْﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺎﺀِ ﻛُﻞَّ ﺷَﻲْﺀٍ ﺣَﻲٍّ“

உயிரினங்கள் அனைத்தையும் நாம்தண்ணீரைக் கொண்டே உருவாக்கினோம்.(அல்குர்ஆன்: 21: 30 )

ﻭَﺍﻟﻠَّﻪُ ﺧَﻠَﻖَ ﻛُﻞَّ ﺩَﺍﺑَّﺔٍ ﻣِﻦْ ﻣَﺎﺀٍ ﻓَﻤِﻨْﻬُﻢْ ﻣَﻦْﻳَﻤْﺸِﻲ ﻋَﻠَﻰ ﺑَﻄْﻨِﻪِ ﻭَﻣِﻨْﻬُﻢْ ﻣَﻦْ ﻳَﻤْﺸِﻲ ﻋَﻠَﻰ ﺭِﺟْﻠَﻴْﻦِﻭَﻣِﻨْﻬُﻢْ ﻣَﻦْ ﻳَﻤْﺸِﻲ ﻋَﻠَﻰ ﺃَﺭْﺑَﻊٍ ﻳَﺨْﻠُﻖُ ﺍﻟﻠَّﻪُ ﻣَﺎ ﻳَﺸَﺎﺀُ ﺇِﻥَّﺍﻟﻠَّﻪَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ“

அல்லாஹ்அனைத்துப்பிராணிகளையும்தண்ணீரிலிருந்தே படைத்தான். ( அல்குர்ஆன்: 24:45 )

மழையைபரக்கத்அபிவிருத்திஎன்கிறதுஅல்குர்ஆன்.

ﻭَﻧَﺰَّﻟْﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻣَﺎﺀً ﻣُﺒَﺎﺭَﻛًﺎ ﻓَﺄَﻧْﺒَﺘْﻨَﺎ ﺑِﻪِﺟَﻨَّﺎﺕٍ ﻭَﺣَﺐَّ ﺍﻟْﺤَﺼِﻴﺪِ () ﻭَﺍﻟﻨَّﺨْﻞَ ﺑَﺎﺳِﻘَﺎﺕٍ ﻟَﻬَﺎ ﻃَﻠْﻊٌﻧَﻀِﻴﺪٌ () ﺭِﺯْﻗًﺎ ﻟِﻠْﻌِﺒَﺎﺩِ ﻭَﺃَﺣْﻴَﻴْﻨَﺎ ﺑِﻪِ ﺑَﻠْﺪَﺓً ﻣَﻴْﺘًﺎ ﻛَﺬَﻟِﻚَﺍﻟْﺨُﺮُﻭﺝُ ()“

மேலும், நாம் வானத்திலிருந்துஅபிவிருத்திகள் நிறைந்த மழை நீரைஇறக்கினோம். பின்னர், அதன் மூலம்தோட்டங்களையும், அறுவடைத்தானியங்களையும், கனிகள் நிறைந்து, குலைகள்அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடியபேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கானஅழகிய ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒருபூமிக்கு நாம் இந்த நீரினால்உயிரூட்டுகின்றோம். இறந்து விட்ட மனிதர்கள்பூமியிலிருந்து வெளிப்படுவதும்இவ்விதமேயாகும். ( அல்குர்ஆன்: 50: 9 11 )

மழையை ரஹ்மத் - அருள்வளம்என்கிறது அல்குர்ஆன்…..

ﻭَﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱ ﻳُﺮْﺳِﻞُ ﺍﻟﺮِّﻳَﺎﺡَ ﺑُﺸْﺮًﺍ ﺑَﻴْﻦَ ﻳَﺪَﻱْﺭَﺣْﻤَﺘِﻪِ ﺣَﺘَّﻰ ﺇِﺫَﺍ ﺃَﻗَﻠَّﺖْ ﺳَﺤَﺎﺑًﺎ ﺛِﻘَﺎﻟًﺎ ﺳُﻘْﻨَﺎﻩُ ﻟِﺒَﻠَﺪٍ ﻣَﻴِّﺖٍﻓَﺄَﻧْﺰَﻟْﻨَﺎ

ﺑِﻪِ ﺍﻟْﻤَﺎﺀَ ﻓَﺄَﺧْﺮَﺟْﻨَﺎ ﺑِﻪِ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺍﻟﺜَّﻤَﺮَﺍﺕِ ﻛَﺬَﻟِﻚَﻧُﺨْﺮِﺝُ ﺍﻟْﻤَﻮْﺗَﻰ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗَﺬَﻛَّﺮُﻭﻥَ ()“

மேலும், அவனே தன்னுடையஅருள்வளத்திற்கு ( மழைக்கு ) முன்பாகநற்செய்திகளைக்கொண்டகாற்றுகளைஅனுப்புகின்றான்

(அல்குர்ஆன்:7:57

மழையை தஹூர் - தூய்மை என்கிறதுஅல்குர்ஆன்….

                         ﻭَﺃَﻧْﺰَﻟْﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻣَﺎﺀً ﻃَﻬُﻮﺭًﺍ“ 

மேலும், வானிலிருந்து தூய்மையான (மழை ) நீரை நாம் இறக்கி வைக்கின்றோம்.( அல்குர்ஆன்: 25:48 )

மழை ரிபாத்துல் குலூப் - இதயங்களைவலுப்படுத்தும் உயரிய அம்சம் என்கிறதுஅல்குர்ஆன்….

பத்ரில் அல்லாஹ் முஃமின்களுக்குமட்டும் வழங்கிய பிரத்யேகமான மழையைநினைவு கூறச் சொல்கின்றான்.

اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ

இதையும் நினைத்துப் பாருங்கள்!அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச்செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மனநிம்மதியையும், அச்சமின்மையையும்ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்தியஅசுத்தங்களை உங்களை விட்டுஅகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களைவலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம்உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும்வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும்பொழியச் செய்தான். (அல்குர்ஆன்: 8: 11 )

மழை வாழ்க்கைக்கான சாதனங்களைவழங்கும் மாபெரும் கொடை என்கிறதுஅல்குர்ஆன்….

ﻳُﺮْﺳِﻞِ ﺍﻟﺴَّﻤَﺎﺀَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻣِﺪْﺭَﺍﺭًﺍ ﻭَﻳُﻤْﺪِﺩْﻛُﻢْ ﺑِﺄَﻣْﻮَﺍﻝٍ ﻭَﺑَﻨِﻴﻦَ ﻭَﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻳَﺠْﻌَﻞْﻟَﻜُﻢْ ﺃَﻧْﻬَﺎﺭًﺍ உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும்மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது வானத்திலிருந்து நிறைய மழையைப்பொழியச் செய்வான். செல்வத்தையும்சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான்.உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான்.உங்களுக்காக ஆறுகளையும்ஓடச்செய்வான். ( அல்குர்ஆன்:71: 10 12 )                             

மழைநீர் உலகத்தோடு முடிந்து விடும்ஒன்றல்ல மறுமையிலும் மனிதனோடு அதன்உறவைத் தொடர்கின்றது.

மஹ்ஷர் மைதானம் அமையப் பெற்றபிறகு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு மழையைபொழியச் செய்வான். உடனே இறந்தவர்கள் பச்சைப்புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்றுமண்ணறையிலிருந்து உயிர்த்தெழுவார்கள்.ஆதமுடைய மகனின் உடலிலுள்ள அனைத்துப்பகுதிகளையும்மண்தின்றுவிடும்.அவனுடையமுதுகுத்தண்டின்வேர்ப்பகுதியிலிருக்கும் குத எழும்பின் நுனியைத்தவிர, அதை வைத்தேஅல்லாஹ் மீண்டும் மனித சமூகத்தைஉயிர்த்தெழுப்புவான் என நபி {ஸல்} அவர்கள்கூறினார்கள். ( நூல்:முஸ்லிம் )

அல்லாஹ் மழையை இவ்வளவுமாண்பாக வர்ணித்துக் கூறும்போதுஏன்இவ்வளவுபெரியஇழப்புகளைநாம் சந்திக்கநேரிடுகின்றது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்குகின்றஅனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்டநிர்ணயத்தின், நியதியின் அடிப்படையில் தான்வழங்குகின்றான்.  

ﺇ ﻧَّﺎ ﻛُﻞَّ ﺷَﻲْﺀٍ ﺧَﻠَﻘْﻨَﺎﻩُ ﺑِﻘَﺪَﺭٍ

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக!நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்டவிதிமுறையின் படி இயங்குவதாகவேபடைத்திருக்கின்றோம்.மழையும் அப்படித்தான்..

                  ﻭَﺍﻟَّﺬِﻱ ﻧَﺰَّﻝَ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻣَﺎﺀً ﺑِﻘَﺪَﺭٍ“

எனினும், அவன் வானத்திலிருந்துஅளவுடன் தான் தண்ணீரை ( மழையை ) இறக்கிவைக்கின்றான். ( அல்குர்ஆன்: 43: 11 )

மழை வரும்போது நபியவர்களின் மனோநிலை

 ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:மேகத்தையோ அல்லது (சூறாவளிக்)காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின்முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகைதென்படும். (ஒருநாள்) நான், 'அல்லாஹ்வின்தூதர்அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போதுஅது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணிமகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்களோமேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம்அடைக்கின்றீர்களே ஏன்?” என்று கேட்டேன்.அதற்கு நபி {ஸல்} அவர்கள்ஆயிஷாவே! அதில் (அல்லாஹ்வின்) வேதனைஇருக்கலாம் என்பதால் என்னால்கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்'எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால்வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார்(மேகமாக வந்த) அந்த வேதனையைப்பார்த்துவிட்டு, ”இது நமக்கு மழையைப்பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் எனபதிலளித்தார்கள்.( நூல்:முஸ்லிம் )

நபி(ஸல்) அவர்களின் கண்கள் மழையைக்காணும்போது அவர்களின் நாவு ﺻَﻴِّﺒًﺎﻧَﺎﻓِﻌًﺎ பிரார்த்திக்க ஆரம்பித்து விடும்

யாஅல்லாஹ்! இந்தமழையைப் பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!"என்று...( நூல்: புகாரி )

ஆனால், நாமோ இன்று மழை மேகத்தைகண்டுவிட்டால் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தமேகம் சுமந்து வருகிற மழை அல்லாஹ்வின்அருள் மழையா? அல்லது அல்லாஹ்வின்தண்டனைக்குரிய மழையா? என்றெல்லாம் நாம்கவலைப்படுவதில்லை. அதற்காகஅல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இல்லை.

இதுதான் இன்றைய நமது நிலை.ஆனால், அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்கள், முன்னர் வாழ்ந்த சமூகத்தார்அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில்கொண்டு கலக்கம் அடைகிறார்கள்.

மழையின் பாதிப்பிலிருந்து பாதுகாவல்தேட வேண்டும்...

.அனஸ் இப்னு மாலிக் (ரலி)அறிவிக்கின்றார்கள்: நபி(ஸல்) அவர்களின்காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம்வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள்சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருகிராமவாசி எழுந்து, ”அல்லாஹ்வின் தூதர்அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தைகுட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவேஎங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!என்று கூறினார்.நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டுகைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில்வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள்பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசம்உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நபி(ஸல்)அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாகமலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன.நபி(ஸல்)அவர்கள்மிம்பரிலிருந்துஇறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின்தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன்.அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும்அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆவரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறுஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லதுவேறொருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதர்அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.செல்வங்கள் மூழ்குகின்றன. கால்நடைகள்அழிகின்றன. எனவே எங்களுக்காகஅல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார்.நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளைஉயர்த்தி இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களைநோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக்கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!"என்று கூறினார்கள்.மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்)அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம்விலகிச் சென்றது.

 மதீனா நகர் பெரும் பள்ளமாகமாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடைஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்துவருபவர்களும் இம்மழையைப் பற்றிப்பேசாமலிருந்ததில்லை.         (நூல்:புகாரி)

அல்லாஹ் மனித சமூகத்திற்குவழங்கியிருக்கிற எந்த ஒரு அருட்கொடையும்மனிதசமூகத்திற்குகேடுவிளைவிக்கும் நோக்கில் படைக்கப்படவில்லை.அப்படி ஒரு அருட்கொடையைக் கொண்டுகேடு விளையுமானால் அதற்கு மனித சமூகமேமுழுமுதற் காரணமாகும் என்று அல்குர்ஆன்கூறுகின்றது.

                  ﻇَﻬَﺮَ ﺍﻟْﻔَﺴﺎﺩُ ﻓِﻲ ﺍﻟْﺒَﺮِّ ﻭَﺍﻟْﺒَﺤْﺮِ ﺑِﻤﺎ ﻛَﺴَﺒَﺖْﺃَﻳْﺪِﻱ ﺍﻟﻨَّﺎﺱِ“

          மனித சமூகம் தங்கள் கரங்களால்எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதன்காரணமாகவே தரையிலும் ( நிலத்திலும் )கடலிலும் அராஜகமும், குழப்பமும்தோன்றுகின்றன.                      ( அல்குர்ஆன்: 30: 41 )

 

இப்போது தமிழகத்தில் குறிப்பாகசென்னை மற்றும் கடலூரில் வெள்ள நீர் இன்னும்வடியாமல் தேங்கி நிற்கிறது என்றால் அதற்குகாரணம் நீர் செல்ல வேண்டிய பாதை தடைபட்டிருக்கின்றது.ஆம்! ஒரு காலத்தில் குளங்களாகவும்,ஏரிகளாகவும், கண்மாய்களாகவும் இருந்தவைகள்இன்று மக்களின் குடியிருப்புக்களாகமாறிவிட்டன.குடியிருப்புக்களை கட்டும் முன் மழைகாலத்தின் தண்ணீர் செல்வதற்கான பாதைகள்,ஓடைகள், வடிகால்கள், மழை நீர் சேகரிப்புதொட்டிகள் போன்றவற்றை அமைத்திருக்கவேண்டும்.மக்களும், அரசும் கண்டு கொள்ளாமல்இருந்ததனால் இன்று மிகப் பெரிய சேதாரத்திற்குமக்கள் ஆளாகி இருக்கின்றார்கள்.எப்படி சமாளிப்பது என மக்களோடுசேர்ந்து அரசும் அதிகாரிகளும் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

முழு முயற்சி வேண்டும்.மனித வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழவேண்டுமானாலும் கூட அதற்கு மனித முயற்சிமிகவும் அவசியம் என்கிறது அல்குர்ஆன்.

அல்லாஹ்வின் அற்புதத்தை வயிற்றில்சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மர்யம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் உணவளிக்கமுன்வந்த போது வெறுமெனே அதியசத்தைஉண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக,அதற்காக அவர்களுடைய முயற்சி எனும்பங்களிப்பைத் தரச் சொன்னான்.

ﻓَﺤَﻤَﻠَﺘْﻪُ ﻓَﺎﻧْﺘَﺒَﺬَﺕْ ﺑِﻪِ ﻣَﻜَﺎﻧًﺎ ﻗَﺼِﻴًّﺎ (22 )ﻓَﺄَﺟَﺎﺀَﻫَﺎ ﺍﻟْﻤَﺨَﺎﺽُ ﺇِﻟَﻰ ﺟِﺬْﻉِ ﺍﻟﻨَّﺨْﻠَﺔِ ﻗَﺎﻟَﺖْ ﻳَﺎ ﻟَﻴْﺘَﻨِﻲ ﻣِﺖُّﻗَﺒْﻞَ ﻫَﺬَﺍ ﻭَﻛُﻨْﺖُ ﻧَﺴْﻴًﺎ ﻣَﻨْﺴِﻴًّﺎ (23 ) ﻓَﻨَﺎﺩَﺍﻫَﺎ ﻣِﻦْﺗَﺤْﺘِﻬَﺎ ﺃَﻟَّﺎ ﺗَﺤْﺰَﻧِﻲ ﻗَﺪْ ﺟَﻌَﻞَ ﺭَﺑُّﻚِ ﺗَﺤْﺘَﻚِ ﺳَﺮِﻳًّﺎ (24)ﻭَﻫُﺰِّﻱ ﺇِﻟَﻴْﻚِ ﺑِﺠِﺬْﻉِ ﺍﻟﻨَّﺨْﻠَﺔِ ﺗُﺴَﺎﻗِﻂْ ﻋَﻠَﻴْﻚِ ﺭُﻃَﺒًﺎ ﺟَﻨِﻴًّﺎ(25 ) ﻓَﻜُﻠِﻲ ﻭَﺍﺷْﺮَﺑِﻲ ﻭَﻗَﺮِّﻱ ﻋَﻴْﻨًﺎ“

பின்னர், மர்யம் அக்குழந்தையைக்கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர்தொலைவான ஒர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சைமரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது.அப்போது, அவர்அந்தோ! நான் இதற்குமுன்னரே மரணமடைந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டுப் போயிருக்கக் கூடாதா?”என்று கூறலானார். அப்பொழுது, கீழே இருந்துஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்நீர்கவலைப் படாதீர்! உம் இறைவன் உமக்குக் கீழேஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.மேலும், பேரீச்சை மரத்தின்அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும், அதுஉம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களைஉதிர்க்கும். ஆக, நீர் புசித்தும் பருகியும் கண்குளிர்ந்திருப்பீராக!”.( அல்குர்ஆன்: 19: 22 – 26 )

மூஸா (அலை) அவர்களின் சமூகம்தண்ணீர் இன்றி தவித்த போது அல்லாஹ்விடம்மூஸா (அலை)பிரார்த்தித்தார்கள். அவர்களுக்குஅல்லாஹ் தண்ணீர் தர முன் வந்த போதுவெறுமெனே அதியசத்தை உண்டு பண்ணவிரும்பவில்லை. மாறாக, அதற்காகஅவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச்சொன்னான்.

ﻭَﺇِﺫِ ﺍﺳْﺘَﺴْﻘَﻰ ﻣُﻮﺳَﻰ ﻟِﻘَﻮْﻣِﻪِ ﻓَﻘُﻠْﻨَﺎ ﺍﺿْﺮِﺏْﺑِﻌَﺼَﺎﻙَ ﺍﻟْﺤَﺠَﺮَ ﻓَﺎﻧْﻔَﺠَﺮَﺕْ ﻣِﻨْﻪُ ﺍﺛْﻨَﺘَﺎ ﻋَﺸْﺮَﺓَ ﻋَﻴْﻨًﺎ”

இன்னும், மூஸா தம்சமூகத்தினருக்காக தண்ணீர் வேண்டிபிரார்த்தித்ததையும் நினைவு கூறுங்கள்.அப்போது உம்முடைய கைத்தடியைக் கொண்டுஇந்தக் கல்லின் மீது அடிப்பீராக! என்று நாம்கூறினோம். அவ்வாறு அவர் அடித்ததும்அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பொங்கிஎழுந்தன. ( 2: 60 )ﻓَﺄَﻭْﺣَﻴْﻨَﺎ ﺇِﻟَﻰ ﻣُﻮﺳَﻰ ﺃَﻥِ ﺍﺿْﺮِﺏْ ﺑِﻌَﺼَﺎﻙَ ﺍﻟْﺒَﺤْﺮَﻓَﺎﻧْﻔَﻠَﻖَ ﻓَﻜَﺎﻥَ ﻛُﻞُّ ﻓِﺮْﻕٍ ﻛَﺎﻟﻄَّﻮْﺩِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ (63)ﻭَﺃَﺯْﻟَﻔْﻨَﺎ ﺛَﻢَّ ﺍﻟْﺧَﺮِﻳﻦَ (64 ) ﻭَﺃَﻧْﺠَﻴْﻨَﺎ ﻣُﻮﺳَﻰ ﻭَﻣَﻦْ ﻣَﻌَﻪُﺃَﺟْﻤَﻌِﻴﻦَ (65)இது போன்றே ஃபிர்அவ்னின்பிடியிலிருந்து தப்பித்துச் சென்ற போது கடல் நீர்குறுக்கிடவே மூஸா (அலை) அவர்களைஅல்லாஹ் கைத்தடியைக் கொண்டு கடலில்அடிக்குமாறு கட்டளை பிறப்பித்தான். ( பார்க்க,அல்குர்ஆன்: 26: 60 66 )

ஆக, மனித வாழ்க்கையில் ஏற்படும்இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டுவெளியே வர வேண்டுமானால் முழுமையானமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைமேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

2. சரியான திட்டமிடல் வேண்டும்.மதீனாவை போர் மேகம் சூழ்ந்திருந்ததருணம் அது. எதிரிகள் மதீனாவிற்குள் நுழைந்துவிட்டால் உயிழப்புகளும், சேதங்களும் பன்மடங்குபெருகி விடும் அபாயகரமான சூழ்நிலை.ஆம்! ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷவ்வால்மாதம் 10000 பேர் கொண்ட பெரும் படை ஒன்றுமதீனாவைத் தாக்கி முஸ்லிம்களை கொன்றுகுவிக்க வேண்டும் என்கிற முனைப்போடுவருகின்றார்கள் என்கிற செய்தி தான் இதற்குகாரணம்.இதுவரை இல்லாத ஒரு வித பதற்றமும்,அச்ச உணர்வும் முஸ்லிம்களைஆட்கொண்டிருந்தது. ஏனெனில், இதுவரைஎதிரிகள் வெளியே இருந்து வந்தனர். ஆனால்,இப்போதோ எதிரிகளோடு கைகோர்த்திருப்பவர்கள்மதீனாவின் பூகோளத்தை முழுவதுமாக அறிந்துவைத்திருந்த மதீனாவின் யூதர்கள்.என்ன செய்வது? எப்படி போர்முனையைசமாளிப்பது? பெரும் சேதத்தை எப்படி தவிர்ப்பது?இப்படி நிறைய எப்படி பெருமானார் {ஸல்}அவர்களின் மின் கேள்விகள் தொக்கி நின்றது.அல்லாஹ்வும் இப்படி பதிவுசெய்திருப்பான்:

ﻫُﻨَﺎﻟِﻚَ ﺍﺑْﺘُﻠِﻲَ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﻭَﺯُﻟْﺰِﻟُﻮﺍ ﺯِﻟْﺰَﺍﻟًﺎﺷَﺪِﻳﺪًﺍ

அந்தக் கடினமான நேரத்தில்இறைநம்பிக்கையாளர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாகஅலைக்கழிக்கப்பட்டார்கள். ( அல்குர்ஆன்: 33:11 ) பரபரப்பான சூழ்நிலையில் அல்லாஹ்வின்தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களில்முக்கியமானவர்களை உடனடியாக மஸ்ஜிதுன்நபவீயில் ஒன்று கூடுமாறு ஆணைபிறப்பித்தார்கள்.மஸ்ஜிதுன் நபவீ அப்படியொருஅமைதியை அன்று வரை சந்தித்தது இல்லை.அமைதி என்றால் அப்படியொரு அமைதி. முக்கியநபித்தோழர்களெல்லாம் அண்ணலாரை சூழ்ந்துஅமர்ந்திருந்தனர்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நிலவிய அமைதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக தோழர்களே! நிலைமையை நீங்கள்மிகவும் அறிந்திருப்பீர்கள் என நான்கருதுகின்றேன்! நல்லதொரு ஆலோசனையைநல்குங்கள்! என்று பேச்சை ஆரம்பித்தார்கள்.நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக  தங்களின் அறிவினிற் சிறந்த ஆலோசனைகளைபெருமானார் {ஸல்} அவர்களிடம் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். மாநபி {ஸல்} அவர்களும்மிகவும் உன்னிப்பாக அவைகளை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஸல்மான் ஃபார்ஸி (ரலி)அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீகநாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்கவரும் போது எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக்கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்என்று கூறினார்கள்.இது நாள் வரை இப்படியானதொருதிட்டத்தை அறிந்தவர்களாக அரேபியர்கள்இல்லாததன் காரணமாக மாநபி {ஸல்} அவர்கள்அகழ் குறித்து முழுமையாகக் கேட்டு அறிந்துகொண்டு, அதை அங்கீகரித்து அதை நிறைவேற்ற40 முழம் அகழ் தோண்ட 10 பேர் கொண்ட ஒருகுழுவாக பல குழுக்களை நபி {ஸல்} அவர்கள்நியமித்து தாங்களும் பங்கேற்றார்கள்.இறுதியாக, அல்லாஹ் மபெரும்வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான்.பெரும் அழிவிலிருந்து, மிகப் பெரியசேதாரத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களைக்காத்துக் கொள்ள அகழ் பெரிதும் உதவியது

.ஹுனைன் யுத்தம் வெற்றியோடுமுடிக்கப்பட்டு எதிரிகள் புறமுதுகிட்டு ஓடியதருணம் அது. போரில் தோல்வி கண்ட எதிரிகள்மூன்று பிரிவினர்களாக ஓடினர்.ஒவ்வொரு பிரிவினரையும் பிடிக்கஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒருபடைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள்.அவ்தாஸை நோக்கி ஓடிய எதிரிகளைப்பிடிக்க அபூ ஆமிர் அஷ்அரீ (ரலி) அவர்களின்தலைமையில் ஒரு படைப்பிரிவையும், தாயிஃபைநோக்கி ஓடிய எதிரிகளைப் பிடிக்க காலித் பின்வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 1000 பேர்கொண்ட ஒரு படைப்பிரிவையும் அனுப்பிவைத்தார்கள்.தாயிஃபை நோக்கி ஓடிய எதிரிகள்அங்கிருந்த பெரும் கோட்டை ஒன்றில்அடைக்கலமானார்கள். ஒரு வார காலமாகியும்எதிரிகள் வெளியே வராததால் அல்லாஹ்வின்தூதர் {ஸல்} அவர்களும் அந்தப் படைப்பிரிவோடுதங்களை இணைத்துக் கொண்டார்கள்.

 பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்}அவர்கள் எதிரிகளை எப்படி வெளியே கொண்டுவருவது? என்பது குறித்து நபித்தோழர்களிடம்ஆலோசனை மேற்கொண்டார்கள்.அப்போது அங்கிருந்த ஸல்மான் ஃபார்ஸி(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்கள்நாட்டில் இது போன்ற தருணங்களில் எதிரிகளின்நிலை மீது கற்களை வீசித்தாக்கும் மின்ஞனீக் எனும் கருவியைப் பயன்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்து கோட்டைகளை விட்டும்வெளியேற்றுவோம் என்று ஆலோசனைவழங்கினார்கள்.அத்தோடு அதை உருவாக்கியும்கொடுத்தார்கள். சுமார் நாற்பது நாட்கள்முற்றுகைக்குப் பிறகு கோட்டையின் உள்ளேபதுங்கியிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப்கோத்திரத்தார்கள் வெளியே வந்து சரணடைந்தனர்.( ஸுபுலுல் ஹுதா வர் ரஷாத் லி இமாமிஅல் வாகிதீ, தாரீகில் ஃகமீஸ் )இது போர்காலங்களில் நடைபெற்றிருந்தாலும் கூட, பெரும் உயிரிழப்புகளும்,பொருட்சேதமும் தடுக்கப்பட வேண்டும் என்கிறமுனைப்பில் எங்கேயோ ஒரு நாட்டில்கையாளப்படுகிற பேரிடர் தடுப்புமேலாண்மையை அல்லாஹ்வின் தூதர் {ஸல்}அவர்கள் கையில் எடுத்து மிகச் சரியாகதிட்டமிட்டு இந்த உம்மத்தை பெரும்இழப்புகளிலிருந்து காப்பாற்றினார்கள் என்பதைமேற்கூறிய இரு நிகழ்வுகளும் நமக்குச்சுட்டிக்காட்டுகின்றன.

ஓர் இந்திய உதாரணம்இந்தியாவைக் காட்டிலும் பல மடங்குஅபாயமான புவிச்சூழலைக் கொண்டது ஜப்பான்.பேரிடர்களை எதிர்கொள்ளும் கல்விக்கு மிகச்சிறந்த வழி. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை என்றால், ஒடிஷாவிடமிருந்துநாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.தமிழகத்தைவிடப் பின்தங்கிய மாநிலம்.கோடையில் கடும் வறட்சியாலும்மழைக்காலத்தில் கடும் வெள்ளத்தாலும்பாதிக்கப்படும் மாநிலம். ஆனால், இரண்டுஆண்டுகளுக்கு முன் பாய்லின் புயலை அதுஎதிர்கொண்ட விதம் .நா.சபை உட்படஏராளமானோரின் பாராட்டுகளை ஒடிஷாவுக்குப்பெற்றுத் தந்தது.இன்றைக்கும் ஆச்சரியமூட்டும் பணிஅது. மிகக் கடுமையான புயலை ஒடிஷாஎதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலைஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கைவந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக்களத்தில் இறங்கிவிட்டார்.வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின்கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச்சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம்முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர்மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச்சென்றார். முப்படைகளின் உதவியும்உறுதிசெய்யப்பட்டது.தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம்கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல்தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன.ஊடகங்கள், சமூக வலைதளங்களில்தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின்பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைமக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டுநிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசுதுணை சேர்த்துக்கொண்டது.எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்புகடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ,அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும்பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன்தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர்வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்தகால்நடைகளும்.சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரியமக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது.லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள்தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்புமையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டிஇருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. 1999 புயல் பாதிப்புகளிலிருந்துகற்றுக்கொண்ட பாடம்.அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை,வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப்பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறதுஒடிஷா. ஆனால், மக்கள் துயரம்குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப்பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம்ஆகியிருக்கிறது.

 ஒடிஷா பேரிடர் மேலாண்மைமையம்.தமிழக நிலைதமிழகம் இம்முறை இன்னும் புயல்தாக்குதலுக்கு ஆளாகவில்லை.

இப்போதைய மழை தொடர்பானஎச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலைஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம்என்ன?தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை முன்பே இதைச்சுட்டிக்காட்டியது: இன்னொரு பேரிடர் நேர்ந்தால்,அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம்இல்லை

மக்கள் இங்குஉயிரிழப்புகளை அரசியலாகப் பார்க்கிறார்கள்.அரசியல்வாதிகள் இங்கு உயிரிழப்புகளைஇழப்பீடுகளாகப் பார்க்கிறார்கள்இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையும்அப்படித்தான், அவன் விழிப்புணர்வோடுசெயல்படுகிற போது வெற்றி பெற்றுவிடுகின்றான்.

ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரையில் அவனைச் சுவனத்து பூஞ்சோலையில்உலவ விடுவதும், நரகத்துப் படுகுழியில் தள்ளிவிடுவதும் விழிப்புணர்வை வாழ்வில் அவன்கையாளும் முறையைக் கொண்டு தான்அமைகிறது.

 

விழிப்புணர்வே வெற்றியாளனின்அடையாளம்..

ﻭَﻧَﻔْﺲٍ ﻭَﻣَﺎ ﺳَﻮَّﺍﻫَﺎ () ﻓَﺄَﻟْﻬَﻤَﻬَﺎ ﻓُﺠُﻮﺭَﻫَﺎﻭَﺗَﻘْﻮَﺍﻫَﺎ () ﻗَﺪْ ﺃَﻓْﻠَﺢَ ﻣَﻦْ ﺯَﻛَّﺎﻫَﺎ () ﻭَﻗَﺪْ ﺧَﺎﺏَ ﻣَﻦْﺩَﺳَّﺎﻫَﺎ ()“மனித ஆன்மாவின் மீதும் அதனைச்செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமையையும்தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில்வைத்தவன் மீது ஆணையாக! திண்ணமாக, (விழிப்புணர்வோடு செயல்பட்டு ) மனதைத்தூய்மைப் படுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான்.( விழிப்புணர்வின்றி செயல்பட்டு ) மனதைநசுக்கியவன் தோற்று விட்டான். ( அல்குர்ஆன்:91:7 10)

அலட்சியப்போக்கும்விழிப்புணர்வின்மையும்ﻭَﻟَﻘَﺪْ ﺫَﺭَﺃْﻧَﺎ ﻟِﺠَﻬَﻨَّﻢَ ﻛَﺜِﻴﺮًﺍ ﻣِﻦَ ﺍﻟْﺠِﻦِّ ﻭَﺍﻟْﺈِﻧْﺲِﻟَﻬُﻢْ ﻗُﻠُﻮﺏٌ ﻟَﺎ ﻳَﻔْﻘَﻬُﻮﻥَ ﺑِﻬَﺎ ﻭَﻟَﻬُﻢْ ﺃَﻋْﻴُﻦٌ ﻟَﺎ ﻳُﺒْﺼِﺮُﻭﻥَ ﺑِﻬَﺎﻭَﻟَﻬُﻢْ ﺫَﺍﻥٌ ﻟَﺎ ﻳَﺴْﻤَﻌُﻮﻥَ ِﻬَﺎ ﺃُﻭﻟَﺌِﻚَ ﻛَﺎﻟْﺄَﻧْﻌَﺎﻡِ ﺑَﻞْ ﻫُﻢْﺃَﺿَﻞُّ ﺃُﻭﻟَﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻐَﺎﻓِﻠُﻮﻥَ ()”ஜின் மற்றும் மனிதவர்க்கத்தில்பெரும்பாலோரை நரகத்திற்காகவேபடைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள்இருக்கின்றன. ஆயினும், அவற்றால் அவர்கள்சிந்தித்துணர்வதில்லை. அவர்களுக்குக் கண்கள்இருக்கின்றன. ஆயினும், அவர்கள் அவற்றால்பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள்இருக்கின்றன. ஆயினும் அவர்கள் அவற்றால்கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப்போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள்கீழானவர்கள்! அவர்கள் தான் அலட்சியத்தில்மூழ்கியிருப்பவர்கள். ( அல்குர்ஆன்: 7:179 )

ஆகவே, பாவங்கள் தான் காரணம்,அல்லாஹ் தான் இத்தகைய தண்டனைகளைத்தருகின்றான் என்று சொல்லி அல்லாஹ்வின் மீதுகுற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு, நம்முடையமனிதத்தவறுகள் தான் இது போன்றஅழிவுகளுக்கு காரணம் என்பதை மனதிற்கொண்டு கடந்த கால நிகழ்வினிலிருந்து பாடம்பெறுவோம்! நிகழ் காலத்தில் திட்டமிடத்தொடங்குவோம்! எதிர்காலத் தலைமுறையினரைபேரிடர்களிலிருந்து காப்போம்!மழை செய்த பிழையல்ல! மனிதசமூகமே நாம் செய்த பிழைகள் தாம் இவை!எனவே விழிப்புணர்வு பெறுவோம்!அல்லாஹ் நம் அனைவருக்கும்விழிப்புணர்வுடன் செயல்படும் ஆற்றலைத்தருவானாக!ஆமீன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001