மலக்குகளின் துஆவைப் பெற….

 

 இறைவனின் படைப்புகளில் மிக அற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதாம் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும், சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறு செய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறு செய்யவே தெரியாதவர்கள்.

திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப் பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள் என வர்ணிக்கின்றான்.  இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும்.

மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா? அவர்களின் துஆவில் நாம் இடம் பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே. ஏனெனில் இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே மலக்குகள் துஆ செய்வார்கள். தாமாக துஆ செய்ய மாட்டார்கள்.

நாம் பிறரிடம் துஆ செய்ய வேண்டிக்கொள்கிறோம். ஆனால் அதை விட ஒரு படி மேலாக மலக்குமார்களிடம் துஆசெய்ய சொன்னால் என்ன? நமக்காக துஆ செய்யும்படி மலக்குமார்களிடம் நேரிடையாக கூற முடியுமா? முடியாதுதான். ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் சில வழி முறைகளை கூறி இவற்றை செய்பவர் மலக்குமார்களின் துஆவை பெறுபவர் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட‌ மலக்குகளின் துஆவை பெறும் அந்த பாக்கியவான்கள் யார்? யார்? என்று  இன்றைய ஜுமுஆவுடைய பேருரையில் தெரிந்து கொள்வோமா?.

ü 1.முதல் ஸ‌ஃப்ஃபில் நின்று தொழுது மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصَّفِّ الْمُقَدَّمِ،

நிச்சயமாக அல்லாஹ் முதல் [ஸ‌ஃப்ஃபில்] வரிசையில் இருப்போரின் மீது [ரஹ்மத்]  அருள் மாரி பொழிகிறான். மலக்குகள், அவர்களுக்கு ரஹ்மத்துக்காக துஆச்செய்கின்றனர்.  (நஸயீ)

பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், வரிசையில் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை சென்று எங்களது நெஞ்சங்கள், தோள்களைத் தமது திருக்கரத்தால் தடவியவாறு ஸஃப்புகளைச் சரிசெய்வார்கள். மேலும் (வரிசைகளில்) முன், பின், ஆகிவிடாதீர்கள், வரிசை சீராகவில்லையெனில் உங்களது உள்ளங்களில் ஒருவர் மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடும், முன் வரிசைகளில் இருப்போரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான், அவர்களுக்காக மலக்குகள் பாவ மன்னிப்பு வேண்டி துஆச் செய்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (அபூதாவூத்)

 

 

Ø இரண்டாம் ஸ‌ஃப்ஃபில் நின்று தொழுது மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

அல்லாஹ் முதல் வரிசையில் நிற்போரின் மீது [ரஹ்மத்] அருள் புரிகிறான், அவனது மலக்குகள் அவர்களுக்காக ரஹ்மத் கிடைக்க துஆச் செய்கின்றனர் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! இரண்டாம் வரிசையில் நிற்பவர்களுக்கும் இந்தச் சிறப்பு உண்டா? என்று ஸஹாபாக்கள் வினவினர். முதல் வரிசையினர் மீது அல்லாஹ் ரஹ்மத்தைப் பொழிகிறான், அவனது மலக்குகள் அவர்களுக்காக ரஹ்மத்துக்கு துஆச் செய்கின்றனர் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹாபாக்கள் (மீண்டும்) யாரஸூலல்லாஹ், இரண்டாம் வரிசையில் இருப்போருக்கும் இந்தச் சிறப்பு கிடைக்குமா? என்று கேட்டனர். இரண்டாம் வரிசையில் இருப்போருக்கும் இச்சிறப்பு உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் உங்கள் வரிசைகளை நேராக ஆக்கிக்கொள்ளுங்கள், தோள்களோடு தோள்களை நேராக்கிக் கொள்ளுங்கள், வரிசைகளைச் சீர் செய்யும் காரியத்தில் உங்கள் சகோதரர்களுக்காக மென்மையாக ஆகுங்கள், வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புங்கள், காரணம் (வரிசைகளின் இடைவெளியில்) செம்மறி ஆட்டுக் குட்டியைப் போல் ஷைத்தான் நுழைந்துவிடுவான்”  (முஸ்னத் அஹ்மத்]

Ø 2.வரிசைகளிலுள்ள காலியிடங்களை நிரப்பிமலக்குகளின் துஆவை பெறுவோம்.

عَنْ عَائِشَةَ ؓ عَنْ رَسُولُ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ. رواه الحاكم

வரிசைகளிலுள்ள காலியிடங்களை நிரப்புவோர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான்,மலக்குகள்அவர்களதுபாவமன்னிப்புக்கு செய்கின்றனர் 

(முஸ்தக்ரக் ஹாகிம்)

Ø 3.ஒரு தொழுகைக்குப் பிறகு மறுதொழுகைக்காக காத்திருப்பதின் மூலம் மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள். 

உங்களுடைய பாவங்களை அழித்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் ஒரு செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது யாரஸூலல்லாஹ், அவசியம் அறிவித்துத் தாருங்கள்! என்று ஸஹாபாக்கள் வேண்டினார்கள். மனம் விரும்பாத பொழுது (குளிர் காலத்தில்) நல்ல முறையில் உளூச் செய்வது, பள்ளியை நோக்கி அதிகமாக நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பிறகு மறுதொழுகைக்காக காத்திருப்பது, எவர் தமது வீட்டில் உளூச் செய்து பள்ளிக்குச் சென்று முஸ்லிம்களுடன் ஜமாஅத்தாகத் தொழுதுவிட்டு, அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பாரோ அவருக்காக மலக்குகள், யா அல்லாஹ், அவரை மன்னிப்பாயாக! யா அல்லாஹ், அவர் மீது அருள் புரிவாயாக! என்று துஆச் செய்கின்றனர் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான்)

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَادَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالْمَلاَئِكَةُ تَقُولُ: اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، مَالَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ. رواه البخاري

உங்களில் ஒருவர் தொழுகைக்காக எதிர்பார்த்திருக்கும் வரை அவர் தொழுகையின் நன்மையைப் பெற்றுக் கொண்டிருப்பார், மலக்குகள் அவருக்காக யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக, இவர் மீது அருள் புரிவாயாக! என்று துஆச் செய்து கொண்டிருப்பார்கள், (தொழுகைக்குப் பிறகும்) தொழுத இடத்தில் உளூவுடன் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், மலக்குகள் அவருக்காக இதே துஆவை செய்து கொண்டிருக்கின்றனர்  (புகாரி)

Ø 4.தொழுகையில் ஆமீன் கூறுவதின் மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا قَالَ أَحَدُكُمْ: آمِينَ، وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ: آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا اْلأُخْرَي، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. رواه البخاري  

 உங்களில் ஒருவர் சூரத்துல் பாத்திஹாவின் முடிவில் ஆமீன் கூறினால் விண்ணிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், எவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுடன் ஒன்று சேர்ந்துவிடுமோ அவரது முந்தைய பாவங்கள்யாவும் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)

Ø 5. தர்மம் செய்பவதின் மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ் விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறு வார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்நூல்புகாரி-1442                         தர்மம் செய்பவர்கூட, தான் தர்மம் செய்த பிறகு இப்படியொரு துஆவை செய்திருக்க மாட்டார். அப்படியொரு கருத்தாழமிக்க துஆவை மலக்குகள் தினம் தினம் செய்கிறார்கள்.மலக்குமார்களின் துஆவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தர்மம் செய்பவர் மிகமிக குறைவு என்றே கூற வேண்டும்.

Ø 6.தொழுத இடத்தில் அமருவதின் மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கரு தப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத் தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்க சுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்று பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.நூல்புகாரி-477 

Ø 7.பிறருக்காக‌ துஆ செய்வதின்  மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

ஒருவர்,கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்! என்று கூறுகிறார். [முஸ்லிம்-5280]

Ø 8.நபியின் மீது ஸலவாத் சொல்வதின் மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனேனில், பூமியில் யாரேனும் ஒரு முஸ்லிம் தங்கள் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால் நான்அவர்மீதுபத்துரஹ்மத்களைப்பொழிவேன்.மேலும்என்னுடைய         மலக்குகள் அவருக்காகப் பத்து முறை பாவமன்னிப்புத் தேடுகின்றனர்” என்ற செய்தியைச் சற்று முன்புதான் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலா விடமிருந்து கொண்டு வந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானீ, தர்ஙீப்)

Ø 9.நோன்பாளிக்கு முன்பு உணவுஉண்ணப்படும்போது  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

கஅப் (ரலி) அவர்களின் மகள் உம்மு உமாரா அன்ஸாரிய்யா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அன்னாரின் சமுகத்தில் உணவு கொண்டு வந்து வைத்தார்கள். நீரும் உண்பீராக! என நபி (ஸல்) அவர்கள் கூற, நான் நோன்பு வைத்துள்ளேன் என்று அவ்வம்மையார் கூறினார். நோன்பாளிக்கு முன்பு உணவு உண்ணப்படும் போது உண்பவர் உண்டு முடிக்கும் வரை மலக்குகள் அந்த நோன்பாளிக்கு அருள் வேண்டி துஆச் செய்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு உமாரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

Ø 10.நோயாளியை நலம் விசாரிப்பதின்  மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

எவர் முஸ்லிம் மற்றோரு முஸ்லிமைக் காலையில் நலன் விசாரிக்கச் செல்வாரோ மாலைவரைஎழுபதாயிரம்மலக்குகள்,அவருக்காக துஆச் செய்துகொண்டிருப்பர். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்துகொண்டு இருப்பர். மேலும் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும்” (திர்மிதீ)

Ø 11.மவ்த்தானவர்களின் வீட்டில் / ஜனாஸா முன்பாக நல்லவைகளை பேசுவதின் மூலம்  மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஹஜ்ரத் அபூஸலமா (ரலி) அவர்கள் மரணித்த சமயம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அச்சமயம் அபூஸலமா (ரலி) அவர்களின் கண்கள் திறந்த நிலையில் இருந்தன, அன்னாரின் கண்களை நபி (ஸல்) அவர்கள் மூடினார்கள், உயிர் கைப்பற்றப்படும் போது பிரிந்து செல்லக் கூடிய அந்த உயிரைப் பார்த்த வண்ணம் இருப்பதால் கண்களும் மேல் நோக்கித் திறந்தவாறு இருந்துவிடுகின்றன என்று கூறினார்கள், (இதனால் தான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அன்னாரின் கண்களை மூடினார்கள்) அச்சமயம் அவரது வீட்டாரில் சிலர் சப்தமிட்டு அழ ஆரம்பித்தார்கள் (சொல்லக் கூடாத வார்த்தைகளும் கூறியிருக்கலாம்). நீங்கள் உங்களுக்காக நன்மையான துஆக்களையே கேளுங்கள், ஏனேனில், மலக்குகள் உங்களுடைய துஆவுக்கு ஆமீன் கூறுகின்றனர் என்று சொல்லியபின், நபி (ஸல்) அவர்கள்

(اَللّهُمَّ! اغْفِرْ لِاَبِيْ سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْلَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ! وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ)

யா அல்லாஹ், அபூஸலமாவின் பாவத்தை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடைய கூட்டத்தில் அவரைச் சேர்த்து அவருடைய பதவியை உயர்த்துவாயாக!  (முஸ்லிம்)

 

 

 

 

 

இதுதவிரநம்முடையநன்மையானசெயல்களில்மலக்குகளில்

தொடர்பானதகவல்கள்

Ø ஜுமுஆ தொழுகைக்கு முதலில் வருவதின் மூலம் மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

ஜும்ஆ நாள் வந்துவிட்டால் மலக்குகள் பள்ளியின் வாசலில் நின்று கொள்கிறார்கள், முதலில் வருவோரின் பெயரை முதலிலும், அடுத்து வருவோரின் பெயரை அடுத்தும் எழுதுகிறார்கள் (இவ்வாறே வருவோரின் பெயர்களை வரிசைக் கிரமமாக எழுதுகின்றனர்). ஜும்ஆத் தொழுகைக்காக அதிகாலையில் வருபவருக்கு ஒட்டகம் தருமம் செய்த நன்மையும், அடுத்து வருபவருக்கு மாடு தருமம் செய்த நன்மையும், அதற்குப் பிறகு வருபவருக்கு ஆடு, அதையடுத்து வருபவருக்கு கோழி, அதையடுத்து வருபவருக்கு முட்டை தருமம் செய்த நன்மையும் கிடைக்கிறது. இமாம் குத்பா ஓத வந்ததும் மலக்குகள் வருவோரின் பெயர்களை எழுதிய பதிவேட்டை சுருட்டி வைத்துவிட்டு குத்பாவை கேட்பதில் ஈடுபட்டுவிடுகின்றனர்” (புகாரி)  

Ø .திக்ருகளை செய்வதின்  மூலம் மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தாரை மலக்குகள் சூழ்ந்து கொள்கின்றனர். ரஹ்மத் அவர்களை மூடிக் கொள்கிறது. ஸகீனா அவர்கள் மீது இறங்குகிறது. மேலும் அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி மலக்குகளின் சபையில் நினைவுகூர்கிறான்”  (முஸ்லிம்)

ஒரு நாள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம், நபி (ஸல்) அவர்கள் ருகூ செய்துவிட்டுத் தலையை உயர்த்தி (سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَهُ) என்று சொன்னதும், ஒருவர் (رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّباً مُبَارَكاً فِيهِ) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், இக்கலிமாக்களைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள், நான் கூறினேன் என்று அவர் சொன்னார், முப்பதுக்கும் அதிகமான மலக்குகள் ஒவ்வொருவரும் இக்கலிமாக்களின் நன்மைகளை முதலில் யார் எழுதுவது என்று போட்டியிடுவதை நான் கண்டேன் (புகாரி)

Ø .மார்க்கக் கல்வியை கற்பதின் மூலம் மலக்குகளின் துஆவை பெறுவோம்:-

ஹஜ்ரத் ஸஃப்வானிப்னு அஸ்ஸால் முராதீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தேன், நபி (ஸல்) சிவப்புக் கோடுகளிட்ட போர்வையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். யாரஸூலல்லாஹ், நான் இல்மைக் கற்க வந்துள்ளேன் என்றேன். கல்வி கற்க வந்தவரின் வருகை நல்வரவாகட்டும்! கல்வி கற்பவரை மலக்குகள் தங்கள் இறக்கைகளால் மூடிக் கொள்கின்றனர். வானம் வரை எட்டும் அளவு ஒருவர் மீது ஒருவர் ஏறி அடுக்கடுக்காய் ஒன்று சேர்கின்றனர். இவர் கற்கின்ற (மார்க்கக்) கல்வியின் மீதுள்ள நேசத்தால் இவ்வாறு செய்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [நஸாயி] 

ஆக‌ ஈருலகிலும் மலக்குகளின் துஆவைப் பெற்று  வாழ வல்ல நாயகன் அருள்புரிவானாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001